30 வருடங்களுக்கு பின் இந்திய ராணுத்திற்கு கிடைக்கும் அதிநவீன பீரங்கி துப்பாக்கி M777..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக விளங்குவது பீரங்கி துப்பாக்கிகள். இதுவே நாட்டின் பாதுகாப்பில் வீரர்களுக்குப் பின் முதல் வரிசையில் நிற்கும் முக்கிய ஆயுதம்.

ஆனால் ராணுவ வீரர்கள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் சற்றும் பொருந்தாத போபெர்ஸ் பீரங்கி துப்பாக்கியை கடந்த 30 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆயுத சக்தியை தொடர்ந்து மேம்படுத்தி வரும் மத்திய அரசு அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் செய்தது.

அதிநவீன பீரங்கி துப்பாக்கி M777

அமெரிக்க நிறுவனமும் இந்தியாவும் செய்த இந்த ஒப்பந்தத்தில் சுமார் 145 M777 என்ற அதிநவீன பீரங்கி துப்பாக்கியை வாங்கக் கையெழுத்திட்டது.

இதில் 2 துப்பாக்கிகள் இந்த வார இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது. இதன் மூலம் 30 வருடங்களுக்கு இந்திய ராணுவம் அதிநவீன பீரங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தப் போகிறது. நம்முடை பாதுகாப்பு அதிகரிக்க உள்ளது.

 

BAE சிஸ்டம்ஸ்

இதுகுறித்து BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்தின செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்க வெளியுறவு ராணுவ விற்பனையின் கீழ் செய்யப்பட்ட ஒப்புந்தம் மூலம் இந்திய ராணுவத்திற்கு 145 M777 அல்ட்ரா லைட் வெயிட் ஹவிட்சர் ஆயுத விற்பனையின் ஒப்பந்தத்தின் முதல் 2 பீரங்கி துப்பாக்கியை இந்த வார இறுதியில் இந்தியாவிற்கு டெலிவரி செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 30

அமெரிக்க நிறுவனம் இந்தியாவும் இதற்கான ஒப்பந்தத்தை 2016ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று, நவம்பர் 30ஆம் தேதி ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 737 மில்லியன் டாலர்.

 

சீன எல்லை

இந்த 145 M777 அல்ட்ரா லைட் வெயிட் ஹவிட்சர் அனைத்தையும் சீனா எல்லையில் நிறுவப்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிப்பு

இந்த 145 பீரங்கி துப்பாக்கிகளில் வெறும் 25 மட்டுமே அமெரிக்காவில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 120 துப்பாக்கிகளை மஹிந்திரா நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போபெர்ஸ் ஆயுத பேரம்

இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் முக்கியமான ஊழல்களில் போபெர்ஸ் ஆயுத பேரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 1980 முதல் 90கள் வரையிலான காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் சுவீடன் நாட்டுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஊழல் இது.

1.4 பில்லியின் டாலர்

இந்த ஆயுத ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்திற்குச் சுவீடன் நாட்டு நிறுவனம் 1.4 பில்லியின் டாலர் மதிப்பிலான 410 பீரங்கி துப்பாக்கிளை பெற்றது.

ஊழல்

இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய 'ஊழல்'..!

ஏர் இந்தியா

ஏர் இந்தியா செய்த ரூ.70,000 கோடி ஊழல்.. சிபிஐயிடம் வழக்கு கைமாறியது..சிக்கப்போவது யார்..?

கால் சென்டர்

அமெரிக்க மக்களை ஏமாற்றி 500 கோடி ரூபாய் 'ஊழல்'.. கால் சென்டரில் தில்லாலங்கடி..!

ரூ.3,700 கோடி 'மோசடி'

கிளிக் செய்தால் பணம்.. 7 லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி 'மோசடி'..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bofors life ends, Indian Army gets M777 modern artillery guns after 30 years

Bofors life ends, Indian Army gets M777 modern artillery guns after 30 years
Story first published: Thursday, May 18, 2017, 15:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns