இந்தியாவில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற என்ஆர்ஐ-ஆ நீங்கள்? - மிக எளிது

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நம்மில் பலருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒரு மிகப் பெரிய கனவு. அந்தக் கனவை நனவாக்க இந்தியாவில் பலவிதமான வீட்டுக்கடன் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு வாங்க ஏதாவது வீட்டுக்கடன் வசதிகள் இருக்கின்றனவா என்று பார்த்தால் அவர்களுக்கும் பலவிதமான வீட்டுக்கடன் வசதித் திட்டங்கள் இருக்கின்றன.

இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அந்த வீட்டுக்கடன் திட்டங்களைப் பயன்படுத்தி அவர்கள் மிக எளிதாக இந்தியாவில் வீடுகளை வாங்கலாம்.

யார் என்ஆர்ஐ?

இந்தியாவில் உள்ள வங்கிகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை வரையறை செய்யும் போது அவை இந்திய ரிசா்வ் வங்கி கொடுத்திருக்கும் வரையறையையே பின்பற்றுகின்றன.

அதாவது செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமக்கள், பணியின் நிமித்தமாகவோ அல்லது வியாபாரம் நிமித்தமாகவோ அல்லது காலம் குறிப்பிடப்படாத விடுமுறையிலோ வெளிநாட்டில் வசித்து வந்தால் அவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்று கருதப்படுகின்றனர். இந்த வரையறையின் அடிப்படையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீட்டுக்கடன் வசதிகளைப் பெற தகுதி பெறுகின்றனர்.

 

எவற்றிற்கெல்லாம் வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது?

இந்தியாவில் உள்ள கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் அல்லது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகள் ஆகியவற்றை வாங்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வீட்டுக்கடன் பெறலாம்.

அவர்கள் தமது சொந்த மனைகளில் புதிய வீடுகள் கட்டவோ அல்லது இருக்கின்ற தமது வீடுகளைப் புதுப்பிக்கவோ வீட்டுக்கடன் பெறலாம். மேலும் புதிய மனைகள் வாங்கவும் வீட்டுக்கடன் வாங்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

 

எவ்வளவு கடன் வாங்கலாம்?

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாங்கும் வீட்டுக்கடன் தொகையின் அளவை நிர்ணயிக்க அவர்களுடைய வருமானம் மற்றும் கல்வித் தகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான வங்கிகள் அவர்கள் பெறும் மொத்த மாத வருமானத்தைக் (GMI) கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்கள் வாங்கும் சொத்தின் 80 முதல் 85 சதவீதம் வரையிலான தொகையை முன்பணமாக அதவது கடனாக வழங்குகின்றன.

அதிகத் தொகையாக அவர்கள் வாங்கும் மொத்த மாத வருமானத்தைப் போல் 36 முதல் 40 மடங்கு வரை அதிகமான தொகையைக் கடனாக வழங்குகின்றன. ஒருசில வங்கிகள் அவர்களுடைய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் (EMI) அல்லது அவர்களுடைய மாத நிகர வருமானம் (NMI) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப கடன் வழங்குகின்றன.

 

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டாக, இந்திய ஸ்டேட் வங்கி ஆண்டிற்கு 2 இலட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அவர்களுடைய நிகர வருமானத்திலிருந்து 40 சதவீத்தை, அவர்களுடைய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனாக (EMI) நிர்ணயம் செய்திருக்கிறது. 2 முதல் 5 இலட்சம் வரும் வருமானம் பெறுபவருக்கு 50 சதவீதமும் 5 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 55 சதவீதம் வரை நிர்ணயம் செய்திருக்கிறது.

ஒருசில வங்கிகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கல்வித் தகுதி மற்றும் அவர்கள் வாழும் நாடுகள் ஆகியவற்றைப் பொருத்துக் கடனை நிர்ணயம் செய்கின்றன.

 

சம்பள வரவு

குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் ஆண்டு வருமானமாக 36000 திா்ஹாம்கள் வரை பெற்றால் அவா்களுக்கு 5 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் வசதி செய்து கொடுக்கின்றது. 48000 திா்ஹாம்கள் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 6 முதல் 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாகக் கடன் வழங்குகிறது.

மேலும் அமொிக்க நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கு ஆண்டு வருமானம் 30000 அமொிக்க டாலா்களாகவும் மற்ற நாடுகளில் வசிப்பவா்களுக்கு 42000 அமொிக்க டாலா்களாகவும் நிா்ணயம் செய்திருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல் என்னவென்றால் பட்டப்படிப்பு முடித்த வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் மட்டுமே இந்தியாவில் வீட்டுக்கடனைப் பெறமுடியும்.

 

கடனை திருப்பிச் செலுத்தும் காலம்

இந்தியாவில் வசிப்பவா்களுக்கு வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்த அதிகமாக 30 ஆண்டுக் கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் உண்டு.

ஒருவேளை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வங்கி அதற்கு முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டு விதிவிலக்காகக் கால நீட்டிப்பு வழங்கலாம்.

 

வட்டி விகிதம்

வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவதில் அதிகச் சிக்கல்கள் உள்ளதால் அவா்களின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் அதிகமாகவே இருக்கும். பொதுவாக அவா்களுக்கு 0.25% முதல் 0.50% வரை வட்டி நிா்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேவையான ஆவணங்கள்

கடனை ஆவணப்படுத்துதல் என்பது இந்தியாவில் வசிக்கும் இந்தியா்களிலிருந்து வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கு முழுமையாக வேறுபடுகிறது.

பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் இந்தியாவில் வீட்டுக்கடன் வசதியைப் பெறவேண்டும் என்றால் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வெளிநாட்டில் தங்கும் அனுமதி சீட்டு (விசா), வேலை செய்வதற்கான அனுமதி சீட்டு, வேலைக்கான ஒப்பந்தச் சீட்டு, வேலைக்கான அனுபவ சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் என்ஆா்இ அல்லது என்ஆா்ஒ வங்கி கணக்கின் பாிவா்த்தனை சான்று போன்றவற்றை அளிக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுாிபவா்கள் தாங்கள் வேலை செய்வதற்கான சான்றிதழின் (employment card) நகலை வழங்க வேண்டும். அவா்களின் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றால் அந்த நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களின் ஒப்புதல் முத்திரை பெற்ற வருவான சான்றிதழை அளிக்க வேண்டும்.

 

சான்றிதழ்கள் சமா்ப்பித்தல்

மேற்சொன்ன ஆவணங்கள் தயாராகிவிட்டால் வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் வீட்டுக் கடன் வாங்க காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் இந்தியாவில் இயங்கி வரும் பல வங்கிகள் துபாய், சிங்கப்பூா், லண்டன் போன்ற இடங்களில் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றன. அங்குச் சென்று வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் போன்ற வங்கிகள் இணையம் மூலமாகச் சான்றிதழ்களை அளித்து, விண்ணப்பிக்க வசதி செய்து கொடுத்திருக்கின்றன.

எனினும் இந்தியாவில் வசிக்கும் வழக்குரைஞர்களைத் தங்கள் பிரதிநிதிகளாக வைத்துக் கொள்ள வேண்டும். அவா்கள் வெளிநாட்டுவாழ் இந்தியா்கள் சாா்பாக வங்கிகளில் செயல்படுவாா்கள்.

 

வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்தல்

வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் இந்தியாவில் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் அவா்கள் என்ஆா்இ (NRE) அல்லது என்ஆா்ஒ (NRO) வங்கிக் கணக்குகள் மூலம்தான் திருப்பிச் செலுத்த முடியும். வேறு எந்த வங்கிக் கணக்குகள் மூலமும் செலுத்த முடியாது. மேலும் இந்திய ரூபாய் மதிப்பில் மட்டுமே திருப்பிச் செலுத்த முடியும்.

ஒருவேளை வீட்டுக்கடன் வாங்கிய வெளிநாட்டு வாழ் இந்தியா் இந்தியாவிற்குத் திரும்பி வந்துவிட்டால் அவா் வாங்கிய வீட்டுக்கடன், இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமனுக்கு உாிய சலுகைகளோடு மாற்றியமைக்கப்படும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are you NRI..? Do you want to buy house in India? Its very simple

Are you NRI..? Do you want to buy house in India? Its very simple
Story first published: Tuesday, March 28, 2017, 14:59 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns