மக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..?!

Written By:
Subscribe to GoodReturns Tamil

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இதுநாள் வரை பணக்காரர்கள் முதல் ஏழை எளியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி சேவை அளித்துவந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வங்கியில் பணக்காரர்களை விடச் சாமானிய மக்களின் வங்கி கணக்குக்களே அதிகம்.

இத்தகைய சூழ்நிலையில் எவ்விதமான தயக்கமுமின்றி அனைத்து வங்கி கணக்குகளிலும் 5000 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை குறைந்தபட்ச மினிமம் பேலேன்ஸ் வைக்க வேண்டும் இல்லையெனில் இதற்கு அபராதமாக 100 ரூபாய் வரை கணக்கில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இணையப் போராளிகள்

இந்த அறிவிப்பை அடுத்த மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் வந்தது. குறிப்பாகச் சமுக வலைத்தளங்களில் எஸ்பிஐ வங்கியை எதிர்த்து மக்கள் போராட்டமே நடத்தினார்கள் என்று கூடச் சொல்லலாம்.

வங்கிகள் இணைப்பு

ஆனால் எதற்கும் மன தளராமல் எஸ்பிஐ வங்கி, தனது 5 துணை வங்கிகளையும் இணைந்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் வங்கி சேவை அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றும் வலிமையாய் நிற்கிறது

இந்த இணைப்பினால் தற்போது எஸ்பிஐ வங்கி மட்டுமல்லாமல் 5 துணை வங்கிகள், பாரதிய மஹிளா வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் புதிய விதிமுறைகள் பொருந்தும் என்பது வருத்தமான செய்தி.

 

பொதுத்துறை வங்கி

தனியார் வங்கிகளில் அதிகக் கட்டணம் என்பதற்காகவே மக்கள் பொதுத்துறை வங்கிகளை வங்கி சேவைக்காக நாடியிருக்கும் நிலையில் மக்கள் நலனை மதிக்காமல் இத்தகைய அறிவிப்பை விதித்தது மட்டும் அல்லாமல் அதனை முழுமையாக அமல்படுத்தியுள்ளது.

மத்திய அரசும், நிதியமைச்சகமும்

இதைத் தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசும் நிதியமைச்சகமும், தமிழ்நாடு விவசாயிகள் போராட்டத்தைப் போலவே முக்கிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறது.

நாட்டின் பொருளாதாரம்

மத்திய அரசோ டிஜிட்டல் இந்தியா, பணமதிப்பிழப்பு என மக்களை ஒரு வகையில் பாடுபடுத்தினாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏதுவாக இயங்கும் நிலையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முழுமையாகச் சீர்குலைக்கும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இயங்கி வருகிறது. இது எந்த வகையில் நியாயம்.

கட்டண வசூல்

வங்கிகள் தற்போதைய நிலையில் பல வகையில் மக்களிடம் இருந்து கட்டணமாகப் பணத்தை வசூல் செய்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மினிமம் பேலேன்ஸ் கட்டுப்பாடுகளில் துவங்கி, டெபிட் கார்டு பணப் பரிமாற்றம் கட்டணம், டெபிட் கார்டு கொண்டு ஏடிஎம்-இல் குறிப்பிட்ட முறைக்குமேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம், மின்னணு பரிமாற்றத்திலும் சேவை கட்டணம், டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு பயன்படுத்த கட்டணம், ஒவ்வொரு வருடத்திற்கும் இணைய வங்கி சேவை பயன்பாட்டிற்காகக் கட்டணம் எதற்கெடுத்தாலும் கட்டணத்தை வசூல் செய்து வருகிறது.

இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்ட நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி மினிமம் பேலேன்ஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

மட்டமான சேவை

சரி இத்தனை கட்டணங்களை விதித்தாலும் சேவை சிறப்பாக உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை, பன்னாட்டு வங்கிகளை ஒப்பிட வேண்டாம். இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகக் கூட எஸ்பிஐ வங்கி சேவையை அளிக்கவில்லை.

குறிப்பாக வங்கியில் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் காட்டும் மெத்தனம், மட்டமான வாடிக்கையாளர் சேவை. சரியாக இயங்காத இணைய வங்கி சேவை எனப் பல இடங்களில் எஸ்பிஐ வங்கியின் சேவை மிக மோசமாக உள்ளது.

 

பிற வங்கிகள்

எஸ்பிஐ வங்கியைப் போலவே பிற தனியார் வங்கிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சொல்லப்போனால் எஸ்பிஐ வங்கியை விட அதிகமாகவே வசூல் செய்கிறது.

ஆனால் இதன் சேவை மற்றும் அதன் தரத்தை ஒப்பிடுகையில் ஸ்டேட் வங்கியை விடப் பல மடங்கு அதிகம். இதுநாள் வரை தனியார் வங்கிகளை ஏன் கேட்டவில்லை என்று நீங்கள் கேட்கலாம்.

 

சாமானியர்கள்

கணக்கைத் துவங்கும் முன்னரே இந்த வங்கியில் மினிமம் பேலென்ஸ், கட்டணங்கள் என அனைத்தையும் தெரிந்த பின்பே இத்தகைய தனியார் வங்கிகளில் மக்கள் கணக்கை திறக்கின்றனர். மேலும் தனியார் வங்கிகளில் சாமானியர்கள், ஏழை எளியோர் கணக்கை திறப்பதில்லை.

ஜீரோ பேலேன்ஸ்

மேலும் அதிகளவிலான மக்கள் தங்களது கணக்கை திறக்கும் போது ஜீரோ பேலென்ஸ் கணக்காக மட்டுமே திறந்த நிலையில் தற்போது இப்புதிய கட்டுப்பாடுகள் பல லட்ச மக்களைப் பாதிக்க உள்ளது.

ஜன் தன் யோஜ்னா

மேலும் மத்திய அரசின் இலவச வங்கி கணக்குத் திட்டத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் ஏழ்மையில் இருக்கும் பல லட்சம் மக்கள் வங்கி கணக்கை திறந்தனர். இந்த வங்கி கணக்கில் இருக்கும் சில ஆயிரங்களையும் பிடுங்க எஸ்பிஐ முயற்சி செய்கிறது என மக்கள் எதிர்த்த நிலையில்.

எஸ்பிஐ வங்கி தலைவர் ஜன் தன் கணக்கிற்கு இந்த மினிமம் பேலேன்ஸ் கட்டுப்பாடுகள் பொருந்தாது என அறிவித்தார்.

 

கணக்கை மூடலாம்

இந்நிலையில் பல எஸ்பிஐ வங்கி கணக்கை மூட திட்டமிட்ட நிலையில், இதற்கும் சேவை முறிப்புக் கட்டணம் என்ற ஒன்றை எஸ்பிஐ வசூலிப்பது தான் கொடுமை.

வங்கிகள் தரப்பு

இதுகுறித்து வங்கிகள் கூறுகையில் தற்போதைய வர்த்தகச் சூழ்நிலைக்கு ஏற்ப வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க வேண்டுமெனில் அதிக முதலீட்டில் இன்பராஸ்டக்சர் அமைக்க வேண்டும், அதனை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். இதில் விசா, மாஸ்டர்கார்ட் அளிக்கப்பட்டும் செலவுகளும் அடக்கம்.

இதனை முழுமையாகவும், தொடர்ந்து செய்யாவிட்டால் வாடிக்கையாளர்களை வெளியேறி விடுவார்கள், வங்கிகள் திவாலாகக் கூட நேரிடலாம்.

மேலும் MDR கட்டணங்களைப் பெறாவிட்டால், வங்கிகள் வர்த்தகம் செய்ய வேண்டி அவசியமில்லை.

 

புதிய கட்டுப்பாடுகள்

எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Banks levy numerous fees on customers: SBI

Banks levy numerous fees on customers: SBI
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns