ஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் புதிய கட்டணங்கள்.. அதிர்ச்சியில் மக்கள்

ஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்க இருக்கும் புதிய கட்டணங்கள் ஒரு பார்வை..!

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் ஏப்ரல் 1 முதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அபராதம் எவ்வளவு, கணக்கில் யாரெல்லாம் எவ்வளவு இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பதை இங்குப் பார்ப்போம்.

மெட்ரோ நகர வங்கி கிளைகளில் உள்ள வங்கி கணக்குகள்

மெட்ரோ நகர வங்கி கிளைகளில் உள்ள வங்கி கணக்குகள்

எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 100 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். செக் புக் இல்லாத வங்கி கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவில் விலக்கு உண்டு. எனவே உடனே உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.

புறநகர்ப் பகுதிகள்

புறநகர்ப் பகுதிகள்

புறநகர்ப் பகுதிகள் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 40 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 60 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 80 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். எனவே உடனே உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.

நகரப் பகுதிகள்

நகரப் பகுதிகள்

நகரப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 25 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். செக் புக் இல்லாத வங்கி கணக்குகளுக்கு 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதுமானது.

கிராமப் பகுதிகள்

கிராமப் பகுதிகள்

கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 20 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 30 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். செக் புக் இல்லாத வங்கி கணக்குகளுக்கு 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதுமானது.

கட்டணம் எவ்வளவு மற்று வரம்புகளைக் காண தொடரவும்

கட்டணம் எவ்வளவு மற்று வரம்புகளைக் காண தொடரவும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய இணையதளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பணப் பரிவத்தனை கட்டணம் 50 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள ஆர்பிஐ வங்கியின் விதிகளின் படி சேமிப்புக் கணக்குகளுக்கு வங்கிகள் குறைந்தது 5 பரிவர்த்தனையை இலவசமாக அளிக்க வேண்டும்.

வங்கி கிளைகளில் இலவச பணப் பரிவர்த்தனை வரம்புகள்

வங்கி கிளைகளில் இலவச பணப் பரிவர்த்தனை வரம்புகள்

1,000 ரூபாய்க்கும் குறைவாக 2 முறையும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 2 முறையும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 10 முறையும், 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 15 முறையும் மற்றும் 1,00,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிமாற்றங்கள் செய்பவர்கள் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். வரம்பு மீறினால் 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இணையதள வங்கி பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள்

இணையதள வங்கி பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள்

1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

செக் புக் விநியோகம்

செக் புக் விநியோகம்

ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் 50 செக்குகள் இலவசமாக வழங்கலாம். அதற்குப் பிறகு நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு 3 ரூபாய் சேவை கட்டணமாக அளிக்க வேண்டும். 25 செக்குகளுக்கு 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வங்கி கணக்கு அறிக்கை

வங்கி கணக்கு அறிக்கை

நடப்பு வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் முதல் அறிக்கை இலவசம், இதுவே டூப்ளிகேட் அறிக்கை வேண்டும் என்றால் 100 ரூபாய் சேவை கட்டணமாகப் பெற வேண்டும்.

குறுந்தகவல் விழிப்புட்டல் கட்டணம்

குறுந்தகவல் விழிப்புட்டல் கட்டணம்

டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்குக் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்

எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

எஸ்பிஐ வங்கியில் என்ஈஎப்டி(NEFT) பரிமாற்ற கட்டணங்கள்

எஸ்பிஐ வங்கியில் என்ஈஎப்டி(NEFT) பரிமாற்ற கட்டணங்கள்

10,000 ரூபாய் வரை என்ஈஎப்டி முறையில் இணையதள வங்கிகளில் பரிவர்த்தனை செய்யும் போது 2 ரூபாயும், வங்கி கிளையில் செய்யும் போது 2.50 ரூபாயும் வசூலிக்கப்படும். என்ஈஎப்டி முறையில் 10,000 ரூபாய் முதல் 1,00,000 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 4 ரூபாயும், இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

என்ஈஎப்டி முறையில் 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 12 ரூபாயும், இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். என்ஈஎப்டி முறையில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 20 ரூபாயும் இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

எஸ்பிஐ வங்கியில் ஆர்டிஜிஎஸ்( RTGS) பரிமாற்ற கட்டணங்கள்

எஸ்பிஐ வங்கியில் ஆர்டிஜிஎஸ்( RTGS) பரிமாற்ற கட்டணங்கள்

ஆர்டிகிஎஸ் முறையில் எஸ்பிஐ இணையதள வங்கி சேவை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாயும், ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகச் செய்யும் போது 45 ரூபாயும் வசூலிக்கப்படும். இதுவே வங்கி கிளைகளில் செய்யும் போது 25 மற்றும் 50 ரூபாய் முறையே கட்டணமாக வசூலிக்கப்படும்.

எப்போது முதல்

எப்போது முதல்

எஸ்பிஐ வங்கிகளில் மேலே கூறியது போன்று ஏப்ரல் 1 முதல் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால் அபராதங்கள் விதிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+