1 நாளுக்கு 5 சிகரெட் என்றால் 60 வயதில் 1 கோடி ரூபாய்.. இது தேவையா உங்களுக்கு..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என அனைவருக்கும் தெரியும். புகைபிடிப்பவர்களுக்கு அது தெரிந்தும் தொடர்கிறார்கள். இதே புகை பிடிக்கும் பழக்கம் உங்கள் பட்ஜெட்டில் எந்த அளவு பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

 

புகைப் பிடிக செலவு செய்வது பெரிய செலவு ஒன்றும் இல்லை என்று கூறுபவர்களுக்கு அவர்கள் 60 வயது அடைவதற்குள் எவ்வளவு வீன் செய்கிறார்கள் என்று இங்குப் பார்ப்போம், இப்போது உங்களுக்கு 30 வயது தினமும் 5 சிக்ரெட் பிடிக்கிறீர்கள் என்றால் 60 வயது அதாவது உங்களது ஓய்வூதிய காலத்தில் 1 கோடி ரூபாய் ஆக இருக்கும்.

1 கோடி நீங்கள் செலவு செய்வது மட்டும் இல்லாமல் உடல் நலத்திற்காகவும் நீங்கள் எவ்வளவு செய்கிறீர்கள் தெரியுமா?

புகைபிடிக்கும் பழக்கத்தால் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகள்

புகைபிடிக்கும் பழக்கத்தால் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகள்

புகைப் பழக்கம் உள்ளவர்களுடன் வாழ்பவர்களுக்குப் பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும். அவர்களது குழந்தைகளுக்குத் தீர நோய்களுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் புகைப்பழக்கத்திற்கு அடிமை ஆனாலும் அது பிற குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும்.

சிகிரெட்டிற்குச் செய்யும் செலவு

சிகிரெட்டிற்குச் செய்யும் செலவு

ஒரு சிகிரெட்டின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை இருக்கும். நாம் சராசரியாக 12 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். 1 நாளைக்கு 5 சிகிரெட் என்றால் 60 ரூபாய், ஒரு மாதத்திற்கு 1,800 ரூபாய்.

30 வருடத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்
 

30 வருடத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்

மாதத்திற்கு 1,800 ரூபாய், ஒவ்வொரு வருடமும் 8 சதவீதம் விலை உயர்வு என்று இரண்டையும் 30 வருடத்திற்குக் கணக்கு வைத்தால் 24.47 லட்சம் ரூபாய்.

9 சதவீத வட்டி வழங்கும் திட்டத்தில் முதலீடு

9 சதவீத வட்டி வழங்கும் திட்டத்தில் முதலீடு

24.47 லட்சம் ரூபாயினை 9 சதவீதம் முதலீடு திட்டங்களில் முதலீடு செய்தால் 30 வருடத்தில் 69.23 லட்சம் ரூபாயாக உருவெடுக்கும். இதுவே பிற 12 முதல் 30 சதவீதம் வரை லாபம் அளிக்கும் மியூசுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்தால் நினைத்துப் பாருங்கள்.

சிகிரெட்டின் விலை உயர்வு

சிகிரெட்டின் விலை உயர்வு

கடந்த 4 வருடத்தில் சிகிரெட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? 2012-ம் ஆண்டு 58 ரூபாயாக இருந்து சிக்ரெட்டின் விலை 2013-ம் ஆண்டு இரண்டு முறையும், 2014-ம் ஆண்டு 1 முறையும், 2015-ம் ஆண்டு 1 முறையும் ஏப்ரல் 2016-ல் மீண்டும் உயர்ந்து 123 ரூபாய் ஆனது.

மருத்துவக் காப்பீட்டில் அதிகரிக்கும் செலவு

மருத்துவக் காப்பீட்டில் அதிகரிக்கும் செலவு

மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும் என்றாலும் கூடுதலாகப் பிரீமியம் தொகை செலுத்த வேண்டி வரும். 30 வருடத்திற்கு 1.65 லட்சம் இதனை 9 சதவீதம் வட்டி அளிக்கும் முதலீடு திட்டத்திற்காக நீங்கள் ஒதுக்கினால் 7.52 லட்சம் ரூபாய்.

எப்படி 1 கோடி

எப்படி 1 கோடி

சிக்ரெட்டிற்குச் செலவு செய்யும் தொகை 69.23 லட்சம் மற்றும் மருத்துவத்திற்கு 30 வருடம் நீங்கள் செலவு செய்யும் தொகை 26.70 லட்சம் மற்றும் காப்பீடு திட்டத்திற்குச் செலவு செய்யும் தொகையான 7.52 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள் மொத்தமாக 1.03 கோடி ஆகிறது அள்ளவா.எனவே சிக்கனமாகச் செலவு செய்து முதலீடு செய்தால் 60 வயதில் ஓய்வூதிய காலத்தில் ஒரு பெறும் தொகையுடன் செட்டில் ஆகிவிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 cigarettes a day would cost you Rs 1 crore by age 60

5 cigarettes a day would cost you Rs 1 crore by age 60
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X