யார் இந்த 'ஷேக் ஹசீனா'? எதனால் இவரது இந்திய வருகை பெரிதாக பார்க்கப்படுகின்றது..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஏழு வருடங்களுக்குப் பிறகு வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறார். இவர்டுடனான பிரமதம்ர் மோடியின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று பார்க்கப்படுகின்றது.

இவருடைய இந்திய வருகையினால் என்னவெல்லாம் நடக்கப்போகின்றது என்று இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருங்கிணைப்புகள் மற்றும் சவால்கள்: பகிரப்பட்ட எல்லைகள்

2015-ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி 162 விதமான எல்லை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் தொடர்ந்து இந்து சிறுபான்மையினர் துன்பப்பட்டு வரும் சூழலுக்குத் தீர்வு காணப்படும்.

சிட்டகாங் போர்ட்

வங்க தேசம் சிட்டகாங் போர்ட் வழியாக இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய 40 வருடங்களுக்குப் பிறகு இப்போது முதன் முறையாக அனுமதி அளித்துள்ளது.

1975-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி 4,096 கிமி எல்லை பரப்பளவை பகிர இந்தியா ஒப்புக்கொண்டது ஆனால் அது இப்போது அதைக் குறைத்துக்கொண்டே வருவதினால் உள்ள சிக்கல் வங்க தேசத்தின் குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றைக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வர்த்தகம்

2012-2013 நிதி ஆண்டில் வங்க தேசத்திற்கு 5.34 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்தியா அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளதோ 654 மில்லியப்ன் டாலர் மட்டும் ஆகும். அதே நேரம் இந்தியா 600MW மின்சாரமும் இந்தியா வங்க தேசத்திற்கு அளிக்கின்றது.

வங்கதேச வல்லுநர்கள் கருத்து

ஏற்றுமதியில் இந்தியா பாரபட்சம் பார்க்கின்றது. இதனைச் சரி செய்ய வேண்டும். நாளுக்கு நாள் வங்க தேசத்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது குறைந்து கொண்டு தான் வருகின்றது, இதனை நேர்படுத்த வேண்டும் என்று அவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு

வங்கதேசம் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக உள்ளது. வங்கதேசத்தில் இருந்து ஐஎஸ்ஐ நடவடிக்கைகளை, தீவிரவாதம், FICN பலவற்றில் இந்தியா சிக்கல் சந்தித்து வருகின்றது.

வங்கதேசத்தின் வாயிலாக மேற்கு வங்கம், திருப்பூரா உள்ளிட்ட மாநிலங்களில் தேசவிரோதிகள் ஊடுருவுகின்றனர் என்பதினால் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

 

இராணுவ வன்பொருள் வழங்கல்

பாதுகாப்புத் துறையில் ஆழப்படுத்துவதை ஒத்துழைக்கும் வண்ணமாக 500 மில்லியன் டாலர்கள் இராணுவ வன்பொருள்களைக் கடனாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் ஊடகம்

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொது உறவுகள் மற்றும் வெகுஜன ஊடக சுற்றுலாக்கள் மற்றும் பயிற்சிகள் எளிதாக்கும் வசதிகள், இணைந்து திரைப்படம் எடுப்பது போன்றவற்றுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படும்.

ரயில்வே துறை

வங்க தேசத்தின் ரயில் நெட்வொர்க்கை புதுமைப்படுத்த இந்தியா உதவும். டாக்கா-கொல்கத்தா இடையில் ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படும், வாரத்திற்கு 4 ரயில் சேவை அளிக்கப்படும்.

நீர் வழித்தடங்கள்

குஷிரா மற்றும் யமுனா நதிகளில் நீர் வழித்தடங்கள் அமைக்கப்படும். அதன் மூலம் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Bangladesh PM Sheikh Hasina's visit is a big deal

Why Bangladesh PM Sheikh Hasina's visit is a big deal
Story first published: Saturday, April 8, 2017, 16:54 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns