சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்கும் அதிமுக-வுக்கும் என்ன சம்பந்தம்?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனும் 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமாக இருப்பவர் தான் இந்த விவேக் ஜெயராமன்.

டி டி வி தினகரனுக்கு அடுத்தபடியாக அதிமுக வட்டாரத்தில் அதிகளவில் இவரது பெயர் இடம் பெற்று வரும் நிலையில் அடுத்த வருமான வரித்துறையின் ரெய்டு இவரது வீட்டிற்குத் தான் என்றும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே இவர் பற்றிய முழு விவரங்களையும் இங்குப் பார்ப்போம். .

பிறப்பு

சசிகலாவின் அண்ணன் மற்றும் அண்ணி இளவரசிக்கும் மகனாகப் பிறந்தவர் தான் விவேக் ஜெயராமன். விவேக்கின் தந்தை ஜெயராமன் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் காலமானதை அடுத்து விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகிய மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த இளவரசிக்குப் போயஸ் தொட்டத்திற்கு வருமாறு ஜெயலலிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

படிப்பு

பின்னர் ஜெயலலிதா வீட்டில் வளர்ந்து வந்த விவேக் பள்ளி படிப்பைக் கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் முடித்தார். பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள மேகாரரி கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்கல்லுரியில் இலங்கலை பட்டமும், 2013-ம் ஆண்டுப் புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் கல்லூரியில் எம்பிஏ மார்க்கெட்டிங் படிப்பை முடித்தார்.

வாழ்க்கை துவக்கம்

பின்னர் 2012-ம் ஆண்டுச் சாமசங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் கோடைக்கால இண்டெர்ன் முடித்து 2013-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் ஐடிசி நிறுவனத்தில் குளிர்கால இண்டர்ன் செய்தார். இதனை அடுத்து மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் Regional Marketing Coordinator ஆகப் பணியில் சேர்ந்தார். இது வரை தான் இவரது லின்கிடுஇன் சுயவிவரம் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும்.

சொத்துக் குவிப்பு வழக்கு

அந்த நேரத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட போது விவேக் தான் ஜெயலலிதாவிற்கு உணவு கொண்டு செல்வது, மருந்துகள், உடைகள் போன்றவற்றைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டார். அதைப் போலவே இப்போது தேவையான அடிப்படை உதவிகளைச் சிறைக்குச் சென்று சசிகலாவிற்கும் அளிப்பதும் விவேக் என்று ஆதிமுக வட்டாரம் கூறுகின்றன.

பொதுச்செயலாளர் பதவி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவர் அதிமுகப் பொதுச் செயலாளராக இருந்த பதவி சசிகலாவுக்குச் சென்றது பின்னர் அது துணை பொதுச் செயலலார் பதவியாக டிடிவி தினகரனுக்குச் சென்றது. இப்போது அவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதிமுகக் கட்சியை ஆட்டி படைப்பது விவேக் ஜெயராமன் தான் என்று கூறப்படும் நிலையில் இவருக்கு ஒரு ஐடி ரெய்டு இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

சசிகலாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்?

சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அவரது சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்று உளவுத்துறை அளித்த அறிக்கையில் அது விவேக் ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது.

ஜாஸ் சினிமாஸ்

ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை விவேக் ஜெயராமன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த நிலையில் இப்போது சசிகலாவிற்கு அடுத்து ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நிர்வாகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இப்போது நடத்தி வருவதாகவும் அதனால் தான் தினகரனுக்கு ஆதராகவ செய்திகள் ஜெயா டிவியில் ஒளிபரப்பப் பட்டதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சசி குடும்பம் அடுத்து அடுத்து சிறக்கு சென்று வரும் நிலையில் விவேக் ஜெயராமன் வீட்டிற்கு ஐடி ரெய்டு செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜாஸ் சினிமாஸ் துவக்கம் மற்றும் முதலீடு

2005-ம் ஆண்டு 10 கோடி முதலீட்டில் ஜாஸ் சினிமாஸ் துவங்கப்பட்டது. 100 கோடி முதலீடு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாகவும், 4 கோடி பங்கு தாரர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு வரி எல்லாம் செலுத்திய பிறகு 2.3 கோடிகள் மட்டுமே ஜாஸ் சினிமாஸ் லாபம் சம்பாதித்துள்ளதாக டோஃப்லர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2014-ம் ஆண்டு ஜாஸ் சினிமாஸ் விவே கைக்கு வந்த உடன் அனுமதி அளிக்கப்படாமல் இருந்த லக்ஸி சினிமாவிற்கு உரிமம் அளிக்கப்பட்டது, பின்னர் அந்த நிறுவனம் ஜாஸ் சினிமாவிற்கு விற்கப்பட்டதும், இதனைத் திமுகத் தலைவர் கூறியவுடன் பெறும் பரபரப்பு ஏற்பட்டதும், இதில் கோடி கணக்கில் மோசடிகள் நடந்ததும், 120 ரூபாய் டிக்கெட்டினை 360 ரூபாய் வரை ஜாஸ் சினிமாஸில் விற்கப்படுவது குற்றச்சாட்டாக எழுப்பப்பட்டது.

 

திரைப்படங்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்ய ஆசைப்பட்ட விவேக்

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 670 திரை அரங்குகளில் 250 தரமான திரை அரங்குகள் உள்ளதாகவும், அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டால் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியைத் தன்னால் முடிவு செய்ய முடியும் என்று கனவு திட்டத்தை நிறைவேற்றப் பல முறைகேடுகளைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வியாபார நோக்கத்திலே செயல்படுபவர்

இவர் இதுவரை பார்த்த மண்ணார்குடி காரர்களை விட வித்தியாசமானவர் என்றும் அனைத்தையும் ஒரு வியாபார நோக்கத்துடன் மட்டுமே பார்ப்பார் என்றும் இவர் பற்றித் தெரிந்த அதிமுகக் கட்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

25 வகை விருந்துகள்... தடபுடலாக நடந்த திருமணம்

வளர்ப்பு மகன் திருமணத்தோடு ஒப்பிடும் போது இந்தத் திருமணம் எளிமையாகவே இருந்தாலும் 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் போயஸ் தோட்டத்து இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் மகன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

விவேக் ஜெயராமனின் திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வரவில்லை என்பதுதான் இன்றைக்கு ஹாட் டாபிக். அவர் வரமாட்டார் என்று ஒருவாரகாலமாகவே ஊடகங்கள் எழுதினாலும், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் என்று அழைப்பிதழில் அச்சடித்திருந்ததால் ஒருவேளை முதல்வர் வந்தாலும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஜெயலலிதா கடைசி வரை வரவேயில்லை.

 

போட்டுக் கொடுக்கும் திவாகரன் தரப்பு

திவாகரன் தரப்பை அதிமுகவுக்குள் நுழையவிடாமல் தினகரனின் தளபதியாக நின்று வருகிறார் விவேக் ஜெயராமன். இதனால் கடுப்பில் உள்ள திவாகரன் தரப்பும் விவேக்குக்கு எதிரான ஏகப்பட்ட ஆதாரங்களை வருமான வரித்துறைக்கு அள்ளி அனுப்பி வருகிறது என்று கூறவருவதால் அடுத்த ரெய்டு கண்டிப்பாக ஜாஸ் சினிமா மற்றும் இவரது வீட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ்-ன் சொத்து மதிப்பு எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரியுமா..?

கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ்-ன் சொத்து மதிப்பு எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரியுமா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who is this Vivek Jayaraman? jazz Cinemas Managing Director

Who is this Vivek Jayaraman? jazz Cinemas Managing Director
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns