பதஞ்சலியின் எழுச்சியில் இருந்து இந்திய நுகர்பொருட்கள் துறை கற்றுக்கொள்ள வேண்டியவை..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பத்தாண்டுகளுக்கு முன்னால் நவீன வர்த்தக முறைகள் இந்திய சந்தை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்கியிருந்தன. மின்னணு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம் முறைகள் நடைமுறைக்கு வந்தன.

இந்தக் காலகட்டத்தில் பதஞ்சலி ஆயுர்வேத பொருள்கள் வத்தகச் சந்தையில் ஏற்கனவே உள்ள முன்னணி நிறுவனங்களின் பொருட்களோடு போட்டி போட்டு சந்தையைத் தகர்க்கத் துவங்கியிருந்தன.

இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்வு சந்தையில் மிகப்பெரும் தாக்கங்களும் எதிரொலிகளும் ஏற்பட்டன.

புது வரவுகளுக்கான ஊக்கம் என்றால் என்ன?

சந்தையில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நிறுவனம் நுகர்வோருக்கு எந்த விதமான ஊக்கப்பரிசும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

பதஞ்சலி பொருள்கள் அவற்றின் சமநிலையில் உள்ள பிற பொருள்களை விட மலிவாகவே கிடைக்கின்றன.மரிகோ நிறுவனத்தின் நிறுவனர் பின்வருமாறு கூறுகிறார். "பதஞ்சலி பொருள்களுக்கு ஊக்கப்பரிசாக இலவசமாகச் சில பொருள்களைக் கொடுத்து அவற்றைக் குறித்த விளம்பரங்களும் செய்து சந்தையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியது பதஞ்சலி."

 

உற்பத்தி பொருள்களில் விளைவுகளை உண்டாக்கும் திறன் – சில அடிப்படையான காரணங்கள்

பதஞ்சலி உற்பத்தி பொருள்களில் நல்ல விளைவுகளை உண்டாக்கும் திறன் பெற்றிருந்தது. விளம்பர உலகின் கூச்சல்களிலிருந்து விடுபட்டு மேலெழும்பி நுகர்வோருக்கு விரைந்து முதலில் தனது பொருள்களைக் கொண்டு சேர்த்து வந்தது.

பதஞ்சலியின் மிகப் பிரபலமான நெய், டூத் பேஸ்ட் இரு பொருள்களுக்கும் ஏற்கனவே உள்ளூர் சந்தை மற்றும் வளர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடையே கடும் போட்டியில் இருக்கிறது.

 

பலமான விளம்பர தூதர்

யோகா குரு பாபா ராம்தேவ் பிரபலமானவர்களைக் கொண்டு செய்யப்படும் விளம்பரங்கள் பொருள்களின் சிறப்பை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து சந்தையை அதிகப்படுத்தும் என்பதைத் தமது மூலிகை மற்றும் ஆர்கானிக் பொருள்களின் சந்தையிலிருந்து நிரூபித்திருக்கிறார்.

தவறான பொருள்களுக்கு விளம்பர தூதுவராகப் பணியாற்றியவர்களுக்கு மேகி மீதான தடையின் போது ஏற்பட்ட சில தர்மசங்கடங்களை நாடே அறியும்.

 

நுகர்வோரின் மகிழ்ச்சியே பிரதானம்

பதஞ்சலி பொருள்களின் வளர்ச்சி ஏற்கனவே வளர்ந்த சந்தையாளர்களைக் கூட நுகர்வோரின் நன்மையைக் கருத்தில் கொண்டு தரமான பொருள்களை மிகக் குறைந்த விலையில் வழங்கச் செய்தது.

புதிய நோக்கங்களும், தாக்கங்களும்

பதஞ்சலியின் பலப்படுத்தும் முயற்சிகள் சந்தையில் பல நேரங்களில் பலருக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சந்தையில் உள்ள குப்பை கூளங்களைப் போன்ற பல்வேறு பொருள்கள், பல்வேறு சந்தை ஊடுருவல்கள் மற்றும் நுகர்வோரின் தீவிரம் குறைந்த நிலை ஆகியவற்றையும் தாண்டி பதஞ்சலி சாதனை படைத்திருக்கிறது.

சந்தையில் எப்போதும் எழக்கூடிய புதிய ஆபத்துகள் முழுவதும் தவிர்த்துவிட முடியாத போட்டிகள் நிறைந்தது என்கிறார் சந்தை ஆலோசகர்.

 

முறையான நிர்வகிப்புகள் அதிக-நுட்பமானவை

கடந்த மூன்றாண்டுகளில் பதஞ்சலியின் 10,500 கோடி ரூபாய் வளர்ச்சி பல்வேறு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி அவர்கள் இந்த நிலையை எட்டிட பல ஆண்டுகள் செயல்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையற்ற வாதத்தால் தவறான பாதையில் செல்லுதல் வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்படுத்திவிடும் என்கிறார் பிரபல சந்தை ஆலோசகர் சர்வாதே.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Six lessons that Patanjali teaches India's FMCG sector

Six lessons that Patanjali teaches India's FMCG sector
Story first published: Monday, May 8, 2017, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns