ரூ.8 கோடி கருப்பு பணம் பரிமாற்றம்.. எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் செய்த மிகப்பெரிய மோசடி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரேலி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேலி நகரக் கிளையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்களில் சுமார் 8 கோடி ரூபாய் பணத்தை முறைகேடான வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டு வெள்ளையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்துச் சிபிஐ அதிகாரிகள் வங்கி அதிகாரிகள் மற்றும் குற்றவியல் சதி, ஏமாற்றுதல், ஊழல்களில் ஈட்டுப்பட்டுள்ள முக்கிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜனவரி 2
 

ஜனவரி 2

சிபிஐக்கு கிடைத்த தகவல் மூலம் உத்திர பிரதேசத்தில் இருக்கும் எஸ்பிஐ வங்கி கிளையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் சோதனையைத் துவங்கியது.

இந்தச் சோதனையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்த பின் அதாவது நவ. 8ஆம் தேதிக்குப் பின் இந்த வங்கிக் கிளையில் அதிகளவிலான பண வைப்பும், எக்கச்சக்கமான புதிய கணக்குகளும் திறக்கப்பட்டுள்ளதையும் கண்டுப்படித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் செயலற்று கிடந்த பல கணக்குகள் இக்காலகட்டத்தில் மீண்டும் செயல்பட்டு உள்ளதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2,441 கணக்குகள்

2,441 கணக்குகள்

இதன் படி சிபிஐ அதிகாரிகள் கடன் ஜனவரி 2ஆம் தேதி முதல் செய்து வந்த சோதனையில், 2016 நவ.8 முதல் டிச.31 வரையிலான காலத்தில் இந்த ஒரு வங்கி கிளையில் மட்டும் சுமார் 2,441 புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.

கணக்குகளின் விபரம்

கணக்குகளின் விபரம்

இதில் 667 சேமிப்புக் கணக்குகள், 53 நடப்பு கணக்குகள்ஷ 94 ஜன் தன் யோஜனா கணக்குகள், 50 பிபிஎப் கணக்குகள், 1,518 நிரந்த வைப்பு, 13 விழா கணக்கு, 2 மூத்த குடிமக்கள் கணக்குகள் மற்றும் 1 அரசு கணக்கு என மொத்தம் 2,441 கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. 267 செயலற்ற கணக்குகள் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணப் பரிமாற்றம்
 

பணப் பரிமாற்றம்

இந்தக் கணக்குகளில் சுமார் 794 முறை 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அளவில் பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சில கணக்குகளில் அதிகளவிலான பணமும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளின் உரிமையாளர்கள் பற்றிய விபரத்தை சிபிஐ தரப்பு அளிக்க மறுப்புத் தெரிவித்தது.

வங்கி அதிகாரிகள்

வங்கி அதிகாரிகள்

இக்குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்ட கணக்குகள் பெரும்பாலானவை வங்கி அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் திறக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் முறையற்ற வகையில் பணப் பரிமாற்றம், அதிகளவிலான வைப்பு, நாணய பரிமாற்றம் எனப் பல வேலைகளை எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

தணிக்கையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இக்காலகட்டத்தில் செய்யப்பட்ட பணப் பிறமாற்றங்களின் கணக்காளர் அறிக்கை, வைப்பு ரசீதுகள் என எதுவும் வங்கி அதிகாரிகள் வைத்துக்கொள்ளவில்லை. இதன் மூலம் இவர்கள் செய்த மோசடிகள் உறுதியாகியுள்ளது.

வழக்கு

வழக்கு

இந்நிலையில் இந்த மோசடிகளில் தொடர்புடைய பல வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ குற்றவியல் வழக்கைப் பதிவு செய்துள்ளது.

வங்கிகள் இணைப்பு

வங்கிகள் இணைப்பு

எஸ்பிஐ வங்கி தனது 5 துணை வங்கி மற்றும் பாரதிய மஹிளா வங்கி ஆகியவற்றை ஒன்றாக இணைத்ததன் மூலம் உலகளவில் வங்கி சேவையில் சிறந்து விளங்கும் டாப் 50 வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

இந்நிலையில் அடுத்தச் சில வருடங்களில் 30 இடங்களுக்குள் வர வேண்டும் என எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஏப்ரல் 1ஆம் தேதி கூறினால்.

மக்கள்

மக்கள்

வங்கிகள் இணைக்கப்பட்டு 1 மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பரேலி கிளையில் செய்யப்பட்ட மோசடி மக்கள் மத்தியில் இந்த வங்கியின் மதிப்பைக் குறைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI branch opened 2,000 accounts to channelise black money

SBI branch opened 2,000 accounts to channelise black money
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X