வேலைக்கு சேர்ந்த நாள் முதல் சாகும் வரை.. வாழ சிறந்த இடம் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக அனைவருக்கும் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல நிறுவனத்தில் பணி புரிய வேண்டும், ஆயுள் முழுக்க நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். இப்படை பட்டவர்களா நீங்கள் உங்களுக்கு ஏற்றச் சிறந்த நகரம் எதி தெரியுமா..?

இந்தியாவிலேயே பெங்களூரு தான் வேலைக்குச் சேர்வது முதல் வாழக்கையை முழுவதும் நிம்மதியாக இருக்க ஏற்ற இடம் என்று குவார்ட்ஸ் அறிக்கை கூறுகின்றது.

வானிலை
 

வானிலை

பெங்களூரு என்றதன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஐடி நிறுவனங்கள் மற்றும் சிறந்த வானிலை. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். சரி குளிர்ச்சியாக இருந்தால் மட்டும் போதுமா? வேறு என்னவெல்லாம் சிறப்பு இங்கு உள்ளது என்று பார்ப்போம் வாருங்கள்.

வானிலை மட்டும் இல்லை சம்பளமும்

வானிலை மட்டும் இல்லை சம்பளமும்

இந்தியாவின் சிலிகான் வேலி என்ற அனைவராலும் அழைக்கப்படும் பெங்களூரில் வானிலை மட்டும் இல்லை பணிபுரியும் நிறுவனங்களில் நல்ல சம்பளம் பெறலாம். இந்தியாவில் தனிநபரின் சம்பளம் அதிகம் இருக்கும் ஒரு நகரம் என்றால் அது பெங்களூரு ஆகும் என்று எச்ஆர் கன்சல்டிங் நிறுவனமான ராண்ட்ஸ்டன் கூறுகின்றது.

டாப் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நகரங்கள்

டாப் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நகரங்கள்

ராண்ட்ஸ்டண்ட் நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு அதிகச் சம்பளம் வாங்கும் நகரங்களில் பெங்களூருவில் ஊழியர்களின் சராசரி சம்பளம் விகிதம் 14.6 லட்சம் ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் நிதி நகரம் எனப்படும் மும்பை 14.2 லட்சம் ரூபாயுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள ஹைதராபாத்தில் உள்ளவர்கள் 13.6 லட்சம் ரூபாய் சராசரி சம்பளமாகப் பெறுவதாக இந்த ஆய்வு கூறுகின்றது.

சென்னை உட்படப் பிற நகரங்கள்
 

சென்னை உட்படப் பிற நகரங்கள்

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ளவர்கள் சராசரியாக 13.5 லட்சம் ரூபாய் வருடச் சம்பளமாகப் பெறுகின்றனர். தமிழகத்தின் தலைநகரான நமது சென்னையில் சராசரியாக 13.4 லட்சம் ரூபாய் சம்பளமாகவும், பூனேவில் உள்ளவர்கள் 13.2 லட்சம் ரூபாயும், கொல்கத்தாவில் உள்ளவர்கள் 11.4 லட்சம் ரூபாயும் சராசரி ஆண்டுச் சம்பளமாகப் பெறுகின்றனர்.

15 வருட மூத்த அதிகாரிகளாக உள்ளவர்களின் சராசரி சம்பளம்

15 வருட மூத்த அதிகாரிகளாக உள்ளவர்களின் சராசரி சம்பளம்

பெங்களூரைப் பொருத்த வரை முத்த 15 வருட அதிகாரிகள் ஆண்டுக்குச் சராசரியாக 25 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றனர். இதுவே மும்பையில் 27 லட்சமாகவும், ஹைதராபாத்தில் 26.8 லட்சமாகவும், பூனேவில் 25.5 லட்சமாகவும் உள்ளது.

6 முதல் 15 வருடம் அனுபவம் உள்ளவர்களின் சராசரி சம்பளம்

6 முதல் 15 வருடம் அனுபவம் உள்ளவர்களின் சராசரி சம்பளம்

நகரங்களில் 6 முதல் 15 வருடம் அனுபவம் உள்ளவர்களின் சராசரி சம்பளத்தில் மும்பை 10.5 லட்சம் ரூபாயுடன் முதல் இடத்தையும், பெங்களூரு 10.4 லட்சம் ரூபாயுடன் இரண்டாம் இடத்தையும், சென்னை 10.3 லட்சம் ரூபாயுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

ஜூனியர் லெவல் ஊழியர்களின் சராசரி சம்பள அளவு

ஜூனியர் லெவல் ஊழியர்களின் சராசரி சம்பள அளவு

ஃப்ரெஷர்கள் முதல் 6 வருடம் வரை அனுபவம் உள்ள ஊழியர்களின் சராசரி சம்பள அளவில் பெங்களூரு 5.5 லட்சம் ரூபாயுடன் முதல் இடத்திலும், சென்னை 5.2 லட்சம் ரூபாயுடன் இரண்டாம் இடத்திலும், மும்பை 5.1 லட்சம் ரூபாயுடன் மூன்றாவது இடத்தையும், ஹைதராபாத் 4.9 லட்சம் ரூபாயுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

சரிவே முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டது

சரிவே முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டது

சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்து 1,00,000 ஊழியர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சர்வேயில் இருந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை, இந்தியாவில் படித்தவர்களில் அதிகம் இடம் பெயரும் நகரமாகப் பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் அனைத்திற்கும் இங்குக் கிளைகள் உள்ளது. அது மட்டும் இல்லாமல் பிளிப்கார்ட், ஓலா உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இங்கு இருந்து தான் இயங்கி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru is the best place in India to begin and end your career

Bengaluru is the best place in India to begin and end your career
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X