ஒய்வுபெற்ற பின் உங்கள் வருமானத்தை உயர்த்தும் சிறந்த வழிகள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்க சிறந்த காலமாகும். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். நாம் இனிமேல் வேலை எதுவும் செய்யாதபோது போதுமான அளவு வருமானத்தை பெறும் வழிகளை நமக்கு நாமே அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு பெற்றிருக்கும் காலத்தில் உங்களுக்கு இன்னும் மிக அதிகமான வருமானத்தின் தேவை பெரும்பாலும் நிகழக்கூடும். வருமானம் போதாமல் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உங்கள் வங்கிப் பணயிருப்பை உயர்த்தவும் கூட உங்களுக்கு நிறைய விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற காலத்தில் உங்கள் வருமானத்தை உயர்த்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1. உங்களுக்கு சேர வேண்டியதை பெறுங்கள்.

மூத்த குடிமக்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரும் வீச்சளவில் வருமானங்களும் அனுகூலங்களும் கிடைக்கப்பெறுகின்றன. நிறைய முதலீட்டுத் திட்டங்களில் அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த சலுகையால் கிடைக்கும் நன்மைப் பயன்கள் உங்களுக்கு கிடைக்கப் பெறுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

2. ஒரு பகுதி நேர வேலையை பெறுங்கள்.

ஓய்வுபெறுதல் என்பது உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம் அல்ல. நீங்கள் முழுமையாக வேலை செய்வதை நிறுத்தி விடவேண்டும் என்று தேவையில்லை. உங்கள் பகுதிநேர வேலையிலிருந்து வரும் வருமானம் நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய நிதி சேகரிப்பதில் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

உங்கள் மனதிற்கு பிடித்தமான பொழுதுபோக்கு விருப்ப வேலைகளான தோட்ட வேலை, கைவேலைப்பாடுகள், விவசாயம், பண்ணைத் தொழில், சமையல் போன்றவற்றை வருமானம் ஈட்டித் தரும் பகுதிநேர வேலையாக மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வுகாலத்தில் ஏற்படும் மனச்சலிப்பைத் தவிர்க்கலாம்.

 

3. ஆயுள் காப்பீட்டு ஆவணத்திற்கு மாறாக கடன் பெறுதல்.

உங்களிடம் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இருந்தால், உங்கள் ஆயுள் காப்பீட்டு ஆவணத்திற்கு எதிராக நீங்கள் அதிலிருந்து கடன் பெறலாம். இந்த முறையானது முழு ஆயுள் அல்லது உலகளாவிய பொதுவான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் போன்ற நிரந்தர காப்பீட்டு ஆவணங்களாக இருந்தால் மட்டுமே வேலை செய்யும். நீள் கால எல்லைக் காப்பீட்டில் இந்த தேர்வு நமக்குக் கிடைக்கப் பெறாது. உங்களைச் சார்ந்திருப்பவர்கள் யாரும் இல்லையென்றால் அல்லது உங்கள் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவிட்டிருந்தால், இது உங்களுக்கான சிறந்த தெரிவாகும்.

4. உங்கள் ஓய்வூதிய மதிப்பை உயர்த்துங்கள்.

மாநில ஓய்வூதிய உரிமை பெற்றவர்கள் அரசாங்கத்தின் இந்த புதிய முனைமத்தின் வாயிலாக அவர்களது வாராந்திர கட்டணங்களை உயர்த்திக் கொள்ளலாம். இதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், இந்த மதிப்புயர்வை வாங்க நீங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு பெரியளவு தொகையை வைத்திருக்க வேண்டியது தேவையாகும். நீங்கள் செலுத்தும் தொகையானது, உங்களுக்கு எவ்வளவு கூடுதல் வருமானம் வேண்டும் மற்றும் நீங்கள் பங்களிப்பை செய்யும் போது எவ்வளவு வயதானவர் என்பதைச் சார்ந்தது.

5. உங்கள் வீட்டைக் குறையுங்கள்.

நீங்கள் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தால் உங்கள் வீட்டை குறைப்பது பற்றி யோசிப்பது மற்றொரு தேர்வாகும். நீங்கள் வாழ்வதற்கு ஒரு மலிவான சிறியதான சொத்தை நீங்கள் வாங்கலாம். அது பராமரிப்பதற்கும் மலிவானதாக இருக்கும். கூடுதல் பணத்தை நீங்கள் உங்களடைய இதர தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் கூட உங்களுடைய பெரிய குடும்ப வீட்டில் வாழ்வதைத் தொடர்ந்தால், உங்களிடம் நிறைய இடம் மற்றும் காலியான படுக்கையறைகள் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டின் அறைகலன்களுடன் கூடிய ஒரு அறையை வாடகைக்கு விடலாம். இது ஒரு வழக்கமான வருமான ஆதாரத்தை உங்களுக்கு வழங்கும்.

6. வாகன நிறுத்த இடத்தை வாடகைக்கு விடுங்கள்.

உங்கள் வீட்டின் உபரியாக உள்ள வாகன நிறுத்த இடத்தை வாடகைக்கு விடுவதும் பரிசீலிக்கத்தக்கது. இப்போதெல்லாம் வாகன நிறுத்துமிடத்திற்கான பற்றாக்குறை அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சார்ந்து, அலுவலக பகுதி, உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம், காபி கடை போன்ற இடங்கள் பலவற்றிற்கு அருகில் இருந்தால், உங்கள் வீட்டின் வாகன நிறுத்த வழிப் பாதையை வாடகைக்கு விடுவதன் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Boost Your Income In Retirement?

How To Boost Your Income In Retirement? - Tamil goodreturns
Story first published: Sunday, March 26, 2017, 14:46 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns