பிளிப்கார்ட்-இன் ஜாதகத்தை கரைத்து குடித்த தமிழன்..! யார்யா இவரு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆம்பூர் ஐயப்பா 2009ம் ஆண்டில் தனது வேலையை இழக்கவில்லை எனில், அவரால் இன்று ஒரு கோடீசுவரராக வளர்ந்து இருக்க இயலாது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 2009 ல் அவருடைய அந்தத் துரதிர்ஷ்டமான தினத்தில் ஆம்பூர் ஐயப்பாவிற்குப் பணி வழங்காமல் இருந்திருந்தால், அந்த நிறுவனத்தின் வருங்காலம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை எவராலும் கனிக்க இயலாது.

வாழ்க்கை தன்னுடைய இருண்ட பக்கங்களில், எத்தனையோ ரகசியங்களைப் புதைத்து வைத்துள்ளது. அந்த ரகசியத்தின் அர்த்தம், காலச் சக்கரம் மெதுவாகச் சுழலும் பொழுது வெளிப்படுகின்றது. அத்தகைய ரசசியத்தின் ஒரு பக்கம்தான் ஆம்பூர் ஐயப்பாவின் வாழ்க்கை.

ஐயப்பா என்கிற மனிதன் மற்றும் ஃப்ளிப்கார்ட் என்கிற ஸ்டார்டஅப் நிறுவனத்தைப் பார்த்து 2009ம் ஆண்டு விதி மெதுவாகச் சிரித்தது. அந்தப் புன்னகை இருவருடைய வாழ்விலும் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

பிளிப்கார்ட்
 

பிளிப்கார்ட்

2007 ல், ஃப்ளிப்கார்ட் என்கிற நிறுவனம் சச்சின் பன்சால், மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் நிறுவப்பட்டது. இது முதன் முதலில் ஆன்லைன் புத்தகம் விற்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. இதனுடைய முதல் அலுவலகம் பெங்களூரின் புற நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னுடைய முதல் ஆர்டரை, வி வி கே சந்திரா, மகபூப்நகர் என்கிற வாடிக்கையாளரிடம் இருந்து 2007 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெற்றது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆர்டருக்குப் பின்னர் . ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஆர்டர்கள் மள மள வென்று அதிகரித்தது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்து, அந்த நிறுவனம் ஒரு நாளைக்குள நூற்றுக் கணக்கான ஆர்டர்களைப் பெறத் தொடங்கியது. அந்தச் சமயத்தில், நிறுவனத்தின் நிறுவனர்கள். திருச் சச்சின் மற்றும் பின்னி, தங்களுக்கு உதவ ஒரு ஆள் தேவையென்று உணர்ந்தனர். அதைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடமும் தெரிவித்தனர்.

ஒப்பந்தத்தில் இருந்த கொரியர் நிறுவனம்

ஒப்பந்தத்தில் இருந்த கொரியர் நிறுவனம்

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தத்தில் இருந்த கொரியர் நிறுவனம் பர்ஸ்ட் ப்ளைட் ஆகும். அந்த நிறுவனத்திற்குப் பெங்களூருவில் ஒரு அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தில், டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஒருவர், திருச் சச்சின் மற்றும் பின்னியிடம், ஐயப்பனைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும் அவர், திரு ஐயப்பன், தற்சமயம் வேலை இல்லாமல் இருப்பதாகவும், அவர் ஒரு நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

யார் இந்த ஆம்பூர் ஐயப்பா?
 

யார் இந்த ஆம்பூர் ஐயப்பா?

"நான் நான்கு ஆண்டுகள் பர்ஸ்ட் ப்ளைட் கொரியர் நிறுவனத்தில் இருந்தேன்", என ஐயப்பன் நினைவு கூறுகின்றார். அவர் அப்பொழுது மடிவாலாவில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில், ஒரு முக்கிய வரவு செலவு கணக்கு மேலாளராகப் பணியாற்றினார். ஐயப்பனுக்குத் தமிழ்நாட்டில், வேலுர் மாவட்டத்தில் உள்ள பிரியாணிக்கு மிகவும் புகழ் பெற்ற ஆம்பூர் என்கிற நகர்ந்தான் பூர்வீகமாகும். அவர் பெங்களூருவில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஓசூரில், புகழ் பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்.

அவர் தன்னுடைய எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றக் கல்விக்கு முக்கிய இடம் உண்டு என்பதை உணர்ந்து, மேற்கொண்டு, மூன்று மாத காலத்திற்கு ஒரு பட்டய படிப்பைப் படிக்க விரும்பினார். அதற்காக அவர் பணி புரியும் நிறுவனத்தில் விடுமுறை கோரி விண்ணப்பித்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தின் முதலாளி, திரு ஐயபாவிடம், மூன்று மாதங்களுக்கு உன்னுடைய வேலையைக் காலியாக விட்டு வைக்க இயலாது. உனக்குப் பதில் யாரேனும் அந்த வேலையை ஏற்றுக் கொள்ள முன் வந்தால், அந்த வேலை அவருக்கு வழங்கப்பட்டு விடும் எனத் தெரிவித்தார்.

வேலை எப்படிப் போனது

வேலை எப்படிப் போனது

மூன்று மாத சுய முன்னேற்றப் படிப்பிற்காகத் திரு ஐயப்பா, தான் நான்கு வருடங்கள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். இது ஒரு சூதாட்டம் தான் . முன்னேற்றமா? அல்லது பணிப்பாதுகாப்பா? என்கிற கேள்விக்கு, அவர் முன்னேற்றத்தைத் தேர்ந்தெடுத்தார். எனினும் அவருடைய முடிவு அவருக்குச் சாதகமாக இல்லை. படிப்பு முடிந்து, அவர் தன்னுடைய நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட பொழுது, அவருடைய இடத்திற்கு வேறொருவர் பணியமர்த்தப்பட்டது தெரிய வந்தது. அவருக்கு வேலை இல்லை. அப்பொழுதுதான் அவருடைய முன்னாள் பணியிட நண்பர் அவரைப் பற்றி, திருச் சச்சின் மற்றும் பின்னியிடம் தெரிவித்தார்.

முதல், ஃப்ளிப்கார்ட் நிறுவன ஊழியர்

முதல், ஃப்ளிப்கார்ட் நிறுவன ஊழியர்

"நாம் அதிகம் எதிர்பார்க்க வில்லை," எனச் சச்சின் ஒப்புக்கொள்கிறார். "நாம் விரும்பியது, கணினி பயன்படுத்த தெரிந்த மற்றும் சிறிது ஆங்கிலம் தெரிந்த ஒரு ஊழியர் மட்டுமே", என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

"அவருக்கு வேலை இல்லாமல் இருந்தது மற்றும் அப்போதைய சூழ்நிலையில் அவருக்கான வாய்ப்புக்களும் மிகக் குறைவே" எனத் திரு ஐயப்பனை பணியில் அமர்த்திய திருப் பின்னி தெரிவிக்கின்றார். "அவர் பணியில் இணைந்த பொழுது அவருக்கு ரூ .8,000 என்கிற ஒரு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டது", என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

ஐயப்பாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த பிளிப்கார்ட்

ஐயப்பாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த பிளிப்கார்ட்

ஐயப்பன் பணியில் இணைந்த உடன் அவருடைய இருப்பின் முக்கியத்தும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் உடனடியாக உணரப்பட்டது. "முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, நான் மிகவும் குழப்பமாக இருந்தேன்" எனத் திரு ஐயப்பன் தெரிவிக்கின்றர். ஏனெனில் அவருடைய புதிய வேலை, பழைய வேலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. "நாங்கள் பெங்களூரில் உள்ள 10 முதல் 12 பெரிய புத்தக வெளியீட்டாளர்களிடம் தொடர்பில் இருந்தோம், அதோடு, நாள் தோறும் 100க்கும் அதிகமான ஆர்டர்களைக் கையாள வேண்டியிருந்தது", எனத் திரு ஐயப்பன் தெரிவிக்கின்றார்.

ஐயபன் இந்தச் சவால்களினால் காணாமல் போய்விட வில்லை. அந்தச் சவால்களை முழு மனத் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் எதிர் கொண்டார்.

ஐயப்பாவின் வருகை பிளிப்கார்ட்டின் வளர்ச்சி

ஐயப்பாவின் வருகை பிளிப்கார்ட்டின் வளர்ச்சி

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில், திருச் சச்சின் வணிகத் தொழில்நுட்பங்களையும், திருப் பின்னி வணிக நடவடிக்கைகளையும் நிர்வகித்து வந்தனர். அவர்கள் தங்களுடைய முதல் முழுநேர ஊழியரைப் பணியில் அமர்த்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான நேரம் அவர்களுக்குத் தாராளமாகக் கிடைத்தது. எனினும் அடுத்தடுத்து வந்த வாரங்கள் மறக்க முடியாததாக இருந்தது. திரு ஐயப்பா உதவி புரிவதற்கு வந்த பணியாளராக மட்டும் விளங்காமல், அதற்கும் மேலே விளங்கினார். அவர் அந்த நிறுவனத்தின் மைய அச்சாகத் திகழ்ந்தார். அவர் வருகைக்குப் பின்னர் நிறுவனத்தின் வளர்ச்சி மேலே மேலே செல்லத் தொடங்கியது. அந்த நிறுவனத்தில் அவர் ஒரு நட்சத்திரமாக ஜொலித்தார்.

கேமிராவைப் போன்று அபார நினைவாற்றல்

கேமிராவைப் போன்று அபார நினைவாற்றல்

"முதல் வாரத்திற்குள், நாம் செய்து வந்த எல்லாவற்றையும் அவர் நன்கு தெரிந்து கொண்டார்', என நினைவு கூறும் திருச் சச்சின், திரு ஐயப்பாவிற்குக் கேமிராவைப் போன்று அபார நினைவாற்றல். அவர் நாம் செய்த வணிகத்தைப் பற்றிய அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் எனவும் திருச் சச்சின் தெரிவிக்கின்றார். " ஆரம்ப நாட்களில் எங்களுடன் ஆர்டர்களைக் கையாளும் மேலாண்மை அமைப்பு இல்லை. ஐயப்பாதான் எங்களின் நிர்வாக மேலாண்மை அமைப்பாக விளங்கினார். அவர் ஒவ்வொரு ஆர்டர் மற்றும் ஆடர்களின் தற்போதைய நிலைமையை நன்கு நினைவில் வைத்திருந்தார்", எனத் திருச் சச்சின் தெரிவிக்கின்றார்.

"ஐயப்பா வேலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குச் சேர்ந்த பின்னர், நாங்கள் பர்ஸ்ட் ப்ளைட் நிறுவன நபருக்குப் பரிந்துரை போனஸாக ரூ 50000 வழங்கினோம்" எனத் திருப் பின்னி நினைவு கூறுகின்றார். "நாங்கள் அவரைப் பற்றி மிகவும் சந்தோசப்பட்டோம்! " என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

வலி இல்லாமல், ஆதாயம் இல்லை

வலி இல்லாமல், ஆதாயம் இல்லை

அளவாகவும் மற்றும் அடக்கமாகவும் திரு ஐயப்பா அவர்கள் தான் புரிந்த முயற்சி மற்றும் உழைப்பைப் பற்றித் தெரிவிக்கின்றார். "சச்சின் மற்றும் பின்னி ஆகிய இருவரும் தான் என்னுடைய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் எனக்கு அருகில் உட்கார்ந்து வேலையைப் பற்றிய அனைத்தையும் கற்பித்தனர். மூன்று பேருக்கு மத்தியில் நாங்களை அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இணைந்தே அனைத்தையும் கையாண்டோம் " என நினைவு கூறும் திரு ஐயப்பா, திருச் சச்சின் மற்றும் பின்னி ஆகிய இருவரும் இணைந்து பொருட்களைப் பேக்கிங் செய்தது மற்றும் முகவரி ஒட்டியதை மறக்காமல் குறிப்பிடுகின்றார். " ஆரம்ப நாட்களில் இத்தகைய வேலைகளுக்கு மனித உழைப்புத் தேவைப்பட்டது. எனினும் இன்று இத்தகைய வேலைகளை எந்திரங்கள் செய்து வருகின்றது" , எனத் திரு ஐயப்பா தெரிவிக்கின்றார்.

ஜஸ்ட் இன் டைம் கொள்முதல் அமைப்பு

ஜஸ்ட் இன் டைம் கொள்முதல் அமைப்பு

அபாரமான நினைவாற்றல் உடைய திரு ஐயப்பா, பழங்கால முறைப்படி ஏராளமான மனித உழைப்புத் தேவைப்பட்ட ஆர்டர்கள் மேலாண்மை பற்றிய அனைத்து விவரங்களையும், தன் கண்களுக்கு முன் நடப்பதைப் போல் நினைவில் இருந்து எடுத்துக் கையாண்டார். "நாங்கள் ஜஸ்ட் இன் டைம் கொள்முதல் அமைப்பைப் பயன்படுத்தினோம். அது சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களுக்கு ஆர்டர் கிடைத்த பின்னர் அதை நாங்கள் கையால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் அந்த ஆர்டருடைய அளவு, உட்ச பட்ச சில்லறை விலை போன்றவற்றைப் பதிவு செய்து கொள்வோம். பொருட்களை வாங்கும் பொழுது, ஆர்டர்களைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வோம். அதை ஆர்டரை பேக் செய்பவரிடம் கொடுத்து விடுவோம். அவர் அதை வாங்குவதற்காக வியாபாரியிடம் செல்வார்" என அவர் நினைவு கூறுகின்றார்.

சிறுமூளையில் ஆர்டர்களைப் பற்றிய விபரங்கள்

சிறுமூளையில் ஆர்டர்களைப் பற்றிய விபரங்கள்

அவர் கூறுவதைக் கேட்கும் பொழுது எப்படி ஒரு மனிதன் தன்னுடைய சிறுமூளையில் ஆர்டர்களைப் பற்றிய அனைத்து விபரங்களைச் சேமித்து வைக்க இயலும். மேலும் தேவைப்படும் பொழுது ஆர்டர்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் விரிவாகத் தோண்டி எடுத்துத் தெரிவிக்க இயலும் என்பதை நினைக்கையில் நமக்கு ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி ஏற்படுகின்றது.

80 சதவீதம் வேலைப் பளுவை குறைத்த ஐயப்பா

80 சதவீதம் வேலைப் பளுவை குறைத்த ஐயப்பா

"ஐயப்பா எங்களுடன் இணைந்த பொழுது, அவரை அறியாமல்,எங்களுடைய வேளை பளுவில் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டார். சில வாரங்களுக்குள் என்னுடைய தொழில் சுமையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை அவரிடம் சென்று விட்டது. இதன் காரணமாக வணிகம் வளர வளர, நான் ஒழுங்கு செயலாக்க தானியக்கம், ஊழியர் சேர்க்கை, தானியக்கம் போன்ற வற்றில் கவனம் செலுத்தினேன்.", எனத் திருப் பின்னி தெரிவிக்கின்றார்.

வாடிக்கையாளர் சேவை எண் ஐயப்பாவின் எண்ணாக மாறியது

வாடிக்கையாளர் சேவை எண் ஐயப்பாவின் எண்ணாக மாறியது

ஐயப்பாவிடம் வாடிக்கையாளர் சேவைகளைச் சமாளிக்கும் திறமை மிகவும் இயல்பாகவே இருந்தது. விரைவில், அவருடைய கைபேசி எண், வாடிக்கையாளரின் அவசரத் தொடர்பு எண்ணாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டது. திருச் சச்சினின் கூற்றுப் படை ஐயப்பா, ஒரு நாளின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை, அனைத்து வேலைகளுக்காவும் சளைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தார். வாடிக்கையாளரின் தொலைப்பேசிக்குப் பதில் அளிப்பதில் தொடங்கி, பொருட்களை விற்கும் வியாபாரிகளைச் சந்திப்பது வரை, ஒரு ஆர்டரின் அனைத்து நிலைகளையும் திறம்படக் கையாண்டார். அவர் ஒரு பொழுதும் தன்னுடைய கடமைகளில் இருந்து தவறவில்லை. நடைமுறைகளில் தவறு ஏற்படவும் விட வில்லை.

முதலில் சரக்கு இருப்புக் கிடையாது

முதலில் சரக்கு இருப்புக் கிடையாது

"நாங்கள் அந்த நாட்களில் சரக்குகளை இருப்பு வைத்ததில்லை," எனச் சச்சின் நினைவு கூறுகின்றார். "ஒவ்வொரு நாளும், ஆர்டர்கள் வந்த பின்னர், நாங்கள் ஆர்டருக்குரிய புத்தகங்களை வாங்குவதற்கான பணியாளர்களை அனுப்புவோம். அதன் பின்னர்ப் புத்தகங்களைப் பேக் செய்து உரியவர்களுக்கு அனுப்புவோம்.

பிளிப்கார்ட்டுக்கு உதவிய ஐயப்பாவின் நினைவாற்றல்

பிளிப்கார்ட்டுக்கு உதவிய ஐயப்பாவின் நினைவாற்றல்

இந்த நடைமுறையில் திரு ஐயபாவின் அபாரமான நினைவாற்றலும், பொருட்களை வாங்கச் செல்லும் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் அவருடைய தனித்துவமான திட்டமிட்ட வழிமுறைகளும் எங்களுக்குப் பெரிதும் உதவியது. புத்தகங்களை வாங்கச் செல்லும் ஒரு பணியாளருக்கு, அவருக்குத் தேவைப்படும் புத்தகம் கிடைக்கவில்லை எனில், ஐயபா ஒரு கணமும் தாமதிக்காமல், வேறொரு விற்பனையாளரிடம் வேறொரு புத்தகம் வாங்கச் செல்லும் மற்றொரு பணியாளரிடம், தன்னுடைய தேவையைத் தெரிவித்து, ஆர்டருக்குரிய புத்தகத்தை எப்படியும் வாங்கிவிடுவார்.

இரவு பணி நேரம்

இரவு பணி நேரம்

"2009 ஆம் ஆண்டு முதல், சர்வதேச வெளியீட்டாளர்களிடம் இருந்து நாங்கள் புத்தகம் வாங்கத் தொடங்கினோம். ஆர்டருக்குரிய புத்தகங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவனத்திற்கு வந்து சேரும் ", என ஐயப்பா நினைவு கூறுகின்றார். "எங்களுடைய இரவு பணி நேரம் நீடிக்கத் தொடங்கியது மற்றும் நாங்கள் வார இறுதி நாட்களில் வந்து, புத்தகங்களைப் பேக் செய்து அவை குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளரிடம் கிடைப்பதை உறுதி செய்தோம்", எனத் திரு ஐயப்பா தெரிவிக்கின்றார்.

பகுதி 2

பகுதி 2

இரண்டாம் பகுதியில் மனித நிறுவன வள திட்டமிடல்(A human ERP) என எதனால் இவர் அழைக்கப்படுகின்றார், தன்னை இயந்திர மனிதனாக எப்படி மாற்றிக்கொண்டார் என்பதை விரைவில் பார்க்கலாம். அதற்குத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்தைத் தொடர்ந்து படித்து வரவும்.

ஆம்பூர் ஐயப்பா: பிளிப்கார்ட் நிறுவனத்தின் எதிர்காலத்தைச் சரியாகக் கணித்த மனிதன் பாகம் 2

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ambur Iyyappa the man who saw tomorrow of Flipkat Part 1

Ambur Iyyappa – the man who saw tomorrow of Flipkat Part 1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more