ஹைதராபாத் நிஜாம்-இன் ரூ.50,000 கோடி மதிப்பிலான நகைகள் ரிசர்வ் வங்கி கஜானாவில் முடங்கியது ஏன்..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஹைதராபாத் நகரம் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் அவர்களின் 131வது பிறந்த நாளை இந்த வாரம் கொண்டாடுவதற்காகத் தயாராகி வரும் நிலையில், 20 வருடங்களுக்கு அதிகமாகப் போராடிவரும் கோரிக்கை இந்த வருடமும் தலைதூக்கியுள்ளது.

ஒஸ்மான் அலி கான் அவர்களுக்குச் சொந்தமான 150 நகைகள் தற்போது டெல்லி ரிசர்வ் வங்கி கஜானாவில் முடங்கிக்கிடக்கிறது. இதனைத் தன் ஊருக்குக் கொண்டு வரவே இவரது வம்சாவளியினர் கடந்த 20 வருடமாக மத்திய மற்றும் மாநில அரசிடம் போராடி வருகின்றனர்.

20 வருடங்களுக்காகப் போராடவேண்டிய அவசியம் என்ன..? இந்த 150 நகைகளின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்.

வரலாறு..

1886, ஏப்ரல் 6ஆம் தேதி பிறந்த ஒஸ்மான் அலி கான், 1911-1948 வரையிலான காலத்தில் ஹைதராபாத் நகரத்தை ஆண்ட கடைசி நிஜாம். இவருக்குப் பல உயரிய பட்டங்களும், பதவிகளும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்

மார்டன் ஹைதராபாத்தின் ஆர்கிடெக்ட் ஆக அழைக்கப்படும் இவர், ஹைதராபாத் நகரத்திற்கு உயர் நீதிமன்றம், ஓஸ்மானியா பல்கலைக்கழகம், ஓஸ்மானியா பொது மருத்துவமனை, மோசாம் ஜஹி மார்கெட், டவுன் ஹால், ஹைதராபாத் மியூசியம் ஆகியவற்றை அளித்தார்.

 

 

இந்தியா-பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதில் ஹைதராபாத் இந்தியாவுடன் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவினைக்குப் பின் ஹைதராபாத் நகரத்தின் வளர்ச்சிக்காக இந்நகரத்தின் வளர்ச்சிக்காகப் பேகும்பெட் விமான நிலையத்தை அமைத்தார்.

 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்

1937ஆம் ஆண்டுப் பிப்.22ஆம் தேதி வெளியான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஒஸ்மான் அலி கான் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்துடன் இடம்பெற்றார்.

அந்தக் காலத்திலேயே இவரின் சொத்துமதிப்பு 2 பில்லியன் டாலர் என்ற அளவில் மதிப்பிடப்பட்டது. இன்று இது 30 பில்லியன் டாலராக இருக்கும்.

 

நகைகள்

மேலும் இந்த டைம் பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில் ஒஸ்மான் அலி கான் அவர்களுக்குச் சொந்தமான வைரம், மாணிக்கங்கள், நீலமணிக்கற்கள், முத்துக்கள் மற்றும் விலைமதிப்புடைய கற்களும், அவரைப் பதித்த நகைகள் அனைத்தும் 3 டாலர் (அன்றைய மதிப்பில்) மதிப்புடைய ஸ்டீல் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்திருந்தது.

பேப்பர்வெயிட்

எல்லோரும் பேப்பர்லெயிட் என்றால் கண்ணடியிலும், அல்லது பிளாஸ்ட் போன்றவிற்றில் பயன்படுத்துவார்கள். இவர் நிஜாம் என்பதால் 185 கேரட் கொண்டு வைரத்தை பேப்பர்வெயிட் ஆகப் பயன்படுத்தியுள்ளார்.

இதன் பெயர் ஜேக்கப் வைரம்.

 

ரிசர்வ் வங்கி

தற்போது கூறப்பட்ட அனைத்து நகைகள், வைரங்கள், ரத்தினங்கள் என அனைத்தும் தற்போது டெல்லியில் இருக்கும் ரிசர்வ் வங்கி கஜானாவில் உள்ளது.

தற்போது ஆர்பிஐ கஜானாவில் இருக்கும் பட்டியிலிடப்பட்ட நகைகளின் மதிப்பு மட்டும் 50,000 கோடி ரூபாய்.

 

1995ஆம் ஆண்டு

இந்திய அரசு 1995ஆம் ஆண்டு நிஜாம் குடும்பத்தின் அளவிற்கு அதிகமான சொத்துக்களை அரசு உடைமையாக்கியது. இப்போது இந்த நகைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி கைப்பற்றியது.

அன்றைய மதிப்பில் இது 218 கோடி ரூபாய் என்று அரசு பதிவு செய்துள்ளது. இன்று இது 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு வருகிறது.

 

மக்கள் பார்வை

மேலும் இந்த நகைகள் அனைத்தும் 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுப் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கே சந்திரசேகரன்

தற்போது கடைசி நிஜாம் அவர்களின் கொள்ளுப்பேரன் ஹிமாயத் அலி மஸ்ரா தெலுங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகரன் அவர்களிடம் அவரச சட்டத்தின் மூலம் நம்முடைய பாரம்பரிய நகைகளை நம் மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஹைதராபாத் நகரத்திலேயே மியூசியத்தில் இந்த நகைகளை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார் ஹிமாயத் அலி மஸ்ரா.

 

பணக்கார முதலமைச்சர்

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.. அப்படினா ஏழ்மையான முதலமைச்சர் யார்..?


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why are the jewels of Hyderabad last Nizam locked in an RBI vault

Why are the jewels of Hyderabad's last Nizam locked in an RBI vault - Tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns