ஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு வங்கியில் கூட கடன் கிடையாது..சென்னை தப்பித்தது..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மொபைல் செயலி மூலமாக டாக்ஸி சேவை அளிப்பதற்காக வாகன கடன் பெறுபவர்கள் அதிகளவில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று அவர்களுக்கு அளித்த கடனை திருப்பிப் பெறுமாறும் இந்தியாவில் அதிக அளவில் வாகன கடன் அளிக்கும் நிறுவனத்திற்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஓலாவில் இணைத்து டாக்ஸ் சேவை அளிப்பதற்காக வாகன பெற்ற ஓட்டுநர்களில் ஐந்தில் ஒரு பங்கு செலுத்தவில்லை. தென் இந்தியாவில் ஓலா மூலம் டாக்ஸி சேவையை அதிகளவில் பயன்படுத்தும் ஒரு நகரம் என்றால் அது பெங்களூரு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு

பெங்களூருவில் மட்டும் 60 கோடி ரூபாய் வாகன கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கின்றது என்று மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் தலைமை பொது மேலாளர், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் அதிகாரியாக இருக்கும் கோபல் கிருஷ்ணன் கன்சல் கூறினார்.

ஹைதராபாத் மற்றும் சென்னைக்குப் பிரச்சனை இல்லை

இதனால் தான் கடந்த சில மாதங்களாக ஓலா நிறுவன ஓட்டுநர்களுக்கு வாகன கடன் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே நேரத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னையில் 7 சதவீதம் நபர்கள் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பதால் அங்கு மட்டும் கடன் அளிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

பிற நிதி நிறுவாங்கள்

ஐசிஐசிஐ வங்கி, மகேந்திரா ஃபினான்ஸ், டாடா மோடார்ஸ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஓட்டுநர்களுக்கு வாகன கடன் அளிப்பதாகவும் துறை சார்ந்த ஆய்வாளர்கள் மதிப்பீடுள்ளனர். இது குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் ஐசிஐசிஐ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஓலா மற்றும் உவர் நிறுவனங்களும் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் ஏதும் தரவில்லை.

வருமானம் குறைந்தது

ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஊக்கத்தொகை போன்றவற்றைக் குறைத்ததைத் தொடர்ந்து ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அதனால் அதான் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களி வாகன கடன் பெற்ற ஓட்டுநர்கள் கடனை திருப்பிச் செலுத்துவது குறைந்துள்ளது என்றும் வங்கிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெரிய பாதிப்பு இல்லை

வாகன கடன் பெற்ற ஓட்டுநர்கள் கடனை திருப்பிச் செலுத்தாததால் இது வரை பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் ஆனால் நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டு இருக்கின்றது என்றும் மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். பொதுவாக இந்த வாகன கடன்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாக உள்ளதாகவும், டாடா இண்டிக்கா, டொயாட்டா இட்யோஸ் அல்லது மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்கள வாங்கியவர்கள் என்றும் கூறினார்.

ஊக்கத்தொகை

ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் போட்டியின் அடிப்படையில் 70,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அதிக ஊக்கத்தொகையை முதலில் வழங்கி வந்தன. ஆனால் இப்போது அது 40,000 முதல் 50,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

500 முதல் 600 கோடி வரை இழப்பு

கடந்து மூன்று ஆண்டுகளாக இரண்டு நிறுவனங்களும் அதிகளவில் முதலீடு செய்து வந்ததை அடுத்து இப்போது அதனைக் குறைத்தும் வருகின்றன. ரேடியோ டாக்சிகள் சங்கம் சென்ற ஆண்டுச் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு அளித்த கடிதத்தில் ஒவ்வொரு மாதமும் 500 முதல் 600 கோடி வரை இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளினால் இழப்பைச் சந்தித்து வருகின்றன என்று குறிப்பிட்டு இருந்தது.

ஓலா ஓட்டுநர்களுக்குச் சிக்கல்

வங்கிகள் மற்றும் துறை சார்ந்த நிர்வாகிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் கூறியதை வைத்துப் பார்க்கும் போது ஓலா நிறுவனத்தில் கார் இணைத்துள்ள ஓட்டுநர்கள் தான் அதிக அளவில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், உபர் நிறுவனத்தில் சற்றுக் குறைவு தான் என்று தெரிய வந்துள்ளது.

வாலெட்

பொதுவாக இந்த டாக்ஸி செயலி நிறுவனங்கள் வாகன கடன் பெற்று இருந்தால் வாலெட் மூலமாகப் பெற்ற கடனிற்கான தொகையைப் பிடித்தம் செய்து அளித்துவிடும். ஆனால் பணமாகச் செலுத்தி வாடிக்கையாளர்கள் பயணம் செய்யும் போது தான் சிக்கல் ஏற்படுகின்றது.

பெங்களூரு, டெல்லி தவிர்த்து பிற நகரங்களின் நிலை

எஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் பெங்களூரு, டெல்லியைத் தவிர்த்து 1,300 வாகனங்களுக்கு 35 கோடி கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதில் 1 சதவீதம் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று கூறுகின்றது.

அதிக வாகனம் அதிகச் சிக்கல்

ஓலா நிறுவனம் தங்களது நிறுவனத்திற்க வாகனத்தை வைத்துள்ளவர்கள் அதிகளவில் கடனை திருப்பிச் செலுத்தாததை ஒப்புக்கொண்டு உள்ளது அதே நேரம் ஓலா நிறுவனத்தில் தான் அதிகக் கார்களை ஓட்டுநர்கள் இணைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓலா மற்றும் உபர் நிறுவனங்களில் இணைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை

ஓலா நிறுவனம் 102 நகரங்களில் சேவை அளிக்க 5.5 லட்சம் ஓட்டுநர்களைத் தங்களது செயலியில் இணைத்துள்ளது. அதே நேரம் உபர் நிறுவன 29 நகரங்களில் 4 லட்சம் வாகனங்களை மட்டுமே இணைத்துள்ளது.

பணமாகக் கடனை திருப்பி அளிப்பவர்கள் தான் அதிகம்

ஓலா நிறுவனத்தின் ஓட்டுநர்கள் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தும் போது பணமாகத் தான் அதிக அளவில் செலுத்துகிறார்கள் என்றும் இது பெங்களூரில் பதிவு செய்யப்பட்டு உள்ள 50,000 கார்களின் ஓட்டுநர்களிடம் இருந்து பெற்ற தரவை வைத்துக் கூறப்படுகின்றது.

கண்டறிந்து பரிமுதல்

வாகன கடன் பெற்ற ஓட்டுநர்களைக் கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற கண்டறிந்து வாகனத்தைப் பரிமுதல் செய்து பிறருக்கு விற்கும் முடிவை எஸ்பிஐ வங்கி எடுத்துள்ளது என்று கன்சால் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jolt for Ola, Uber as banks decide to stop disbursing loans to drivers

Jolt for Ola, Uber as banks decide to stop disbursing loans to drivers
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns