புதிய எச்-1பி விசா விதிகளால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை: நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்1-பி விசா முன்பதிவு குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய ஐடி வல்லுநர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் பழைய நிலையில் அப்படியே தான் இருக்கும் என்றும் கூறினார்.

 

அமெரிக்க எச்1-பி விசாவின் குழுக்கள் முறையில் வேண்டும் என்றால் மாற்றங்கள் வரும் என்றும் இந்தியர்கள் எச்1-பி விசா பெறுவதில் சிக்கல் ஏதும் இல்லை என்றார்.

கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா உட்படப் பல வளர்ந்த நாடுகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைகளைப் பாதுகாப்பதற்கும், வெளிநாட்டு தொழிலாளர்கள் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

குழுக்கள் முறையில் மாற்றம்

குழுக்கள் முறையில் மாற்றம்

அமெரிக்காவில், டிரம்ப் நிர்வாகம் நடப்பு லாட்டரி முறையை இன்னும் கூடுதலான தகுதி அடிப்படையிலான குடியேற்ற கொள்கைக்குப் பதிலாக மாற்ற விரும்புகிறது.

எச்-1பி விசாவை இந்தியர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள்?

எச்-1பி விசாவை இந்தியர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள்?

மொத்த அமெரிக்க எச்1-பி விசாக்களில் வெறும் 17 சதவீதம் தான் இந்திய நிறுவனங்கள் பெறுகின்றன, பல நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் வழங்கிய சேவைகளிலிருந்து பயனடைகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நம்பிக்கை
 

இந்தியாவின் நம்பிக்கை

எச்-1பி விசா நடைமுறை பரிசீலனை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நேர்மறையான உறவை பரிசீலிக்க வேண்டும் என இந்தியா நம்புகிறது.

விசா விதிகளில் மாற்றம் கொண்டு வருவதினால் தொழிலாளர்கள் நலன் மற்றும் ஐடி நிறுவனங்களில் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள்

அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள்

எச்-1பி விசா விதிகள் கடுமை படுத்துவதினால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கர்கள் பணிக்கு எடுத்து வருகின்றன, இந்தியாவின் தொழில்நுட்ப ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை அமெரிக்கச் சந்தையில் உள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியர்கள் தேவை

அமெரிக்காவுக்கு இந்தியர்கள் தேவை

ஊழியர்களைத் தேர்வு செய்வதில் மாற்றம் ஏற்பட்டாலும் அதிகத் திறன் படைத்த ஊழியர்கள் வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இந்திய ஊழியர்கள் நாடுவார்கள் என்றும் அவர் கூறினார். இத்தகைய விச்சாக்கலுக்கான தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, ஆனால் "எண்கள் மாறாது".

நிர்மலா சீதாராமன் உறுதி

நிர்மலா சீதாராமன் உறுதி

பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், நமக்குக் கிடைத்திருக்கும் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை குறையாது, அதைத் தொடர்ந்து பெறுவோம்," என்று அவர் உறுதியளித்தார்.

புதிய ஆணை

புதிய ஆணை

சென்ற ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்-1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்துவது மற்றும் அதிகத் திறன் உள்ள ஊழியர்களை மட்டும் பணிக்கு எடுப்பது அதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது போன்ற ஒரு ஆணையில் கையோப்பம் இட்டதால் இந்தியாவின் 150 பில்லியன் ஐடி துறைக்குப் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்திய ஐடி நிறுவனங்களின் அக்கறை

இந்திய ஐடி நிறுவனங்களின் அக்கறை

இந்த விச்சாக்கல் முக்கியமாக அமெரிக்காவில் குறுகியகால வேலைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், இந்திய ஐடி துறை இந்தப் பிரச்சினையில் தீவிர அக்கறை காட்டியுள்ளது.

எச்1-பி விசா

எச்1-பி விசா

எச்-1பி விசா என்பது குடியேற்றல் இல்லாத வெளிநாட்டவர்கள் அமெர்க்க நிறுவனங்களில் பணி செய்வதற்காக வழங்கப்படும் விசாவாகும். இந்த விசா முறையைப் பயன்படுத்தி இந்திய ஐடி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அமெரிக்காவில் பணியில் நியமித்து வருகின்றன.

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

எச்-1பி விசா அமைப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்வது என்பது டிரப்பின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1B Visa For Professionals Would Not Come Down: Nirmala Sitharaman

H1B Visa For Professionals Would Not Come Down: Nirmala Sitharaman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X