English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

அப்பார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

புதிய ரியல் எஸ்டேட் விதிமுறையான ரீரா தூங்கிக் கொண்டிருந்த சொத்து விற்பனை சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளித்திருக்கிறது. உங்களில் சிலர் இப்போது ஒரு வீடு வாங்குவதைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கலாம்.

மேலும் விற்பனையாளர்களும் முகவர்களும் இலவச திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன் படையெடுத்துக் கொண்டிருக்கும் நேரம் இது. அவர்களது விற்பனை உச்சங்களை ஆராய்ந்து, உண்மைகளின் அடிப்படையில் ஒரு முடிவெடுங்கள்.

ஒரு கட்டுமானர் அல்லது சொத்து, மனை விற்பனையாளர் உங்களிடம் சொல்லும் முதல் விஷயம் சொத்து, மனை விலைகள் ஒருபோதும் வீழ்ச்சியடையவதில்லை என்பதாகும். இதர வார்த்தைகளில் சொல்வதென்றால் விலையைப் பற்றி யோசிக்காதீர்கள். முன்நோக்கி செல்லுங்கள் மற்றும் வாங்கிவிடுங்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த விஷயத்தில் முன்பே சொத்து வாங்கிய உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பெற்றோர்களிடமிருந்து மெய்யறிவைப் பெறலாம். எது எப்படியிருப்பினும், முன்பு உண்மைகளாக இருந்தவை இப்போது அப்படி இல்லை.

சொத்து வாங்குவதும் பங்கு சந்தை போலத் தான்

சொத்துக்களின் மற்ற பிரிவுகளைப் போலவே ரியல் எஸ்டேட்டும் ஏற்ற இறக்கக் காலங்களைக் கடந்து செல்கிறது. இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், பங்குச்சந்தை அல்லது தங்கம் போல இதில் செய்யும் முதலீடு எளிதில் ஆவியாகிவிடுவதில்லை. சில சந்தைகளில் கடந்த 1 முதல் 2 வருடங்களாகச் சொத்துவிலைகள் தேக்கமுற்றிருக்கிறது. உண்மையில் சில பகுதிகளின் விலைகள் வீழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

விலை குறைவு என்று தூரமாக வீடு வாங்குவதால் என்ன ஆகும்?

தொலைதூர பகுதிகளில் வீடு வாங்குவது விலை மலிவானதாக இருக்கலாம். ஆனால் இதனால் இதர செலவுகளான, அலுவலகத்திற்கு நீண்ட தூர பயணங்கள், குழந்தைகளுக்கான பள்ளிகள், வார இறுதியில் ஷாப்பிங் செல்லுதல், சமூக உலாக்கள் போன்ற செலவுகளைக் கொண்டு வருகிறது. உடனடியாக வீடு கட்டி குடியேறத் திட்டம் இல்லையென்றால், சொத்திலிருந்து உயர்ந்த வாடகை கிடைக்கும் என்பது போன்ற முன்னிறுத்தல்களை நம்பாதீர்கள். எதிர்காலத்தில் ஒரு சொத்து எவ்வளவு வாடகையை ஈட்டித் தரும் என்பதை யாராலும் முன்கூட்டி கணிக்க முடியாது.

சந்தையில் திருத்தம் ஏற்பட்டால் விலை குறையாது

சொத்துச் சந்தையில் திருத்தம் ஏற்பட்டால் கட்டுமானாரும் விலைகளைக் குறைப்பார் என்று அவசியமில்லை. ஒருவர் பணவீக்கத்தைக் கணக்கிட்டால் கடந்த வருடம் அல்லது அதற்கு முன்பு விலைகள் அதிகரித்திருந்தாலும் அது உண்மை நிலவரத்தில் திறம்படத் திருத்தம் செய்யப்படுகிறது. அதே போல ஒரே சொத்தின் மீது கடந்த வருடத்தை விட அதிகத் தள்ளுபடிகள் உண்மை நிலவரத்தில் சொத்துகளின் மதிப்பில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகும்.

ரூ 50 லட்சத்திற்கு விலைபோகும் என்று சொல்லப்பட்டால் அது திருட்டா?

ஒரு புதிய செயல்திட்டத்தில் இரண்டு படுக்கை அறைகள் ஹால் மற்றும் சமையலறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் ரூ. 42 லட்சம் என்று விலை சொல்லப்பட்டால், அந்தப் பகுதியில் ரூ 50 லட்சத்திற்கு விலைபோகும் என்று சொல்லப்பட்டால் அது திருட்டா? உண்மையில் அப்படி இல்லை. செய்தித்தாள்களில் வரும் முழுபக்க விளம்பரங்கள் அந்த வீட்டுமனைத் திட்டத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்ச்களைப் பற்றி நிறையப் பேசுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான விவரத்தைத் தவற விடுகின்றனர் - அது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அளவாகும்.

