சர்ச்சைக்குரிய “நிதி மசோதா 2017”.. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அன்மையில் மக்களவையில் கையெழுத்திடப்பட்ட நிதி மசோதா 2017-ல் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதே நேரம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கொண்டு வந்துள்ள நிதி மசோதா 2017 மீது பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை ஆர்.எஸ்.பி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தளம் கட்சிகள் கடுமையாக எதிர்த்தும் வருகின்றன. மேலும் எதிர்கட்சிகள் இந்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வருவது பாராளுமன்ற விதிமுறைக்கு எதிரானது என்றும் முழக்கங்கள் எழுப்பி வருகின்றன.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்தத் திட்டம் குறித்து விவாதத்தின் போது அருண் ஜெட்லி இது உடனடியாக அமலுக்கு வரும், திருத்தங்கள் இல்லாமல் இந்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளத் தக்கது தான் என்றும் நியாயப்படுத்திப் பேசினார்.

எதிகட்சிகளின் இந்த எதிர்ப்பை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒதுக்கிவிட்டு வரி விதிப்பு இல்லாத திட்டங்களையும் நிதி மசோதாவில் சேர்க்க அனுமதி அளித்தார்.

உடனடியாகத் திட்டங்கள் அமல்படுத்தப்படலாம் என்றும் அதற்குத் தான் விதி 219 உள்ளது என்றும் வரிவிதிப்பு இல்லாத திட்டங்களைச் சேர்க்க கூடாது என்று சட்டம் ஏதும் இல்லை என்றும் என்.கே. பிரேமச்சந்திரன் எழுப்பிய எதிர்ப்புக்கு விளக்கம் அளித்துச் சுமித்ரா மகாஜன் எதிர் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.

இப்படிப் பல சர்ச்சைகளுக்கு உள்ளான "நிதி மசோதா 2017" என்னவெல்லாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன என்று இங்குப் பார்ப்போம்.

நிதி மசோதா 2017

நிதி மசோதா 2017 பல புதிய சட்டங்களுடன் மார்ச் 22 ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கப்பட்ட முக்கியமான ஒரு சட்டம்

இந்தப் புதிய சட்டத்தில் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்ட சட்டம் என்னவென்றால் வருமான வரித் துறையினர் ஒரு வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

நம்பக்கூடிய காரணங்கள்

பிரிவு 132, வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் வருமான வரி துறையினர் சோதனை நடத்தும் போது அவர்கள் கேட்கும் கேள்விக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். இதனைச் சோதனை நடத்தும் அதிகாரி நம்ப வேண்டும் இல்லை என்றால் அந்தச் சொத்துக்கள் பரிமுதல் செய்யப்படும்.

சொத்து பரிமுதல்

நிதி மசோதா 2017-ன் கீழ் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தும் போது சொத்துக்கள் பற்றிக் கேள்வி கேட்கப்படும் போது தற்காலிகமாகப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு.

அறப்பணி நிகழ்ச்சி

அரசு சாரா நிறுவனங்கள் செய்யும் அறப்பணி நிகழ்ச்சியின் போதும் வருமான வரித்துறைக்குச் சந்தேகம் உள்ளது என்றால் அங்கேயே சோதனை நடத்தப்படும். அப்போது கேட்கப்படும் கேள்விக்கும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார்

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம். மேலும் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும். இல்லை என்றால் 2017 ஜூலை 1-ம் தேதிக்கும் பிறகு வருமான வரி செலுத்த முடியாது, டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பான் கார்டு செல்லாது.

தேர்தல் பத்திரங்கள்

நிதி மசோதா 2017-ன் படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கத் தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தலாம்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு வரம்பு ஏதும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் கட்சி நிதியாக அளிக்கலாம்.

பணப் பரிவர்த்தனை வரம்பு

3 லட்சம் ரூபாயாக இருந்த பணப் பரிவர்த்தனை வரம்பு 2 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்படும்.

அரசிதழ்

மசோதா படி மத்திய அரசு, அரசிதழ் அறிவிப்பு மூலம் நீதிமன்றங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Bill, 2017: All you need to know about the controversial bill

Finance Bill, 2017: All you need to know about the controversial bill
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns