சண்டே ஆனா எங்களுக்கும் லீவ் வேண்டும்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நூதன போராட்டம்

சண்டே ஆனா எங்களுக்கும் லீவ் வேண்டும்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நூதன போராட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட்ரோல் நிலயங்களின் முதலாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் விற்பனை ஆணையத்தை உயர்தித்தரக் கூறி நீண்ட காலமாக அரசுக்குப் பல கோரிக்கைகளை வைத்துக் கொண்டு வருகின்றன.

 

ஆனால் அதற்கு அரசு பதில் அளிக்காததால் பெட்ரோல் நிலைய முதலாளிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளித்து நூதன போராட்டம் முடிவு செய்துள்ளன. இது வரை பெட்ரோல் நிறுவனங்களுக்கு விடுமுறை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது முதல் போராட்டம்

எப்போது முதல் போராட்டம்

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி மே 10-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கீழ்மைகளில் ‘வாங்கும் நாள் இல்லை' என்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் நிலையங்களின் கோரிக்கை

பெட்ரோல் நிலையங்களின் கோரிக்கை

ஜனவரி மாதம் பொதுத்துறை பெட்ரோல் நிறுவனங்கள் கமிஷன் விலையை உயர்த்தி அளிக்க உறுதி அளித்ததால் அப்போது நடக்க இருந்த போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது. ஆனால் இது வரை கமிஷன் தொகையை உயர்த்தி அளிக்காததால் பெட்ரோல் நிலையங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

இந்தப் போராட்டம் மே-10-ம் தேதி முதல் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இதன் தாக்கம் மே-14ம் தேதி முதல் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்.

 

இந்தியன் ஆயில்
 

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில் நிறுவனத்தைப் பொருத்த வரை டீலர்களுக்குக் கமிஷன் தொகை ஒரு லிட்டருக்கு 2.56 ரூபாய் அளிக்க வேண்டும், ஆனால் ஏப்ரல் 1-ம் தேதி லிட்டருக்கு 1.65 ரூபாய் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

அபூர்வா சந்திரா கமிட்டி அறிக்கை

அபூர்வா சந்திரா கமிட்டி அறிக்கை

அபூர்வா சந்திரா கமிட்டி அறிக்கை மேற்கோள்காட்டின படி டீலர்களுக்கு லிட்டர் பெட்ரோலுக்கு 3.33 ரூபாயும், டீசலுக்கு 2.13 ரூபாய் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எண்ணெய் நிறுவனங்கள் இந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்கவும் இல்லை, முறையாக அவர்களும் ஒரு தொகையை அறிவிக்கவும் இல்லை என்கிறார் ஷிண்டே.

இப்போது டீலர்களுக்கு 170 கிலோ லிட்டருக்கு 12,000 ரூபாயாக ஊதியம் இருக்கின்றது, இதனை 30,000 ரூபாயாக உயர்த்தக்கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் அரசு டீலர்கள் கமிஷன் குறித்து எந்த முடிவையும் அளிக்கவில்லை ஆனால் வாகன முதலாளிகளின் சுமையைப் பற்றி ஆராய்ந்து வருகின்றது.

 

தினமும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு

தினமும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு

சில நாட்களுக்கு முன்பு நாம் பெட்ரோல் நிறுவனங்கள் தங்கம்,வெள்ளி போன்று தினமும் பெட்ரோல் விலையை ஏற்ற இறக்க முயற்சித்து வருகின்றது என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

நன்மைகள்

நன்மைகள்

வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை அறிமுகப்படுத்தும் போது நிறைய நன்மைகள் உண்டு. இதனால் டீலர்களும் பயன்பெறுவார்கள் என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்திய எண்ணெய் சந்தை

இந்திய எண்ணெய் சந்தை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிடம் மட்டும் இந்தியாவின் 95 சதவீத சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol pumps threaten 'weekly off' every Sunday from 10 May as govt yet to decide on higher commission

Petrol pumps threaten 'weekly off' every Sunday from 10 May as govt yet to decide on higher commission
Story first published: Monday, April 10, 2017, 19:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X