இவர் தான் இந்தியாவின் வாரன் பஃபெட்.. அப்படி இவர் என்ன செய்துவிட்டார்..?

கஷ்டப்பட்டால் நிச்சயம் பலன் உண்டு.. சொல்வது இந்தியாவின் வாரன் பஃபெட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச்சந்தை புரோக்கர் ராதாகிஷன் தாமணி என்பவரை எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் அவர் 2000-ம் ஆண்டு நிறுவிய D-Mart எனும் ரீடெயில் சூப்பர்மார்க்கெட் இன்று சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்புடையது என்றால் நம்புவீர்களா.?

ஆம், இன்று இவர் அனில் அம்பானி மற்றும் ராஹுல் பஜாஜை காட்டிலும் பணக்காரர் என்பதையும் நாம் அறியவேண்டும். அவர் இந்த வளர்ச்சியை எளிமையாகவோ, அதிர்ஷ்டத்தால் அடையவில்லை.

ராதாகிஷன் தாமணி

ராதாகிஷன் தாமணி

பங்குச்சந்தையில் நுழைய எண்ணமில்லாமல் இருந்தவர் தாமணி. பால் பியரிங்க்ஸ் துறையில் சாதாரண வர்த்தரகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தந்தையின் இறப்புக் காரணமாக அதை மூடிவிட்டு சகோதரருடன் ஸ்டாக் ப்ரோகிங் நிறுவனத்தில் சேரும் நிலை ஏற்பட்டது.

தாமணிக்கு பங்கு சந்தைக் குறித்த எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் அதில் சேர்ந்ததும் அத்துறை பற்றித் தீவிரமாகத் தெரிந்து கொண்டு, சந்திரகாந்த சம்பத் என்ற பிரபல முதலீட்டாளரை தன் முன்மாதிரியாகக் கொண்டு பங்குச்சந்தை வர்த்தகத்தில் அறிவை பெருகிக் கொண்டார் தாமணி.

 

 தோல்விகள்

தோல்விகள்

பல தோல்விகளைச் சவால்களைச் சந்தித்தாலும், மனம் தளராமல், தனக்கான ஒரு தனி ஸ்டராடஜியை வகுத்து பணிபுரியத் தொடங்கினார். அவர் எப்போழுதும் நீண்ட நாள் பலன்கள் மீது நம்பிக்கை உடையவர்.

அது அவருக்குச் சாதகமாக அமைந்து, ஒரு சில ஆண்டுகளில், மும்பை தலால் தெருவில் ஒரு மிகப்பெரிய நபராக உருவெடுத்தார்.

 

90களில் செழிப்பு..

90களில் செழிப்பு..

தன் தொழிலில், எந்தவிதமான ஈகோ மற்றும் பிரச்சனைகளை வரவிடாமல் பார்த்துக்கொண்டார். 90-களில் மாபெரும் செல்வத்தை ஈன்று ஒரு உயரிய இடத்தை அடைந்தார் தாமணி.

மிஸ்டர்.வொயிட்

மிஸ்டர்.வொயிட்

மிஸ்டர்.வொயிட் என்று அழைக்கப்பட்ட தாமணி எப்போதும் வெண்ணிற உடையில் வலம் வருவார். பிரபல ஸ்டாக் மார்க்கெட் கிங் ஹர்ஷத் மெஹ்தாவின் நேரடி எதிரியாகவும் தாமணி இருந்தார்.

இருவருக்கிடையே ஆன போட்டியில் வெற்றிபெற்று பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் தலைசிறந்தவராக இறுதியில் உருவெடுத்தார் ராதாகிஷன் தாமணி.

 

முக்கியப் பங்கு முதலீடுகள்

முக்கியப் பங்கு முதலீடுகள்

61 வயதான இவர் ராதாகிஷன் தாமணி, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ல் 82.36 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளார், இதன் மதிப்பு ரூ.32,934 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதைத்தவிர விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், டிவி18, சோமானி செராமிக்ஸ், ஜெய் ஸ்ரீ டீ, சாம்டெல், சுந்தரம் பாஸ்டனர்ஸ், ஜிஇ கேப்பிடல் மற்றும் 3M இந்தியா போன்ற பல நிறுவனங்களில் இவர் பங்குகள் வகிக்கிறார்.

ரீடைல் சந்தை

ரீடைல் சந்தை

2000-ம் ஆண்டு இந்தியாவில் ரீடைல் சந்தை மிகப்பெரிய அளவில் சரிவை அடைந்தது. மும்பை, டெல்லி எனப் பல இடங்களில் இயங்கி வந்த பெரிய சூப்பர்மார்கெட் நிறுவனங்கள் மூடப்பட்டு வந்த நிலையில், இத்துறையில் மீது இருந்த அதிகப்படியான நம்பிக்கையின் காரணம் பங்குச்சந்தை முதலீட்டை முதலீட்டு உடன் சூப்பர்மார்கெட் வர்த்தகத்தில் இறங்கினார் ராதாகிஷன் தாமணி.

117 கிளைகள்

117 கிளைகள்

இதன் படி 2000-ம் ஆண்டு D-Mart சூப்பர்மார்க்கெட்-ஐ துவங்கினார். இந்நிறுவன கிளைகள் அனைத்தும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் (ASL) கீழ் செயல்பட்டு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் என்சிஆர் உட்பட 117 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

தாமணி அவர்களுடைய போட்டியாளர்களை விட எப்படி வேகமாக வளர்ந்தார்

குறிப்பிட்ட பங்குசந்தையாளர்களான ஸ்பென்சர்ஸ் (சஞ்ஜவ் கொக்னா குருப்), மோர் ஸ்டோர் (ஆதித்தியா பிர்லா ரீடெயில்) ஸ்டார் பஜார் (டாட்டா குரூப்) மற்றும் சாப்பர்ஸ் ஸ்டாப் ஆகிய நிறுவனங்கள் லாபத்தை அளிக்கும் வர்த்தகத்தை உருவாக்க இன்னமும் தவித்து வருகின்றனர்.

 

எப்படி இது சாத்தியமானது?

எப்படி இது சாத்தியமானது?

ஆனால் டி-மார்ட் இத்தகைய குறுகிய காலத்தில் லாபத்தைப் பெற்றது எப்படி?

மற்ற எல்லாக் கடைகளை விடவும் டி-மார்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை அளித்தது. அது எந்த ஊராக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட கடையாக இருந்தாலும் சரி.

பொதுவாகவே மற்றவர்களைவிட டி-மார்ட்டில் பொருட்களின் விலையில் 6-10% குறைவாக இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் டி-மார்ட் ஸ்டோர்ஸ் அமைக்கப்பட்டிருந்த இடங்கள் அனைத்தும் அதனுடைய சொந்த இடங்கள் தான். இதனால் ஒவ்வொரு மாதமும் வாடகை என்ற பெயரில் செலவிடப்படும் மிகப்பெரிய தொகை குறையும் என்பது தாமணி -யின் கருத்து.

 

தொடர் லாப உயர்வு

தொடர் லாப உயர்வு

இதனால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் சரி, வர்த்தகமும் சரி தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.35,775 கோடி சொத்து

ரூ.35,775 கோடி சொத்து

தாமணி தற்போது 5.4 பில்லியன் டாலர் (ரூ.35,775 கோடி) சொத்துக்கு அதிபதி என்று ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர், உலக அளவில் உள்ள முதல் 15 இந்திய பில்லினியர்களில் ஒருவர் என்றும் கூறியுள்ளது.

ராடிசன் ப்ளூ ரிசார்ட்

ராடிசன் ப்ளூ ரிசார்ட்

இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று அழைக்கப்படும் தாமணியின் சொத்துக்களில், மும்பையின் அலிபாகில் 156 அறைகள் கொண்ட பிரபல ராடிசன் ப்ளூ ரிசார்ட் அடங்கும் என்றும் ஃபோர்ப்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எளிமையான மனிதர்

எளிமையான மனிதர்

இத்தனை உயரிய இடத்தில் இருந்தும், தாமணி ஊடகங்களின் வெளிச்சத்தில் அதிகம் வராத ஒரு எளிமையான மனிதராகவே உள்ளார். அவரின் வெற்றிக்கு இதுவே காரணம் என்றும் கூடச் சொல்லலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet India’s Warren Buffett

Meet India’s Warren Buffett
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X