3 வருடத்தில் மோடி மக்களுக்கு என்ன செய்தார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான நரேந்திர மோடி அரசு ஆட்சியில் அமர்ந்து 3 ஆண்டுக் காலம் முடிந்துள்ள நிலையில் மக்களுக்குப் பல பயனுள்ள திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு), சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்), சவரன் தங்கப் பத்திர திட்டம் என நீளும் அந்த முழுப் பட்டியை இங்குப் பார்க்கலாம்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு இலவசமாக வங்கி சேமிப்பு கணக்கு சேவையை அளித்து.

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் துவங்கிய நாள் முதல், மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 28 கோடிப்பேருக்கு வங்கி கணக்குகள் இத்திட்டத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இந்தியர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.

 

சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்)

சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்)

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

செல்வ மகள் திட்டம் எப்படிப் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமோ அதே போன்று ஆண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாகப் பொன் மகன் சேமிப்பு திட்டமும் உள்ளது.

சிறு சேமிப்புத் திட்டம் போலச் செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2015-2016 வரை 9.2 சதவீதம் இருந்த வட்டி விகிதம் ஜூன் 2016 முதல் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

 

முத்ரா பேங்க் யோஜனா

முத்ரா பேங்க் யோஜனா

முத்ரா திட்டம் மூலமாகச் சிறு தொழில் துவங்க விரும்புபவர்கள் 50,000 ரூபாய் முதல் 10,00,000 வரை கடன் பெற்றுத் தொழில் துவங்கலாம்.

பிரதான் மந்திரி ஜீவா ஜோதி பீமா யோஜனா

பிரதான் மந்திரி ஜீவா ஜோதி பீமா யோஜனா

18 வயது முதல் 50 வயது வரையிலான மக்களுக்கு வருடம் 330 ரூபாய் என்ற குறைந்த பிரீமியம் விலையில் 2,00,000 ரூபாய் மதிப்பிலான நரேந்திர மோடி அவர்களால் 2015 மே 9-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட ஆயூல் காப்பீடு திட்டமே பிரதான் மந்திரி ஜீவா ஜோதி பீமா யோஜனா ஆகும்.

அடல் பென்ஷன் யோஜனா

அடல் பென்ஷன் யோஜனா

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மாதம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு திட்டமான அடல் பென்ஷன் யோஜனா 2015 மே 9 ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 6 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் பெற முடியும்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இந்திய உற்பத்தி பொருட்களைப் பிரபலப்படுத்துவது, தொழில் துவங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்துவது போன்ற பணிகளை 25 துறைகளில் மேக் இந்தியா மூலமாகச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் 2014 செப்டம்பர் 25 தேதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்வச் பாரத்

ஸ்வச் பாரத்

துய்மை இந்தியா எனப்படும் இந்தத் திட்டம் மூலமாக இந்தியாவை 2019 அக்டோபர் மாதத்திற்குள் சுத்தப்படுத்தும் முயற்சியாக 2014 அக்டோபர் 2-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக நாம் ஸ்வச் பாரத் வரி என்ற பெயரில் 0.50 சதவீதம் சேவை வரியைச் செலுத்தி வருகின்றோம்.

கிஷான் விகாஸ் பத்ரா

கிஷான் விகாஸ் பத்ரா

பத்திர திட்டமான இந்தத் திட்டத்தில் 1000, 5000, 10000 மற்றும் 50000 ரூபாயாக முதலீடு செய்யும் போது 100 மாதத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகி விடும். இந்தத் திட்டம் ஏற்கனவே 1988 ஆண்டு இந்திய தபால் துறை அறிமுகம் செய்து இருந்தாலும் 2014 நவம்பர் 18-ம் தேதி இந்தத் திட்டத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் அறிமுகம் செய்து வைத்தார்.

கிரிஷி அம்பானி பீமா யோஜனா

கிரிஷி அம்பானி பீமா யோஜனா

விவசாயம் செய்த நிலத்தில் எதிர்பாராத விதமாக இயற்கை பாதிப்புகளால் சேதம் அடையும் போது கிரிஷி அம்பானி பீமா யோஜனா விவசாயிகளுக்கு உதவும்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

இந்தியாவை டிஜிட்டல் மையமாக்கும் விதமாக மாற்றுவதற்கு ஏற்றவாரு மாற்றவும், இந்தியாவை டிஜிட்டல் சமுகமாகவும், அறிவுப்பூர்வமான பொருளாதார நாடக மாற்றவும் இந்தத் திட்டம் 2015 ஜூலை 1-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

உதான் விமானத் திட்டம்

உதான் விமானத் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் பிராந்திய விமான அமைப்பை நேற்று கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கு 'உதான்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும்.

உதான் திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மலை பிரதேசத்தில் 2017 ஏப்ரல் 28-ம் தேதி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். எனவே நாம் இந்தத் திட்டம் பற்றி முழுமையாக இங்குப் பார்ப்போம்.

1 மணி நேர விமானப் பயணம் அல்லது 500 கிமி தூரம் கொண்ட விமானப் பயணங்களுக்கு அதிகபட்சம் 2,500 ரூபாயாக விமானக் கட்டணம் இருக்கும்.

 

தங்க பத்திர திட்டம்

தங்க பத்திர திட்டம்

2015-16 நிதி ஆண்டில் நேரடி தங்கம் வாங்குவதற்கு மாற்றுத் திட்டமாகச் சவரன் தங்க பத்திரத் திட்டம் துவங்கப்பட்டது.

சவரன் தங்கம் பத்திரங்கள் என்பது இந்திய அரசால், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் வழங்கும் அரசாங்க தங்க முதலீட்டுப் பத்திரமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதைப் போலவே கிராம் கணக்கில் பத்திரங்களாக வாங்கலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள் ஆர்பிஐ புதிய விற்பனையை அறிவிக்கும் போது மும்பை பங்குச் சந்தை வாயிலாகப் பிற முதலீடுகளைப் போலவே தற்போதைய தங்க விலையில் தங்க பத்திரத்தை வாங்கலாம்.

 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

இந்தியாவில் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்று நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்.
இந்தத் திட்டம் மூலம், பெண்கள், பொருளாதாரப் பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வீடு கட்ட மானியம் பெற்றுப் பயன்பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 years of Modi Govt Rule: Scheme Launched for public

3 years of Modi Govt Rule: Scheme Launched for public
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X