கட்டுமானர் குறிப்பிடும் விலைக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது

ஜோன்ஸ் லாங் லாசல்லி என்ற சொத்து விற்பனை ஆலோசனையாளர் வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில் நாட்டின் முதன்மை பெருநகரங்களில் குடியிருப்புகளின் அளவின் சராசரி குறைந்து வருகிறது என்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டுமானர் குறிப்பிடும் விலைக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது என்பது மற்றொரு அடிப்படை விதிமுறையாகும். ஏனெனில் அங்கே வீட்டை கவனித்துக் கொண்டிருப்பதற்கான கட்டணங்களின் நீண்ட பட்டியலில் சேர்ந்தே இருக்கும். வாகனம் நிறுத்தும் இடத்திற்கு, க்ளப் உறுப்பினராவதற்கு, நீங்கள் விருப்பப்படும் அமைவிடத்தைப் பெறுவதற்கு போன்ற அனைத்திற்கும் சேர்ந்து கூடுதல் கட்டணங்களைச் செலுத்தவேண்டியிருக்கும். குறிப்பிட்ட தொகையோடு இவை அனைத்தும் கூட்டப்படும்.

வசீகரிக்கப் பயன்படுத்தப்படும் தந்திரம்

பெரும்பாலும் ஒவ்வொரு கட்டுமானாராலும் வாங்குபவர்களை வசீகரிக்கப் பயன்படுத்தப்படும் விருப்பமான தந்திரம் இது. அது என்னவென்றால் ஒரு கட்டுமானாரிடம் நீங்கள் யோசிப்பதற்கு நேரம் வேண்டும் என்று சொன்னால், உடனே அவர் இந்த வீட்டு மனைத் திட்டத்தில் பெரும்பாலும் அனைத்து வீடுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன மற்றும் விலைகள் விரைவில் திருத்தப்பட்டு விலையேற்றம் அடையப் போகிறது என்று கூறுவார்.
இன்று வாங்குபவர்களின் ஆர்வத்தைவிடக் கட்டுமானார்கள் விற்பதற்கு அதிகத் துணிச்சலாக இருக்கிறார்கள்.

கட்டுமானம் முடியத் தாமதம் ஏற்படலாம்

எதார்த்தத்தில் கட்டுமான செயல்திட்டங்கள் தாமதமாகின்றன. வெகு சில திட்டங்கள் மட்டுமே காலவரையறைக்குள் முடிக்கப்படுகின்றன. சில கட்டுமானார்கள் சொத்துக்களை ஒப்படைப்பதில் ஆகும் தாமதங்களுக்கு இழப்பீட்டை வழங்குகிறார்கள். ஆனால் அதை நம்பிக் கொண்டு நீங்கள் இருக்க முடியாது.

இழப்பீட்டுத் தொகை எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஒருமுறை அவர்கள் வழங்கும் இழப்பீட்டுத் தொகையானது நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணைக்குக் கூட ஈடாகாது. இது ஏனென்றால், நீங்கள் சொத்தின் மொத்த விலைக்கு மாதத் தவணையைச் செலுத்துகிறீர்கள், ஆனால் வழங்கப்படும் இழப்பீடானது அடிப்படை விலையோடு இணைக்கப்படுகிறது. அதில் கூடுதல் கட்டணங்களான வாகனம் நிறுத்துவதற்குக் கட்டணம், க்ளப் உறுப்பினர் கட்டணம், மற்றும் பல சேர்க்கப்பட மாட்டாது.

சில கட்டுமானார்கள் ஒப்பந்தத்தில் சட்ட உட்கூறுகளில் வழுவுகிறார்கள். அது சொத்து வாங்குபவர் சட்ட உரிமை தாக்கல் செய்வதற்கு எதிராகக் கட்டுமானாருக்குப் பாதுகாப்பளிக்கிறது. மற்றவர்கள் சிலரோ அவர்கள் செலுத்தும் இழப்பீட்டிற்கு மேல் வரம்பைக் கொண்டிருக்கிறார்கள்.

 

விற்பனை ஒப்பந்தத்தில் எதைப் பார்க்க வேண்டும்?

அனைத்திற்கும் மேலாக, ஒப்பந்தத்தில் ஒரு சட்ட உட்கூறு, ஒருவேளை செயல்திட்டம் ‘எங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்படாத வெளிப்புற காரணிகளால் தாமதமானால், அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். விற்பனை ஒப்பந்தத்தை நன்கு பார்த்துக் கையொப்பமிடுங்கள் ஏனெனில், இந்த உட்கூறுகள் நுண்ணிய அச்செழுத்துக்களில் மறைந்திருக்கும்.

மாதிரி அடுக்குமாடிக் குடியிருப்பு உண்மையானது அல்ல

கட்டுமானர் குறிப்பிடும் விலைக்கு, கட்டுமான இடத்தில் நீங்கள் பார்க்கும் மாதிரி அடுக்குமாடிக் குடியிருப்பு உண்மையானது அல்ல. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி குடியிருப்பு மிக நேர்த்தியான உங்கள் கனவு இல்லத்தைப் போலத் தோற்றமளிக்கலாம், ஆனால் உண்மையில் முற்றிலும் வேறானது.

திரிபுக் காட்சி மயக்கங்களில் ஏமாற வேண்டாம்

குடியிருப்பு மாதிரிகளை உருவாக்கும் கட்டுமானார்களால் பணியில் அமர்த்தப்பட்ட வீட்டு உட்புற வடிவமைப்பாளர்கள் திரிபு காட்சி மயக்கங்களை உருவாக்குவதில் வல்லவர்கள். எந்த முறையில் ஒளியைப் பயன்படுத்தினால், மரச்சாமான்களை எந்த இடத்தில் வைத்தால் வீடு பார்ப்பதற்கு மிகப் பெரியது போலத் தோற்றமளிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.

போலித்தனத்தில் மரச்சாமான்களின் நிலை

இந்தப் போலித்தனத்தில் மரச்சாமான்களும் கூட உடந்தையாகும். ஒரு வீடு வாங்குபவருக்கு ஒரு சிறந்த குறியீடு
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட வரைபடம் மற்றும் அந்தச் செயல் திட்டப் பணியின் அமைவிடத் திட்ட வரைபடமும் ஆகும். இந்த வரைபடங்கள் குடியிருப்பின் துல்லியமான கட்டிட உட்பரப்பளவை உங்களுக்குச் சொல்லிவிடும்.

கட்டுமானார்களின் வார்த்தைகளைக் கேட்காதீர்கள்

இந்தச் சில விஷயங்களில் கட்டுமானார்களின் வார்த்தைகளைக் கேட்காதீர்கள். பணத்தட்டுப்பாடு உள்ள நிறுவனங்களில் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சொத்துக்களை விற்கும் பொறுப்பை ஏற்றுள்ள விற்பனை பிரதிநிதி முன்பணத்தைப் பெறுவதிலேயே கூர்மையான கவனத்துடன் இருப்பார். ஏனென்றால் ஒருமுறை நீங்கள் முன்பணம் செலுத்தி விட்டால் அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளியேற முடியாது என்று அவருக்குத் தெரியும்.

முன்பதிவு ரத்து செய்யும் போது ஏற்படும் சிக்கல்

ஒரு முன்பதிவை ரத்து செய்யும் போது கட்டுமானார்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்று இங்கு எதுவும் இல்லை. எனவே சில கட்டுமானார்கள் முன்பதிவு செய்த பணத்தில் 10 சதவிகிதத்தைக் கழிப்பார்கள் சிலரோ அதே சதவிகிதத்தைச் சொத்தின் மொத்த விலையின் மீது கழிப்பார்கள். வேறு சிலரோ 20 சதவிகிதத்தைக் கழிப்பார்கள். சிறிய கட்டுமான நிறுவனங்களோ முழுமையான முன்பதிவு தொகையையும் பறிமுதல் செய்து விடுவார்கள்.

இலவச கவர்ச்சி

இலவசத் திட்டங்கள் என்பது பருவகாலத்திற்கு ஏற்ப தரப்படுகிறது. பதிவு கட்டணம் முதல் நவீன சமையலறை கட்டமைப்புகள் வரை கார்கள் கூடத் தரப்படுகிறது. அனைத்துச் சலுகைகளும் ஒரு செயல்திட்டத்தில் ஒரு குடியிருப்பை முன்பதிவு செய்யும் போது வழங்கப்படுகிறது.

இந்தக் கவர்ச்சிகளை நம்பாதீர்கள். அனைத்து இலவசத் திட்டங்களும் ஏற்கனவே குடியிருப்பின் விலையில் கணக்கிடப்பட்டு விடுகிறது.

இது கவர்ச்சிகரமான சலுகையில் கிடைக்கும் திட்டங்களுக்கும் பொருந்தும். உண்மை என்னவென்றால் இந்தக் கட்டுமானார்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது மேலும் இவற்றில் பல செயல்திட்டங்கள் அதிகார மையத்தில் சரியான அங்கீகாரம் பெறவில்லை. இது செயல் திட்டங்களைக் கேள்விக்குறியாக்குகிறது.

 

கட்டுமானார்கள் வங்கிகளுடன் தொடர்பு

கட்டுமானார்கள் வங்கிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் இது எந்த வகையிலும் அந்தச் செயல்திட்டத்திற்கான ஒப்புதல் அல்ல. ஆனால் அந்த வங்கி தொடர்பு கூடச் சிறந்த வீட்டுக்கடன் வட்டி விகிதத்திற்கான வாக்குறுதி அல்ல.

வட்டி விகிதத்தை எப்படித் திட்டமிடுவது?

நீங்கள் வீடு வாங்குவதைத் தற்போதைய வட்டி விகிதத்தைப் பொறுத்துத் திட்டமிடுங்கள், வருங்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளுடன் திட்டமிடாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Planning to buy property? Don't fall for these 10 claims

Planning to buy property? Don't fall for these 10 claims
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC