விஜய் மல்லையா, நீரவ் மோடி விட பெரிய கேடி இந்த 'ஜதின் மேத்தா'.. யார் இவர்..?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

விஜய் மல்லையா போல் பகட்டான வாழ்க்கையை மற்றும் புகழ் இல்லையென்றாலும் இந்தியாவில் 2வது மிகப்பெரிய மோசடியாளர் ஜதின் மேத்தா.

கடந்த ஒரு வருடமாக வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விஜய் மல்லையாவை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள அதேவேளையில் அமலாக்கத் துறை ஜதின் மேத்தா-விற்கும் வலை வீசி வருகிறது.

வின்சம் டைமென்ட் அண்ட் ஜுவல்லரி

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான வின்சம் டைமென்ட் அண்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் தலைவரான ஜதின் மேத்தா இந்தியாவில் வங்கிகளிடம் சுமார் 6,800 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கடன் பெற்றுக்கொண்டு திருப்பி அளிக்காமல் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

துபாய்

ஜதின் மேத்தா-வின் குழும நிறுவனமான வின்சம் குரூப் நிறுவனம் குறித்துத் துபாய் அரசிடம் அமலாக்கத் துறை சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அளித்துள்ளது. இதில் இந்நிறுவனத்தின் நிலை, வர்த்தகம், வருவாய், உரிமையாளர்கள் எனப் பல விபரங்களைக் கேட்டுள்ளது.

ஆனால் இதுவரை முழுமையான பதில் கிடைக்கவில்லை என்றாலும், கடந்த மாதம் சில முக்கியத் தகவல்களை ஐக்கிய அரபு அமிரீகம் அளித்துள்ளது. இதில் முறைகேடான நிதி பரிமாற்றம் குறித்துப் பல தகவல்கள் கிடைத்துள்ளது.

 

மாஸ்டர் பிளான்

ஜதின் மேத்தா St Kitts என்னும் தனித்தீவில் குடியுரிமை பெற்றுள்ளார். இந்த நாட்டுடன் இந்தியா வர்த்தகம், தகவல் பரிமாற்றம், நிதி என எவ்விதமான ஒப்பந்தம் செய்ய முடியாத காரணத்தால், இவர் குறித்துத் தகவல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

முதல் மோசடியாளர்

2013ஆம் ஆண்டில் வின்சம் நிறுவனம் தனது UAE வாடிக்கையாளர் தொடர்பான வர்த்தகத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்து முதல் மோசடியாளராக அறிவிக்கப்பட்டது வின்சம் டைமென்ட் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் அறிவிக்கப்பட்டது.

வின்சம்

இந்நிறுவனம் இந்திய வங்கிகள் வாயிலாக standby letters of credit (SBLC) பெயரில் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்து துபாய்-க்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இத்தகைய ஏற்றுமதி சுமார் 13 வாடிக்கையாளர்களிடம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வங்கிகள்

இந்த வர்த்தகத்திற்கு முழுமையாக நிதி உதவியை standby letters of credit (SBLC) கொண்டு நிதி உதவி செய்துள்ளது.

துபாய் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வந்த பின் உடனடியாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்த வின்சம் நிறுவனம் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

 

வங்கிகள்

வங்கிகளின் உத்திரவாதத்தின் பெயரில் சர்வதேச புல்லியன் வங்கிகள் SBLC வாயிலாகத் தங்கத்தை அளித்துள்ளது.

இத்தகைய உத்திரவாதங்கள் அனைத்தும், இந்தியாவில் தங்க நகை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தின் வாயிலாகவே அளித்துள்ளது. இது வெறும் 270 நாட்கள் மட்டுமே கொண்டு திட்ட வரைவு.

 

சிக்கிக்கொண்ட வங்கிகள்

வின்சம் நிறுவனம் பணத்தைச் செலுத்தாத நிலையில் சர்வதேச புல்லியன் வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் பணத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்கு இந்திய வங்கிகள் சிக்கிக்கொண்டது.

13 துபாய் நிறுவனங்கள்

வின்சம் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில், 13 துபாய் நிறுவனங்களில் இருந்து தனக்கு வர வேண்டிய பணத்தை Haytham Ali Salman Abu Obidah மூலம் கொண்டு வர உள்ளதாக அறிவித்து இருந்தது.

ஆனால் இதுவரை வரவில்லை.

 

வங்கிகள்

வின்சம் நிறுவனத்திற்குக் கடன் அளித்த ஸ்டாண்டர்ட் சாட்டர்ட், பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகியவை இந்தப் பிரச்சனையைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. விஜய் மல்லையா வழக்கிற்குப் பின் தற்போது இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சொத்துக்கள்

வின்சம் நிறுவனத்திற்குக் கடன் அளித்த வங்கிகள் ஜதின் மேத்தா-வின் சொத்துக்களை முடக்கியுள்ளது. இதனைக் கொண்டு சில தொகையைப் பெற்றாலும் முழுமையான தொகையைப் பெற இயலாது.

தற்போது இந்த வழக்குச் சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

 

கடன் அளித்த வங்கிகள்

பாங்க் ஆஃப் மகாராஷ்ரா, கனரா வங்கி, சென்டரல் வங்கி, எமிம் வங்கி, ஓரியண்டல் பாங்க், ஹைதராபாத் ஸ்டேட் பாங்க், யூனியன் பாங்க், ஆக்சிஸ் வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் மொரிஷியஸ் ஸ்டேட் பாங்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Winsome group's Jatin Mehta just similar like Vijay mallya

Winsome group's Jatin Mehta just similar like Vijay mallya
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns