100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மோசமாக செயல்படும் தமிழ்நாடு.. காரணம் மாநில அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

100 நாள் வேலை வாய்ப்பு திட்டமான ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணிகள் பாஜக ஆட்சி செய்யாத தமிழகம், மேற்கு வங்கம், ஓரிசா உள்ளிட்ட மாநிலங்களில் தான் பின் தங்கியுள்ளதாகவும், சம்பளமும் முறையாக அளிக்கப்படுவதில்லை.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்பது முந்தைய காங்கிரஸ் ஆட்சியும் போது அனைவருக்கும் வேலை அளிக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்

தமிழக அரசு
 

தமிழக அரசு

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் தமிழக அரசு மட்டும் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை பயன்படுத்துகின்றது என்றும் அதில் 90 சதவீதம் வரை சம்பளம் முறையான தேதிகளில் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்

கிராமப்புற வளர்ச்சி பணிகளுக்கான அமைச்சகத்தின் தரவின் படி பாஜக ஆட்சி செய்யும் சட்டிஸ்கர் மாநிலத்தில் 80 சதவீதம் வரை தாமதகச் சம்பளம் அளிக்கப்படுகின்றது என்றும், இரண்டு மாதங்கள் முன்பு வரை உத்திர பிரதேசத்தை ஆட்சி செய்து வந்த சமாஜ்வாதி கட்சி காலத்தில் 78 சதவீதம் வரை காலத் தாமதமாகச் சம்பளம் அளிக்கப்பட்டு வருகின்றது.

மிக மோசமாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள் பட்டியல்

மிக மோசமாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள் பட்டியல்

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் மிக மோசமாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள் பட்டியலில் மேற்கு வங்கம், ஒரிசாவுடன் தமிழகம் இடம்பெற்று இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள்
 

சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் 90 சதவீதம் சரியான நேரத்தில் சம்பளம் அளிப்பதாகவும், தெலுங்கானா 85 சதவீதம் சரியாகச் சம்பளம் அளிப்பதுடன் இரண்டாம் இடத்திலும் பிடித்துள்ளன.

பின் தங்கியுள்ள மாநிலங்கள்

பின் தங்கியுள்ள மாநிலங்கள்

ஊரக வேலை வாய்ப்பின் மொத்தம் 20.18 சதவீதம் தொகை பெறும் தமிழகம் 90.6 சதவீதம் வரை சம்பளத்தைத் தாமதமாக அளித்து வருகின்றது. இதே நேரம் சட்டிஸ்கர் மாநிலத்திடம் 4.79 சதவீதமும், அதில் 80.33 சதவீதம் வரை தாமதகச் சம்பளம் அளித்து வருகின்றது.

6.04 சத0வீதம் வரை மட்டுமே ஊரக வேலை வாய்ப்பின் கீழ் பங்குகளை வைத்திருக்கும் உத்தரபிரதேசம் 77.82 சதவீதம் வரை சம்பளத்தைக் காலதாமதாக அளிக்கின்றது. மேற்கு வங்க அரசு 7.32 சதவீதம் மட்டுமே ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பங்கு வகிக்கின்றது, ஆனால் 75.85 சம்பளத்தைத் தாமதமாக வழங்குகின்றது. ஓரிசா அரசிடம் 3.3 சதவீதம் மட்டுமே பங்கு உள்ள நிலையில் 65.77 சதவீதம் சம்பளம் காலதாமதமாக வழங்கப்படுகின்றது.

மொத்த மாநிலங்களின் பரிவர்த்தனை அளவு

மொத்த மாநிலங்களின் பரிவர்த்தனை அளவு

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் மொத்தம் 17 மாநிலங்கள் பங்கேற்று 95 சதவீதம் வரை பரிவர்த்தனைகளைச் செய்து வருகின்றன. அதில் 2016-2017 நிதி ஆண்டில் சராசரியாக 46 சதவீதம் வரை சம்பளம் தாமதக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிரடி முடிவு

மத்திய அரசு அதிரடி முடிவு

2017-ம் ஆண்டுத் தாமதகச் சம்பளம் அளிப்பதைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக விதிகளை மிகவும் கடுமையாக்கவும், மிகவும் தாமதப்படுத்தும் அரசுகளிடம் இருந்து கணக்கு விவரங்களைப் பெற்று மத்திய அரசே பராமரிக்கவும் முடிவு செய்துள்ளது. மத்திய அரசு இது குறித்து மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் கீழ் பணம் வழங்கப்படும் போது 7 நாட்களில் சம்பளம் அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

வங்கிகளுடன் ஆலோசனை

வங்கிகளுடன் ஆலோசனை

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியைத் தேவைப்படும் போது எளிதாகப் பெறவும் அரசு வங்கிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றது. 2016-2017 நிதி ஆண்டில் 47 சதவீதம் பரிவர்த்தனைகள் மட்டுமே 15 நாட்களுக்குச் செய்யப்பட்டுள்ளது.

2017-2018ம் ஆண்டிற்கான நிதி

2017-2018ம் ஆண்டிற்கான நிதி

2017-2018ம் நிதி ஆண்டிற்காக 23,443 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு முதற்கட்டமாக அளித்துள்ளது, இது ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான மொத்த பட்ஜெட்டில் பாதியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu, UP and Bengal lagged in NREGS payments in FY17

Tamil Nadu, UP and Bengal lagged in NREGS payments in FY17
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X