மைக்ரோசாப்ட், கூகிள், ஆரக்கிள் நிறுவனங்களைத் திரும்பிப்பார்க்க வைத்த 'ஸ்ரீதர் வெம்பு'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் மத்தியில் இந்திய நிறுவனங்கள் சேவைத்துறையில் மட்டுமே சிறந்து விளங்க முடியும், ஒரு வெற்றிகரமான பிராடெக்ட் உருவாக்குவது சாத்தியமில்லாத ஒன்று என்று கருத்து நிலவியபோது, அதை உடைத்து எரிந்தவர் தான் ஸ்ரீதர் வெம்பு.

 

சென்னையைத் தலைமையாகக் கொண்டு உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனத்திற்குச் சவால் விடும் வகையில் வளர்ந்து நிற்கும் சோஹோ கார்ப்ரேஷன் (ZOHO corporation) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தான் ஸ்ரீதர் வெம்பு.

நேரடி போட்டி

நேரடி போட்டி

ZOHO Corporation நிறுவனம் உலக வர்த்தகச் சந்தையில் பிரபலமாக அறியப்படுவதற்குக் காரணம் இந்த நிறுவனம் இதுவரை எந்த வெளிநாட்டு நிதியுதவியையும் எடுக்காமல் உருவாக்கப்பட்டு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட், கூகிள், ஆரக்கிள் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டியிட்டு வருகின்றனர்.

யார் இந்த ஸ்ரீதர் வெம்பு?

யார் இந்த ஸ்ரீதர் வெம்பு?

ஸ்ரீதர் சென்னையில் உள்ள மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் ஒரு ஸ்டெனொகிரப்பராக இருந்தார், அவருடைய தாயார் ஒரு குடும்பத் தலைவியாக இருந்தார், அவர்களில் ஒருவரும் கல்லூரிக்குச் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு உதவிபெற்ற பள்ளி
 

அரசு உதவிபெற்ற பள்ளி

அவர் தனது ஆரம்பக் கல்வியைத் தமிழ்-நடுத்தர அரசு உதவிபெற்ற பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை தொடங்கி, பின்னர் அவரது மேல்படிப்புக்காக ஐஐடி-மட்ரஸ்க்கு சென்றார். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது மின் பொறியியலையும் நிறைவு செய்தார்.

அவரது PhD ஐ முடித்த பிறகு, ஸ்ரீதர் குவால்காமில் 1994 ஆம் ஆண்டுச் சான் டியாகோவில் சேர்ந்தார்.

அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம்

அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம்

அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந்த நாட்களில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் மீது அவர் மிக ஆர்வமாக இருந்தார்.

இது ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற சந்தைகளின் வெற்றியைப் பற்றியும், அவர்கள் எவ்வாறு வளர முடிந்தது என்பதையும் அவருக்குக் கற்றுக் கொடுத்தது மற்றும் அவரைப் பல புத்தகங்களை வாசிக்க வைத்தது.

புதிய நிறுவனத்தின் துவக்கம்

புதிய நிறுவனத்தின் துவக்கம்

ஸ்ரீதர் வெம்பு சோஷலிசம் இந்தியாவில் நமது பிரச்சனை என்று உணர்ந்து, நிலைமையைச் சரிசெய்ய யோசித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சகோதரர் குமார் இதைப்பற்றிச் சிந்தனை வெளிக்கொண்டார்.

அதனால், அவர் தனது சகோதரருடன் சேர முடிவெடுத்தார், அதற்காகத் தனது வேலையை விட்டுவிட்டு, தேசத்தின் வலியைத் தீர்க்கும் முயற்சிகளை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்க்க முயற்சி செய்தார்.

அவர்கள் டோனி தாமஸ் உடன் இணைந்தார்கள். டோனி நெட்வர்க் மேனேஜ்மென்ட் சாப்ட்வேரில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

வெம்பு சாப்ட்வேர்

வெம்பு சாப்ட்வேர்

1996 ல், சென்னை பிறநகரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அபார்ட்மெண்ட்டில் இருந்து, அவர் வெம்பு சாப்ட்வேர் தொடங்கினார்.

அவர் எப்படிச் சோஹோவை பல மில்லியன் டாலர் வியாபாரமாக மாற்றினார்?

சோஹோ கார்ப்பரேஷன்

சோஹோ கார்ப்பரேஷன்

1996 ல் ஸ்ரீதர் வெம்பு மற்றும் டோனி தாமஸ், சோஹோ கார்ப் நிறுவனம் கலிபோர்னியா-வை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூன்று பெரிய வர்த்தகப் பிராண்ட் பின்னால் உள்ளது: Zoho, ManageEngine மற்றும் WebNMS ஆகியவை, கூட்டாக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு SaaS (மென்பொருள் ஒரு சேவை) தயாரிப்புகளை வழங்குகின்றன.

ஊழியர்கள்

ஊழியர்கள்

4000 ஊழியர்களின் மொத்த பணியாளர்களுடன் கலிபோர்னியா-வை தலைமையிடமாகவும், சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

ஆரம்பம் ....

ஆரம்பம் ....

இத்தகைய பெரிய வளர்ச்சியை அடைந்தும் இதுவரை தனது நிறுவன விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆரம்பம் முதல் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெறவில்லை.

அனைத்து விதமான நிதியுதவியும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்டவை.

நிதியுதவி

நிதியுதவி

ஸ்ரீதர் தனது வேலையை விட்டுவிட்டு புதிய நிறுவனத்தைத் துவங்கும் இந்தத் துணிகர வேலை செய்யும்போது அவரது மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். டோனி தன்னுடைய வேலையில் இருந்து வெளியேறியதற்காகக் கிடைத்த தொகையை இப்புதிய நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

டோனி லூசண்ட் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி இருந்தார்.

விற்பனை பிரிவில் கவனம்

விற்பனை பிரிவில் கவனம்

ஆரம்பத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராக டோனி செயல்பட்டார், அதே நேரத்தில் ஸ்ரீதர் அதன் தலைமைச் செயலாளர் ஆவார்.

ஸ்ரீதர் நிறுவனம் விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்து, விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வந்தார், மேலும் பே பகுதியில் பல வாடிக்கையாளர்களை அணுக ஆரம்பித்தார்.

10 மில்லியன் டாலர் பிஸ்னஸ்

10 மில்லியன் டாலர் பிஸ்னஸ்

மென்பொருள் நன்றாக விற்பனையாகத் தொடங்கியது. அவர்கள் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களுக்கு நிறைய விற்பனை செய்தார்கள், ஜப்பானிலும் கூட ஒரு நல்ல சந்தையை உருவாக்கினார்கள்.

2000 ஆம் ஆண்டளவில், அவர்கள் இந்தியாவில் 115 பொறியாளர்களுக்கும், அமெரிக்காவில் 7 பேருக்கும், சுமார் 10 மில்லியன் டாலர் வணிகத்திற்கு வளர்ந்து வந்தார்கள்.

டாட்-காம் பப்பில் வெடித்தது ...

டாட்-காம் பப்பில் வெடித்தது ...

ஆனால் 2001 ல், நெட்வொர்க்கிங் வணிகத்தில் ஒரு பெரிய மெல் டவுன் ஏற்பட்டது. பப்பில் வெடித்த பிறகு சரிவு ஏற்பட்டபோது, பல நிறுவனங்கள் கணிசமான வெற்றிகளைப் பெற்றன, மேலும் அவற்றின் பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்டனர்.

2002 ஆம் ஆண்டின் பெரும் பாதிப்பை அவர்கள் எடுத்தபோது, சுமார் 150 வாடிக்கையாளர்களிடமிருந்து மூன்று வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வீழ்ச்சி கண்டனர்.

ஸ்ரீதர் சிஇஓ

ஸ்ரீதர் சிஇஓ

ஸ்ரீதர், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆக்கப்பட்டார். இது அவருக்கு மிகவும் முக்கியமான கட்டமாக இருந்தது. ஆயினும்கூட, அவர் அதைச் சாதகமான முறையில் எடுத்துக் கொண்டார்! ஸ்ரீதர் நிறுவனம் இந்த ஒரு இடத்தை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்தார்.

R&D ஆண்டு

R&D ஆண்டு

சர்வதேச சந்தையில் டாட்காம் பிரச்சனை வெடித்த நிலையில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நிறுவனங்கள் மூடப்பட்டது. ஆனால் சோஹோ நிறுவனத்திற்கு இது வாய்ப்பாக அமைந்தது.

இத்தகயை தருனத்தில் தான் சோஹோ சரியான திசையில் நிறுவனத்தை நகர்ந்தது. இக்காலத்தை சோஹோ R&D ஆண்டு என்று அழைக்கிறது.

முதல் பகுதி

முதல் பகுதி

டாட்காம் பிரச்சனையில் மென்பொருள் இனி விற்பனை செய்ய முடியாத காரணத்தால். இப்பிரிவில் பணியாற்றிய பொறியியலாளர்களும் வளங்களும் ஏராளமாக இருந்தனர், எனவே அவர்கள் அவற்றைச் சரியான வழியில் பயன்படுத்த முடிவு செய்தார் ஸ்ரீதர்.

R&D ஆண்டின் முதல் பகுதி.

இரண்டு திசை

இரண்டு திசை

அவர்கள் இரண்டு திசைகளில் செல்ல முடிவு செய்தார்கள்: முதலாவதாக, அவர்கள் OEM மாதிரியாக விற்ற அதே நெட்வொர்க் நிர்வாக மென்பொருளை எடுத்து, அதை ஒரு நிறுவன மாட்டலாக மாற்றினர்.

அதற்கும் மேலாக, அவர்கள் முயற்சி செய்தனர், அதனால் அவர்கள் அந்த வழியில் சில பொறியியலாளர்களை வைத்தனர். இப்படித் தான் ஜோஹொ ஆரம்பித்தது.

அட்வென்ட்நெட்

அட்வென்ட்நெட்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் டோனி மற்றொரு முயற்சியைத் தொடங்கி வந்தார் அதே சமயம் ஸ்ரீதர் நிறைய மாற்றங்களைச் கொண்டு வந்தார். இது மட்டும் அல்ல அவர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்குச் சென்றடைய கூகிள் விளம்பரப்படுத்தல் பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால்,அவர்கள் 2005 இல் AdventNet என்று பெயர் மாற்றினார்கள். இதேகாலத்தில் அவர்கள் சொந்தமாக முறைசாரா பல்கலைக்கழகத் தொடங்கினர், இதனைச் சோஹோ பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது.

சோஹோ கார்ப்பரேஷன்

சோஹோ கார்ப்பரேஷன்

2009ஆம் ஆண்டு AdventNet பெயரில் இருந்து நிறுவனம் சோஹோ கார்ப்பரேஷனாக உருவெடுத்தது. இதன்பின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் விலைஉயர்ந்த மென்பொருள் உரிமத்தை வாங்குவதற்குப் பதிலாக அவர்களது மென்பொருளையே விற்பனை செய்தனர்.

மின்னல் வேகத்தில் வளர்ச்சி

மின்னல் வேகத்தில் வளர்ச்சி

இதன் மூலம் விற்பனை அளவின் எண்ணிக்கையானது மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்தது, 2015 ஆம் ஆண்டில் 12 மில்லியன் பயனாளிகளால் 300 மில்லியன் டாலர் வருவாயை அடைந்து வருவதாகவும், 2016 ஆம் ஆண்டில் 18 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு 500 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஜப்பானிலும் பயனாளிகளைக் கொண்டுள்ளது.

முடிவுரை

முடிவுரை

Salesforce.com நிறுவனத்தின் சிஇஓ தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனிஆப், சோஹோவை வாங்குவதற்கு மிகவும் ஆவலாக இருந்தார்.

ஏனெனில், Salesforce.com 65டாலருக்கு வழங்கும் மென்பொருள் சேவையைச் சோஹோ வெறும் 10-12 டாலருக்கு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இதனால் தனது நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பு ஏற்படுகிறது என மார்க் பெனிஆப் மறைமுகமாக அறிவித்தார். மேலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இதற்குத் தான் அளிப்பதாகவும் கூறினார்.

ஆனால் ஸ்ரீதர் மார்க்-இன் ஆஃபரை ஏற்றுக் கொள்ளவில்லை. அனைத்திற்கும் மேலாக ஸ்ரீதர் வேம்பு ஒரு தமிழர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sridhar Vembu, Founder & CEO of Zoho Corporation

Sridhar Vembu, Founder & CEO of Zoho Corporation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X