1,500 நிர்வாக அதிகாரிகளை வேலையை விட்டு துரத்த டாடா மோட்டார்ஸ் திட்டம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதன்கிழமை இந்தியாவில் இருந்து 1,500 நிர்வாகிகளை நிறுவன மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

13,000 நிர்வாகிகளில் இருந்து 1,500 நபர்களை நீக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மட்டும் இல்லாமல் வெள்ளை காலர் ஊழியர்களில் 10 முதல் 12 சதவீதம் வரை நீக்கப்படலாம் என்றும் அதில் பெரும்பாலும் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளாக இருக்கலாம் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலாண்டு அறிக்கை

2016-2017 நிதி ஆண்டிற்கான 4 வது காலாண்டு அறிக்கையில் அடைந்த நாட்டத்தை வெளியிட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஊழியர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடோமேஷன்

டாடா நிறுவனம் கடந்த சில மாதங்களாகப் பல புதிய தந்திரங்கள், காரணங்களைத் தேடி நிறுவனத்தினுள் புகுத்தி வருகின்றது, அதில் ஆடோமேஷனும் அடக்கம். ஏற்கனவே வேலை வாய்ப்பு குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சியில் வரும் காலாண்டுகளில் மூலதன பொருட்கள், வங்கி மற்றும் நிதியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்படப் பல துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதைப் பார்க்க முடிகின்றது.

எல்அண்ட்டி

பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானத் துறையில் மிகப் பெரிய நிறுவனமான லேசன் அண்ட் டர்போ 2017-ம் ஆண்டு 14,000 நபர்களைப் பணியை விட்டு நீக்குகின்றது, எச்டிஎப்சி வங்கி 10,000 நபர்களை 2017 இரண்டாம் காலாண்டில் பணியை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.

ஐடி

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பை அளிக்கும் ஐடி துறையில் அன்மையில் 50,000-க்கு அதிகமான நபர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

தொழிலாளிகளுக்குப் பாதிப்பில்லை

அதே நேரம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீல காலர் அல்லது தொழிலாளி வேலைகளில் இருந்து ஊழியர்களை வெளியேற்றப் போவதில்லை என்று கூறியுள்ளது.

நிர்வாகிகள் அளவு குறைப்பு

நிர்வாகிகளில் அளவை 14-ல் இருந்து 5 ஆகக் குறைக்க மற்றும் மறுசீரமைப்பாதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டதற்குப் பிறகு இந்தியாவின் முதன்மை ஆடோமொபைல் நிறுவனம் சென்ற நிதி ஆண்டினை முழுமையாக ஆய்வு செய்ததன் பெயரில் முடிவு செய்துள்ளது.

நீண்ட காலத் திட்டத்தின் முடிவு

இதற்காக முக்கிய முடிவுகளை எடுக்கவும் பணியிடங்களுக்கான தேவையையும் மிக விரிவாக ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9 மாதங்கள் வரை செயல் திறன் மற்றும் தலைமை பொறுப்பை ஏற்பதற்கான குணங்களை ஆராந்து வந்துள்ளதாக நிறுவனத்தின் முத்த நிதி அதிகாரி சி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

விரைவில் புதிய அமைப்பு

இது ஒரு "முழுமையான அடிப்படை மறுஆய்வு" என்றும் அதற்ஆன பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால் விரைவில் புதிய அமைப்புடன் நிறுவனம் புத்தூயிற் பெறும் என்றும் கூறினார்.

இந்த நிறுவனத்தில் உள்ள உரிமை மற்றும் பொறுப்புணர்வுகளைப் பெறுவதற்கும் செலவினங்களைக் குறைக்கக் கூடாது என்பதற்கும் இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

விருப்ப ஓய்வு

அதே நேரம் குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கவும், சிலரை உலகளாவிய டெலிவரி மையம் சேவை பிரிவுகளுக்கும் மாற்ற உள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புனே சேவைப் பிரிவு

எனினும், அவர்கள் எத்தனை நபர்களைப் புனேவில் உள்ள சேவை வழங்கும் பிரிவுக்கு மாற்ற இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Motors cuts up to 1,500 managerial jobs

Tata Motors cuts up to 1,500 managerial jobs
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns