ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்கலாம் வருமான வரித் துறை அதிரடி..! எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரித் துறை புதன்கிழமை ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்கலாம் என்று புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

இதற்காக வருமான வரித் துறை தேசிய தினசர் இதழ்களில் விளக்கமான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தி 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு ஆதார் மற்றும் பான் எண்ணை அனுப்புவதன் மூலம் இணைக்கலாம்.

புதிய இணைப்புகள்

புதிய இணைப்புகள்

எஸ்எம்எஸ் சேவை மட்டும் இல்லாமல் வருமான வரித்துறை புதிதாக இரண்டு இணைப்பை அறிமுகம் செய்துள்ளது. அந்த இரண்டு இணைப்புகளின் மூலமாகப் பான் கார்டுடன் எளிதாக ஆதார் கார்டினை இணைத்து விடலாம். மற்றொரு இணைப்பின் மூலமாகப் பெயரில் உள்ள சிறிய திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். எனவே இங்கு நாம் வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ள புதிய இணைப்பைப் பயன்படுத்தி எப்படி ஆதார், பான் கார்டுகளை இணைப்பது, பெயரில் திருத்தம் செய்வது என்று இங்குப் பார்ப்போம்.

முதல் இணைப்பு

முதல் இணைப்பு

'Link Aadhaar' எனப்படும் முதல் இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக ஆதார் எண் மற்றும் பான் எண்ணை எளிதாக இணைக்கலாம். இப்படிச் செய்யும் போது இரண்டு கார்டுகளிளும் பெயர் சரியாகப் பொருந்த வேண்டும்.

இணைக்கும் முறை
 

இணைக்கும் முறை

ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யும் இணைப்பை நீங்கள் தேர்வு செய்யும் போது முதலில் உங்கள் பான் குறியீடு, ஆதார் எண், பெயர் போன்றவற்றை உள்ளிட்ட பிறகு 'Link Aadhaar' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஆதார் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்குக் கடவுச் சொல் அனுப்பப்படும். அந்தக் கடவுச் சொல்லை உள்ளிட்டு எளிதாக இணைத்துக்கொள்ளலாம். ஒரு வேலை மொபைல் எண் தவறாகவோ அல்லது ஏற்றப்படாமலோ இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆதார் மின்னணு மையத்தைத் தொடர்பு கொண்டு மொபைல் எண்ணை திருத்திக்கொள்வது நல்லது.

பழைய முறை

பழைய முறை

வருமான வரித்துறையில் பழைய முறையின் படி ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க வருமான வரித்துறை இணையதளத்தில் கணக்கை உருவாக்கி அதில் உள்நுழைந்த பிறகே இணைக்க முடியும். ஆனால் புதிய முறையின் படி வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்நுழையத் தேவையில்லை.

இரண்டாம் இணைப்பு

இரண்டாம் இணைப்பு

'Links to correct Name' என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண் விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான இணைப்புகள் கிடைக்கும்.

ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யும் முறை

ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யும் முறை

ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யவும் மேலே கூறியது போன்று மொபைல் எண் கண்டிப்பாகத் தேவை. இல்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மின்னணு மையத்தைத் தொடர்பு கொண்டு மொபைல் எண்ணை திருத்திக்கொள்வது நல்லது. அப்படியும் இல்லை என்றால் ஆதார் இணையதளத்தில் திருத்தம் செய்வதற்காக உள்ள படிவதை பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்திச் செய்து கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாக விவரங்களைத் திருத்தம் செய்துகொள்ளலாம், மொபைல் எண்ணைப் பதிவு செய்துகொள்ளலாம்.

ஜூலை 1

ஜூலை 1

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ஜூலை 1-க்கு பிறகு பான் எண் செயல்படாது.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

மேலும் ஜூலை 1-ம் தேதி முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Link Aadhaar with PAN using SMS: IT dept

Link Aadhaar with PAN using SMS: IT dept
Story first published: Wednesday, May 31, 2017, 11:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X