ரூ.246 கோடி 'கருப்பு பணம்'.. வருமான வரி துறையிடம் சிக்கிய நாமக்கல் மாவட்ட தொழிலதிபர்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் புதைந்து கிடக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் பிரதமர் மோடி தூக்கியுள்ள போர் கொடியின் முதல் அறிவிப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். இதனால் வர்த்தக உலகமே ஆடிப்போனது நாம் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடமிருந்த 246 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளார்.

வருமான வரித்துறை

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய்த் தடைசெய்யப்பட்ட அறிவிப்பு வெளியான 15 நாட்களில் இந்த ஆசாமி தன்னிடம் இருந்த அதிகப்படியான கருப்புப் பணத்தை வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

இதன் பின் வருமான வரித்துறை இவரைத் தீவிரமாகக் கண்காணித்தது. முதலில் தன்னிடம் இருக்கும் கருப்புப் பணத்தை மறைக்க நினைத்தவர். மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் தான் கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருந்த பணத்தை ஒப்படைக்கச் சம்மதம் தெரிவித்தார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

மத்திய அரசின் திட்டம்

கருப்புப் பணம் அதாவது கணக்கில் காட்டப்படாத பணத்தை 45 சதவீத வரியாக ஒப்படைக்கவும், இதன் மூலம் எவ்விதமான வழக்கம், தண்டனையும் பெறப்படாது என மத்திய அரசு இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்கும் முயற்சியில் Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) என்ற சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தில் தான் தற்போது திருச்செங்கோடு தொழிலதிபர் இணைந்துள்ளார்.

 

200 பேர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மத்திய அரசின் இச்சிறப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 31

PMGKY திட்டத்தின் இணைய வரும்புவோருக்கு கடைசி நாள் மார்ச் 31. தற்போதைய நிலையில் இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பணத்தில் அளவு 1,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், இத்திட்டத்தில் சேராதவர்கள் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையின் சூட்டை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து உணர்வார்கள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதிரடி வேட்டை

இதன் மூலம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வருமான வரித்துறையின் அதிரடி வேட்டைத் துவங்கும்.

வசதிகள்

மேலும் PMGKY திட்டத்தில் சேர வரும்புவோர் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை, பணமாகவோ, காசோலை, டிடி, அல்லது மின்னணு முறையில் கூட வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கலாம்.

இதற்கான வரியையும் எந்த முறையில் வேண்டுமானாலும் செலுத்தலாம்.

 

வரியும்.. வைப்பும்..

இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் பணத்தில் 50 சதவீதம் வரியாகவும், 25 சதவீத தொகையை ரிசர்வ் வங்கியிடம் 4 வருட வைப்பாக வைக்கப்படும். மீதமுள்ள தொகையைக் கணக்காளரே பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவே PMGKY திட்டத்தின் கட்டுப்பாடுகள்.

ஆனால்......

இத்திட்டத்தில் வரி ஏய்ப்பு, கிரிமினல் செயல்களில் மூலம் பெற்ற பணத்தை ஏற்கப்படமாட்டாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

டிசம்பர் 2016

பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 2016க்குள் இந்தியாவில் 2,600 கோடி ரூபாய் கருப்புப் பணம், 300 வழக்குகளில் 393 கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசு கைப்பற்றியுள்ளது.

குஜராத் வியாபாரி... வதந்தி...

மோடி 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்த பின் சில நாட்களில் குஜராத் வைர வியாபாரி ஒரு தன்னிடம் இருந்த 6000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்ததாக வசந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Namakkal businessman deposited 246 crore Black money on PMGKY schme

Namakkal businessman deposited 246 crore Black money on PMGKY schme
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns