எதிரி கட்சியாக இருந்தாலும் மூன்று முறை பிரதமர் மோடியை மன்மோகன் சிங் காப்பாற்றியிருக்கிறார்..எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் மோடி இருவரிடமும் என்ன தான் அரசியல் ரீதிடாக மணக் கசப்பு இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதிலும் பிரதமர் மோடியைச் சிக்கலில் இருந்து ஒரு முறை அல்ல மூன்று முறை காப்பாற்றியிருக்கிறார்.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மன்மோகன் சிங் எதிர் கட்சியாக இருந்து எப்போது ஆளுங்கட்சியின் முடிவுகளை எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டுமோ அப்போது அதனை எதிர்த்தும், ஆதரிக்க வேண்டிய சமயங்களில் ஆதரித்தும் தன்னை ஒரு சிறந்த எதிர் கட்சி தலைவராக நிரூபித்துள்ளார்.

2015-ம் ஆண்டுப் பொருளாதாரச் சிக்கல் பற்றிப் பேசிய போது முன்பு இருந்த அரசை மோடி விமர்சித்த போது அதை வன்மையாகக் கண்டித்துப் பேசியது மன்மோகன் சிங் என்பதை மறக்க முடியாது.

மன்மோகன் சிங் மிக்சர் சாப்பிடுபவர் இல்லை என்று நிரூபித்துள்ளார்

செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பிற்குப் பிறகு நடந்து பல மோசடிகளை விமர்சித்து மக்களவையில் மன்மோகன் சிங் பேசினார். அது மட்டும் இல்லாமல் 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்த போது பேரழிவுக்குச் சொந்தக்காரர் மோடி என்றும் மன்மொகன் சிங் இவரை விமர்சித்துள்ளார்.

அதே நேரம் அமைச்சராக முன்னால் பிரதாமாரராக இருக்கும் மன்மோகன் சிங் நரேந்திர மோடி அரசு சிக்கலில் இருக்கும் போது அவர்களை ஆதரித்துச் சில முடிவுகளை வரவேற்றுக் காப்பாற்றியும் இருக்கிறார். எனவே இவர் எப்படியெல்லாம் மோடியைக் காப்பாற்றியுள்ளார் என்பதை இங்குப் பார்ப்போம்.

 

ஜிஎஸ்டி மசோதா முடக்கத்தைத் தடுத்த ராஜ தந்திரி

நவம்பர் 2015-ம் ஆண்டு ஜிஎஸ்டி மசோதா பாராளுமன்ற விவாதத்திற்கு வந்த போது நரேந்திர மோடி அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர்க்க படாதபாடு பட்டு வந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் செவி சாய்க்காத நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதுவும் செய்ய முடியாத நிலை உறுவானது.

அப்போது தான் மன்மோகன் சிங் மோடி மற்றும் சோனியா காந்தி இடையே சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தித் தந்தார். இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி மசோதா இன்று அமலுக்கு வரத் தயாராக உள்ளது.

 

உர்ஜித் படேலினை காப்பாற்றியது

பாராளுமன்ற குழு ஜனவரி மாதம் ஆரிபிஐ கவர்னர் உர்ஜித் படேலிடம் எப்படிச் செல்லா ரூபாய் நோட்டு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் உடனடியாக அமலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பியது. இதனால் ஆர்பிஐ ஆளுநர் மற்றும் மோடி அரசுக்குப் பெறும் சிக்கலை ஏற்படுத்தியது.

அப்போது முன்னால் ஆர்பிஐ கவர்னராக இருந்த மன்மோகன் சிங் படேலுக்கு அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டாம், இல்லை என்றால் அது ஆர்பிஐ-க்கு பெறும் பிரச்சனையை அளிக்கும் என்று ஆலோசனை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு குறித்துக் கேள்வி கேட்கும் போதும் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கக் கூடாது என்று உர்ஜித் படேல் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியது மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் எப்படித் தான் பிரதமராக இருந்த போது அதிகம் பேச மாட்டாரோ அதே போன்று உர்ஜித் படேலை பேச விடாமல் தடுத்து படேல், ஆர்பிஐ மற்றும் மோடி அரசு என மூன்றையும் காப்பாற்றிவிட்டுள்ளார்.

 

ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக இயற்ற உதவி

வியாழக்கிழமை மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா இறுதிக் கட்டத்திற்கு வந்த போது காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஜிஎஸ்டி மசோதாவில் மேலும் சில திருத்தங்கள் வேண்டும் என்று காலத் தாமதம் படுத்த முயன்ற போது மன்மோகன் சிங் அவரைத் தடுத்து அறிவுரை கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Manmohan Singh saves Narendra Modi, not once but thrice: Read why and how

Manmohan Singh saves Narendra Modi, not once but thrice: Read why and how
Story first published: Saturday, April 8, 2017, 19:57 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns