அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் டீமார்ட் என்றால் அனைவருக்கும் தெரியும்.
ஆம் உங்களது கணிப்புச் சரிதான், டீமார்ட் நிறுவனத்தின் தலைவர் தான் ராதாகிஷன் தாமணி. இந்தியாவில் ஆதித்தியா பிர்லாவின் மோர் சூப்பர்மார்கெட், வால்மார்ட், மெட்ரோ, பிக் பஜார் போன்ற பெறு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பல வருடமாய்ப் போட்டி அளித்து வரும் ஒரு நிறுவனம் தான் டீமார்ட்.
பல வருடங்களாக இத்துறையில் சிறந்து விளங்கும் டீமார்ட் நிறுவனம், பல ஆலோசனைக்குப் பின் தனது ஆஸ்தான நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி பட்டியலிடப்பட்டது. வர்த்தகச் சந்தையில் டீமார்ட் நிறுவனத்தில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதைப் போலப் பங்குச்சந்தையிலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் மும்பை பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை 299 ரூபாய் என்ற நிலையில் பட்டியலிடப்பட்டுச் சுமார் 114 சதவீதம் வரை உயர்ந்து அசத்தியுள்ளது. இதுவும் கடந்த 2 நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 19 சதவீதம் வரை உயர்ந்து இந்திய சந்தையில் அசத்தியுள்ளது. இதன் மூலம் ராதாகிஷன் தாமணி கடந்த இரண்டு நாட்களில் சுமார் 6,100 கோடி ரூபாயைச் சம்பாதித்துள்ளார். புதன்கிழமை 631.60 ரூபாய் என்ற நிலையில் முடிவடைந்த இந்நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 750.50 ரூபாய்க்கு முடிவடைந்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 18.82 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தில் 82.2 சதவீத பங்குகளைத் தாமணி குடும்பம் வைத்துள்ளது. இக்குடும்ப நிறுவனத்தின் ராதாகிஷன் தாமணி, அவரது மனைவி, அவரது சகோதரர் கோபிகிஷன் ஷிவ்கிஷன் ஆகியோர் உள்ளனர். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்தியாவில் 20 செல்வமிக்க நபர்கள் பட்டியலிலும், உலகளவில் 500 பணக்காரர்கள் பட்டியலிலும் தாமணி குடும்பம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டீமார்ட் சூப்பர்மார்கெட் நிறுவனம் 2002ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் சுமார் 118 கடைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. அமெரிக்க வேலையை உதறி "டீ" கடையை திறந்த ஐஐடி மாணவர்கள்!!
மார்ச் 21
114 சதவீதம்
2 நாள் வர்த்தகம்
வெள்ளிக்கிழமை
இவர்களுக்குச் சொந்தம்..
4.10 பில்லியன் டாலர்
2002ஆம் ஆண்டு
"டீ" கடை
வெற்றி ஜோடிகள்