உயர் அதிகாரியின் சம்பள உயர்விற்கு நாராயண மூர்த்தி கடும் எதிர்ப்பு.. இன்போசிஸில் வந்த புதிய பிரச்சனை

உயர் அதிகாரியின் சம்பள உயர்விற்கு நாராயண மூர்த்திக் கடும் எதிர்ப்பு.. இன்போசிஸில் வந்த புதிய பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் விசா பிரச்சனை, போட்டி நிறுவனங்களின் பைபேக் அறிவிப்புகள், புதிய ஆர்டர்கள், விசா கெடுபிடியில் பிரிட்டன், சிங்கப்பூர் இணைந்தது, விசா கட்டுப்பாடுகளால் கூடுதல் செலவுகள், நிறுவனத்தின் லாப அளவு சரியும் சூழ்நிலை எனப் பல முக்கியப் பிரச்சனைகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக இன்போசிஸ் நிறுவனத்தில், நிர்வாகத்திற்கும் நிறுவனர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்புகள் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்று மும்பை பங்குச்சந்தைக்கு இன்போசிஸ் சமர்ப்பித்த அறிக்கையில், நிறுவன முதலீட்டாளர்கள் புதிய Articles of Association (AoA) அமல்படுத்தவும், பொதுச் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளைப் பைபேக் செய்யவும், புதிய தனிப்பட்ட நிர்வாகத் தலைவரை நியமிக்கவும், யுபி பிரவீன் ராவ் அவர்களின் சம்பள உயர்விற்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

டி.என்.பிராலாட்

டி.என்.பிராலாட்

இன்போசிஸ் நிர்வாகக் குழுவில் தனிப்பட்ட நிர்வாகத் தலைவராகவும், இணை இயக்குனராகவும் டி.என்.பிராலாட் அவர்களை நிர்வாகம் நியமிக்க முடிவு செய்ய இறுதிக்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

டி.என்.பிராலாட் அவர்களின் நியமனம் குறித்த முடிவு அக்டோபர் 14, 2016 ஆண்டில் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

 

பைபேக்

பைபேக்

பொதுச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் 35,697 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வர்த்தகத்தில் இருக்கும் நிலையில், இதன் நிர்வாகம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்கத் திட்டமிட்டுள்ளது.

16,000 கோடி ரூபாய்

16,000 கோடி ரூபாய்

ஆனால் வர்த்தகச் சூழ்நிலை பொருத்து இதன் அளவுகள் மாறுபடும் எனவும் சந்தை வல்லுனர்கள் கூறி வரும் நிலையில், இன்போசிஸ் முதலீட்டாளர்கள் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

பிரவீன் ராவ் சம்பளம்

பிரவீன் ராவ் சம்பளம்

அவை அனைத்திற்கும் மேலாக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யு.பி.பிரவீன் ராவ் அவர்களின் சம்பளத்தை உயர்த்தவும் தற்போது இன்போசிஸ் நிர்வாகம் ஒப்புதலை அளித்துள்ளது. இது இன்போசிஸ் நிறுவனர்கள் குழு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

நிறுவனத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 6 - 8 சதவீத ஊதிய உயர்வை அளித்துள்ள நிலையில், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு எப்படி 60-70 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை அளிக்க முடியும்.

இது முற்றிலும் தவறானது. என்று இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தித் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

 

ஊழியர்களின் நலன்

ஊழியர்களின் நலன்

நிறுவனத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 6 - 8 சதவீத ஊதிய உயர்வை அளித்துள்ள நிலையில், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு எப்படி 60-70 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை அளிக்க முடியும்.

இது முற்றிலும் தவறானது. என்று இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தித் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

 

பிரவீன் ராவ் சம்பளம்

பிரவீன் ராவ் சம்பளம்

தற்போது இன்போசிஸ் முதலீட்டாளர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள படி, பிரவீன் ராவ் இனி வருடத்திற்கு நிலையான சம்பளமாக 4.62 கோடி ரூபாயும், 3.88 கோடி ரூபாய் வேரியபில் பே, 27,250 கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனப் பங்குகள், அடுத்த 4 வருடத்திற்கு 43,000 பங்குகள் என மிகப்பெரிய அளவிலான சம்பள உயர்வை அளித்துள்ளது.

நாராயண மூர்த்தி ஆதிக்கம்

நாராயண மூர்த்தி ஆதிக்கம்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனர்கள் இந்நிறுவனத்தில் வெறும் 12.75 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர்.

இதில் நாராயண மூர்த்தி அதிகப்படியான அளவு அதாவது 3.44 சதவீத பங்குகளைக் கொண்டு நிறுவனர்கள் குழுவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

 

ஆர். சேஷசாயி

ஆர். சேஷசாயி

இந்நிலையில் மொத்த நிர்வாகமும் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் சேர்மேன் ஆர். சேஷசாயி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளில் ஆர். சேஷசாயி தலைமையிலான குழு ஆதிக்கம் செலுத்தும். இங்குத் தான் பிரச்சனை துவங்கியுள்ளது.

 

யார் இந்தப் பிரவீன் ராவ்

யார் இந்தப் பிரவீன் ராவ்

1985ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பிரவீன் ராவ். 2013ஆம் ஆண்டு வரையில் நிர்வாகக் குழுவில் இல்லாத இவர், நாராயணமூர்த்தியின் 2வது சிஇஓ பதவிக் காலத்தில் மூர்த்தி, கிரிஷ், ஷிபுலால் ஆகியோரால் நிர்வாகக் குழுவிற்குக் கொண்டு வரப்பட்டவர் தான் ராவ்.

பதவி உயர்வு

பதவி உயர்வு

இதன் பின் விஷால் சிக்கா வின் நியமனத்தின் போது பிரவீன் ராவ் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pay hike to Infosys COO Pravin Rao has NRN fuming

Pay hike to Infosys COO Pravin Rao has NRN fuming
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X