அரசு அதிகாரியுடன் வாக்குவாதம் முற்றியதால் கேசிநேனி டிராவல்ஸ் மூடப்பட்டது..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய டிராவல் ஏஜென்சியான கேசிநேனி டிராவல்ஸ் நிறுவனத்தை, இதன் தலைவர் கேசிநேனி ஸ்ரீநிவாஸ் முழுவதுமாக மூடப்போவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியான கேசிநேனி ஸ்ரீநிவாஸ், போக்குவரத்துறை அதிகாரியுடனான பிரச்சனையின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு...

கேசிநேனி டிராவல்ஸ் பல மோசடிகளில் ஈடுபடுவதாகவும், பிற மாநிலங்களில் பதிவு செய்தல் போன்ற முறையற்ற பணிகளைச் செய்துவருவதாக ஆந்திர மாநிலத்தின் போக்குவரத்து கமிஷனர் பால சுப்ரமணியம் குற்றம்சாட்டினார்.

இதில் கேசிநேனி ஸ்ரீநிவாஸ் மற்றும் பால சுப்ரமணியம் மத்தியில் வாக்குவாதம் முற்றியது.

 

சந்திரபாபு நாயடு

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க கேசிநேனி ஸ்ரீநிவாஸ் இம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயடு உதவியை நாடியபோது முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் நிறுவனத்தை மூட அறிவித்தார் ஸ்ரீநிவாஸ்.

மார்ச் 31ஆம் தேதியே தனது முடிவைப் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கத் திட்டமிட்டு ஸ்ரீநிவாஸ், தெலுங்கு தேசம் கட்சி தலைவரின் வேண்டுகோளுக்கு இணைங்க பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்தார்.

 

சனிக்கிழமை

வெள்ளிக்கிழமை இரவு முதல் முழுமையாக நிறுவனத்தின் இயக்கம் முடக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தெலுங்கு தேசம் கட்சி எம்பியான கேசிநேனி ஸ்ரீநிவாஸ் அறிவித்தார்.

உத்தரவும்

மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் போக்குவரத்து கமிஷனர் பால சுப்ரமணியம் வாக்குவாதம் செய்த காரணத்திற்காக அவரிடம் மன்னிப்பு கேட்ககோரி கருத்துக்கள் நிலவிய நிலையில், நிறுவனத்தையே மூடியுள்ளார் கேசிநேனி ஸ்ரீநிவாஸ்.

குற்றச்சாட்டு

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மட்டும் சுமார் 400 பஸ்கள் போக்குவரத்து துறையின் மோசடிகளால் உரிமம் இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் 150 பஸ்கள் ஆரஞ்சு டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

YS ஜெகன்மோகன் ரெட்டி

ஆரஞ்சு டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் ரெட்டி YSR காங்கிரஸ் தலைவர் YS ஜெகன்மோகன் ரெட்டியின் பினாமி ஆவார். இவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்ட காரணத்தினால் இந்நிறுவனத்தின் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பால சுப்ரமணியம் மீதும் ஆந்திர போக்குவரத்து துறையின் மீதும் ஸ்ரீநிவாஸ் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ஆனால் இதற்கு முழுமையாகப் பால சுப்ரமணியம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 

கேசிநேனி டிராவல்ஸ்

88 வருடமாக இயங்கி வரும் கேசிநேனி டிராவல்ஸ் நிறுவனத்தில் 170 ஆடம்பர பேருந்துகள் இயங்கி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்திற்குத் தொந்தமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டு தென் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் செய்து வருகிறது.

தற்போது ஸ்ரீநிவாஸ் அவர்களின் அறிவிப்பின் காரணமாக அலுவலகங்கள், பஸ்கள் அனைத்தும் முடங்கியுள்ளது.

 

விற்பனை

மேலும் இந்நிறுவனத்தில் இயங்கி வந்த 170 ஆடம்பர் பஸ்களும் தற்போது விற்பனை செய்யவும் கேசிநேனி டிராவல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தென் இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம் கேபிஎன், எஸ்ஆர்எஸ், ஆரஞ்சு எனப் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஊழியர்களும், மக்களும்...

நிறுவனத்தை மூட முன்கூட்டியே முடிவு செய்த ஸ்ரீநிவாஸ் கடந்த ஒரு வாரமாகப் புக்கிங் சேவையை முடக்கி வைத்தார், அதுமட்டும் அல்லாமல் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கும் பணத்தைத் திருப்பி அனுப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமை இரவு முதல் கேசிநேனி டிராவல்ஸ் முழுமையாக முடங்கியது. மேலும் பல இடங்களில் ஊழியர்கள் தங்களுக்கான சம்பள பணத்தை இன்னும் அளிக்கப்படவில்லை என்பதற்காகப் பிரச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

உண்மை

கேசிநேனி ஸ்ரீநிவாஸ், இந்த முடிவை உணர்ச்சி வசப்பட்டு எடுக்கவில்லை, திட்டமிட்டே செய்துள்ளார்.

காரணம் கேசிநேனி சமீப காலமாக அதிக லாபம் தரும் கார்கோ வர்த்தகத்தை வரிவாக்கம் செய்யவும், இதன் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் டிராவல்ஸ் வர்த்தகத்தை மூடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

கடன்

மேலும் தற்போது டிராவல்ஸ் வர்த்தகத்தில் இருக்கும் பஸ்கள் அதிகளவிலான கடனில் இயங்கி வருவதாகவும், மேலும் இதில் லாபம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு

தற்போது இந்தப் பிரச்சனையை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு நிறுவனத்தை முடியுள்ளதாக ஆந்திர டிராவல்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வாக்குவாதம் முற்றியது

மேலும் இந்தப் பிரச்சனை குறித்துப் பத்திரிக்கையாளர்கள் முன்பாகவே கேசிநேனி ஸ்ரீநிவாஸ் மற்றும் பால சுப்ரமணியம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்ட காட்சி.

நன்றி: என்டிவி தெலுங்கு

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kesineni Travels shut down after clash with bureaucrat

Kesineni Travels shut down after clash with bureaucrat - Tamil Goodreturns
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns