டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க புதிய ‘பிஎச்ஐஎம்-ஆதார்’ முறையை அறிமுகப்படுத்துகிறார் மோடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மேலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிஎச்ஐஎம்-ஆதார் இணைக்கப்பட்ட புதிய பணப் பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்துகிறார்.

ஸ்மார்ட்போன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவையைப் பயன்படுத்தாதவர்களும் இந்தப் பிஎச்ஐஎம்-ஆதார் பணப் பரிவத்தனை மூலமாகப் பரிவர்த்தனை செய்யலாம் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகின்றது.

புதிய பிஎச்ஐஎம்-ஆதார் செயலி
 

புதிய பிஎச்ஐஎம்-ஆதார் செயலி

பிஎச்ஐஎம்-ஆதார் செயலி திட்டம் மட்டும் இல்லாமல் கேஷ்பேக் மற்றும் பரிந்துரை போனஸ் உள்ளிட்ட திட்டங்களை இன்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்துவார் என்று கூறப்படுகின்றது.

பிஎச்ஐஎம் செயலி

பிஎச்ஐஎம் செயலி

பாரத் இண்டர்ஃபேஸ் ஃபார் மணி அல்லது பிஎச்ஐஎம் செயலி என அழைக்கப்படும் செயலியைப் பிரதமர் மோடி செல்லா ரூபாய் நோட்டுள் பிரச்சனைகளுக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.

அம்பேத்கர் பிறந்த நாள்

அம்பேத்கர் பிறந்த நாள்

இன்று நாக்பூரில் 126-வது அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாகப் பிரதமர் மோடி பிஎச்ஐஎம் செயலியை அறிமுகப்படுத்துகிறார். இந்தப் புதிய செயலியின் மூலமாக டிஜிட்டல் முறையிலும், பயோமெட்ரிக் தரவு பயன்படுத்தியும் வணிகர்களுக்கு எளிதாகப் பணத்தை அனுப்பலாம்.

பரிசு மழை
 

பரிசு மழை

டிஜி தன் லக்கி கிரக் மற்றும் டிஜிதன் வியாபார் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பரிசு அறிவிக்கப்பட்டவர்களும் இன்று தங்களது பெரிசை நரேந்திர மோடி அளிப்பார். இந்த முறை மேலும் மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் என்று கூறப்படிகின்றது.

பிஎசிஐஎம் செயலியில் ஏற்கனவே 27வங்கிகள் இணைந்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் இன்னும் பிற வங்கிகளும் இந்தச் செயலியில் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கேஷ் பேக் மற்றும் பரிந்துரை போனஸ்

கேஷ் பேக் மற்றும் பரிந்துரை போனஸ்

கேஷ் பேக் மற்றும் பரிந்துரை போனஸ் திட்டங்களுக்காக 495 கோடி ரூபாய் வரை யாரெல்லாம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஏற்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் இந்தியா எனப்படும் NPCI மூலம் வழங்கப்படும்.

உயர்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு

உயர்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

மார்ச் மாதம் வரை மொத்தம் 63.80 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் இதன் மதிப்பு 2,425 கோடி ரூபாய் என்றும் 2016 நவம்பர் மாதம் வரை 2,80,000 பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் அதன் மதிப்பு 101 கோடி ரூபாய் நடந்துள்ளதாகவும் நிதி ஆயோக் அறிக்கை கூறுகின்றது.

செல்லா ரூபாய் நோட்டு சிக்கலுக்குப் பிறகு நவம்பர் மாதம் 2.5 கோடியாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு இப்போது மார்ச் மாதம் வரை 5 கோடியாக உயர்ந்துள்ளது.

பிஎச்ஐஎம் செயலி பதிவிறக்கம்

பிஎச்ஐஎம் செயலி பதிவிறக்கம்

பிஎச்ஐஎம் செயலியை அறிமுகப்படுத்தியதில் இருந்து 1.9 கோடி நபர்கள் 4 மாதத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi To Launch New BHIM-Aadhaar Platform To Boost Digital Payments

PM Modi To Launch New BHIM-Aadhaar Platform To Boost Digital Payments
Story first published: Friday, April 14, 2017, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X