ஐபிஎல் 'சியர்கேர்ள்ஸ்' சம்பளத்தை கேட்டா ஆடிபோய்டுவீங்க..!

Posted By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் இனி ஐபிஎல் போட்டிகளை சீரியஸான கிரிக்கெட்டாக நாங்கள் மக்களுக்குக் காட்டப் போகிறோம் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் சியர் லீடர்கள், ஆட்டமெல்லாம் இனி ஸ்டார் டிவி ஒளிபரப்புகளில் இடம் பெறாது.

ஐபில் கிரிக்கெட் போட்டிகளைக் கூடுதல் கவர்ச்சியுடன் காண்பிக்கச் சியர் கேர்ள்ஸ் நடனம் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறினால் அது மிகையல்ல. ஐபிஎல் போட்டிகளில் கிரெக்கெட் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுன்டிரிக்கும், விக்கெட்டுக்கும் இவர்கள் ஆடும் நடனம் தொலைக்காட்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாகவும் அமையும்.

சம்பளம்

அதே நேரம் இவர்கள் நடனம் ஆடுவதைப் பார்க்கும் பலருக்கு இவர்கள் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்றும் எண்ணம் கண்டிப்பாக ஓடியிருக்கும். 4 வருடம் இஞ்சினியரிங் படித்து வேலைபார்ப்பவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் ஐபிஎல் சியர்ஸ் கேர்ள்ஸின் முழுமையான சம்பள பட்டியல்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான அடுத்த 5 வருட உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் ரூ. 16,347 கோடிக்கு பெற்றதுள்ளது.

அறிக்கை

நமக்குக் கிடைத்த தகவலின் படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் கர்ல்ஸாக நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு போட்டிக்கு 18,000 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது. இதுவே அவர்கள் நடனம் ஆடும் அணி வெற்றி பெற்றால் போனஸ் தொகையும் உண்டு.

ஐபிஎல் சீசன்

ஐபிஎல் சீசன் 10 போட்டியில் குறைந்த பட்சம் ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடினர். அப்படியானால் 14 போட்டிக்கு இந்தச் சியர்ஸ் கர்ல்ஸ் 4 லட்சம் சம்பளமாகப் பெறுவார்கள்.

இதுவே கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஆகியவற்றுக்கு அணிகள் செல்லும் போது கூடுதலாகப் பணத்தை அள்ளுவார்கள்.

போட்டோ ஷூட்

ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் அணிகளுடன் நடத்தப்படும் போட்டோ ஷூட்டில் பங்கு பெற்றால் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

போனஸ்

தங்கள் ஆதரித்து நடனமாடும் ஐபிஎல் அணி போட்டிகளில் வெற்றி பெறும் போது குறைந்தது 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை போனஸ் அளிக்கப்படும்.

போட்டிக்குச் சம்பளம்

ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடனம் ஆடினால் 9,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார்கள்.

பார்டி அல்லது நிகழ்ச்சிகள்

தங்கள் அணி சார்பாக அல்லது ஐபிஎல் நிர்வாகம் நடத்தும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அதற்கு 10,000 சம்பளமாக வழங்கப்படுகின்றது.

கூடுதல் தோற்றம்

போட்டிகளின் போது கூடுதலாகத் தங்களது தோற்றத்தைக் காட்டி நடனம் ஆடும் போது 7,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகின்றனர்.

இந்திய சியர்ஸ் கர்ல்ஸ் சம்பளம்

அன்மை காலமாக இந்திய சியர்ஸ் கர்ஸ்களும் போட்டிக்கிடையில் நடனம் ஆடுவதைப் பார்க்க முடியும். இவர்களுக்குச் சம்பளமாக 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை அளிக்கப்படுகின்றது.

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் சியர்ஸ் கர்ல்ஸ்

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணிக்காகச் சியர்ஸ் கர்ல்ஸ் ஆக நடனம் ஆடுபவர்கள் சம்பளமாக 15,000 ரூபாயும், போனஸ் 4,000 ரூபாயும், கூடுதலாக நடனம் ஆட 12,000 ரூபாயும் சம்பளமாகப் பெறுகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சியர்ஸ் கர்ல்ஸ் சம்பளமாக 12,000 ரூபாயும், போனஸ் 4,000 ரூபாயும், பார்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் போது 12,000 ரூபாயும் பெறுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பிற அணிகள்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பிற அணி சியர்ஸ் கர்ல்ஸ் 8,000 முதல் 10,000 ரூபாய் வரையிலும், போனஸ் 4,000 ரூபாயும் பெறுகின்றனர். பார்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கு பெறப் போட்டியை பொருத்துச் சம்பளம் அளிக்கப்படுகின்றது.

குறிப்பு

இந்தச் சம்பளங்கள் லீக், கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டிகளைப் பொருத்து மாறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IPL Cheerleaders Salary Is More Than What An Engineer Earns Per Month

IPL Cheerleaders Salaray Is More Than What An Engineer Earns Per Month
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns