இனி தள்ளுவண்டி கடையில் கூட இண்டர்நெட் பெறலாம்.. அட 10 ரூபாதாங்க..!!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இணையதளத் தரவு பயன்படுத்த விரும்புபவர்கள் குறைந்த விலையில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள கடைகள், தெருவில் உள்ள தள்ளுவண்டி கடைகள், ரோட்டுக்கடைகள் என அனைத்து இடங்களில் இருந்து வைப்பை தரவை வாங்கிப் பயன்படுத்தலாம்.

டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் பப்ளிக் டேட்டா ஆஃபிஸ்(பிடிஓ)எனப்படும் 50,000 ரூபாய் மதிப்பிலான குறைந்த விலையில் வைஃபை தரவு அளிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

பிடிஓ என்றான் என்ன?

பப்ளிக் டேட்டா ஆஃபிஸ்(பிடிஓ) எனப்படும் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தித் தெருவில் கடை வைத்திருப்பவர்கள், ரோட்டுக் கடைக்காரர்கள் அனைவரும் 10 ரூபாய் விலையில் வைஃபை தரவு வவுசர்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

இலவச லைசன்ஸ் ISM

பிடிஓ சேவை இலவச லைசன்ஸ் ISM (தொழில்துறை, அறிவியல் மற்றும் மருத்துவம்) பேண்டு மூலமாக வழங்கப்படும். மத்திய அரசின் டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் தொலைத்தொடர்பு துறை ஆராய்ச்சி மையம் மற்றும் வளர்ச்சி மையம் இந்தச் சேவை பற்றி இன்று வெளியிடுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செயல்பட இருக்கும் முறை

இதற்கான டெக் உதவிகள், வைஃபை வசதியுடன் வன்பொருள் மற்றும் மென்பொருள் கூறுகள் வாடிக்கையாளர்கள் ஆவணங்களைப் பெறக் கூடிய மையங்கள், ஒரு முறை கடவுச் சொல் அளிக்கும் தொழில்நுட்பம் அனுமதி மற்றும் வவுச்சர்கள் நிர்வகிக்கும் முறை போன்றவற்றை இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் மின்னணு சேவை மூலமாகப் பில்லிங் அமைப்பும் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

அனைத்து மூலை முடுக்குகளிலும் இணையதளம்

இன்று டிஜிட்டல் இந்தியா, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் வர வில்லை. ஆனால் இந்தப் பிடிஓ முறையினால் குறைந்த விலையில் அனைத்து மூலை முடுக்குகளிலும் இணையதள வைஃபை சேவை கிடைக்கும் என்று டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் நிர்வாகத் தலைவர் விபின் தியாகி கூறினார்.

தொழில்நுட்ப சாதனங்கள் யார் உருவாக்கப் போகிறார்கள்

டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் விரைவில் இந்தப் பிடிஏ திட்டத்திற்கான தொழில்நுட்பத்தைப் பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ், ஐடிஐ லிமிடட், ஹிமாசல் ஃபியூச்சரிடிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் உட்பட 20 நிறுவங்களுக்கு அளிக்க இருக்கின்றது.

இவர்கள் இந்தத் தொழில்நுட்பத்திற்கான சாதனங்களை உருவாக்குவார்கள், இதனை அனைத்து கடைக்கார்களும் வாங்கி டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் அளிக்கும் 2.4 GHz மற்றும் 5.8 GHz பேண்டுகள் உதவியுடன் வைப்பை சேவையை அளிக்க முடியும்.

 

டிராய் கோரிக்கை

சென்ற மாதம் டிராய் டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தை அழைத்து இண்டெர்னெட் சேவை வழங்குநர் விதிகளை மேலும் தளர்த்தப்பட்டு வைஃபை சாதனங்கள் மூலமாகச் சேவையைப் பொது இடங்களில் அளிக்கும் முறையை அறிமுகம் செய்து பிராட்பேண்டு சேவையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

லைசன்ஸ் இல்லாமல் வணிகம்

அதற்காக டெலிமாட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் இந்தப் பிடிஓ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து பொது இடங்களில் வைஃபை சேவையை லைசன்ஸ் இல்லாமல் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்துகின்றது. இதற்காகப் பொது இடங்களில் வைஃபை சேவையை அளித்து வரும் சிறு வணிகர்களுடன் இணைந்து அவர்களுக்கு இந்தப் பிடிஓ சாதனங்களை அளிக்கவும் டிராய் முடிவு செய்துள்ளது.

வேலை வாய்ப்பு

இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும், கிராமப்புறங்களிலும் வணிகர்கள் அதிகரிப்பார்கள். பொது இடங்களிலில் வைஃபை சேவை அளிக்கும் அங்கீகாரத்தை நிர்வகித்தல் மற்றும் பணம் செலுத்தும் செயல்முறைகளை நிர்வகிப்பதற்காக மூன்றாம் தறப்பு சேவை வழங்குநர்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Soon you can buy Wi-Fi data from street vendors

Soon you can buy Wi-Fi data from street vendors
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns