1 ரூபாய் மருத்துவமனை.. மும்பையில் மத்திய ரயில்வே அதிரடி..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மும்பையில் முதன் முறையாக 'ஒரு ரூபாய் க்ளீனிக்' 5 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

மத்திய ரயில்வேயின் ஒரு முயற்சியாக 14 இடங்களில் இந்த மருத்துவமனை துவங்க முடிவு செய்ததாகவும் அதன் முதல் கட்டமாக இப்போது 5 இடங்களில் துவங்கியுள்ளனர்.

முதல் 5 மருத்துவனைக் காட்கோபர், தாதர், விக்ரோலி, முலுண்டு மற்றும் வாட்லா சாலை ஆகிய இடங்களில் மே 10ம் தேதி துவங்கப்பட்டது.

1 ரூபாய் மருத்துவமனை திறக்கப்பட்ட 5 இடங்களிலும் இதுவரை 6,900 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

1 ரூபாய் மருத்துவமனையின் பின் உள்ள கதை!

மேஜிக்தில் மருத்துவக் கன்சல்டன்சியின் இணைப்பில் இந்த மருத்துவனை இயங்கி வருவதாகவும், இது அனைத்து ரயில் நிலையங்களிலும் அவசர மருத்துவ அறைகள் இருக்க வேண்டும் என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அமலுக்கு வந்துள்ளது.

மனுதாரர்

சமிர் ஜாவேரி என்ற போராளி ஒருவர் ரயில் நிலையங்களில் முறையான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் விபத்துகள் நேரிடும் போது இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது மும்பை உயர் நீதிமன்றத்தில் துவங்கிய வழக்கை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தை வகுத்த மருத்துவர்கள்

மருத்துவர் ராகுல் குலே மற்றும் அவரது சகோதரர்கள் இருவரும் இந்த 1 ரூபாய் மருத்துவமனை திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் என்ன பரிசோதனை எல்லாம் செய்ய முடியும்?

இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும், தினமும் 5 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் வருவார்கள். இரத்த அழுத்த சிகிச்சை இலவசம், ஆனால் ஆலோசனை கட்டணமாக 1 ரூபாய் வசூலிக்கப்படும்.

ரத்த சர்க்கரை அளவைச் சரிபார்க்க 25 ரூபாயும், ஈசிஜி எடுக்க 50 ரூபாயும், அடிப்பட்ட காயங்களுக்குக் கட்டை மாற்ற 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

இரண்டு புதிய மருத்துவணைகள்

தானே மற்றும் வாஷி ரயில் நிலையங்களில் விரைவில் இரண்டு 1 ரூபாய் மருத்துவமனை ஜூலை மாதம் திறக்கப்படும் என்றும் 12 கூடுதல் மருத்துவமனைகள் 5 மாதத்தில் கட்டமைக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

எவ்வளவு நோயாளிகள் இதுவரை சிகிச்சைக்கு வந்துள்ளனர்?

30 சதவீதத்டிஹ்னர் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 6 நபர்கள் மிக மோசமாக அடிப்பட்ட நிலையில் குர்லா ரயில் நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதே போன்று தாதர் ரயில் நிலையத்திலும் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று கூறுகின்றார் ராகில் குலே. காட்கோப்பர் ரயில் நிலையத்தில் 3,800 நோயாளிகளும், குர்லா ரயில் நிலையத்தில் 1,800 நபர்களும், தாதர் ரயில் நிலையத்தில் 700 நபர்களும், வடாலா ரயில் நிலையத்தில் 600 நபர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

விபத்துப் பதிவுகள்

மும்பையில் தினமும் 9 நபர்கள் ரயில் பாதை கடகும் போதும், ரயில் பயணங்களின் போது கீழே விழுந்து இறக்கின்றனர். 2015-ம் ஆண்டு 3,304 நபர்களும் இறந்துள்ளனர். 3,349 நபர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.

42 ரயில் நிலையங்களிலும் 75-100 நோயாளிகள் ஆபுலென்ஸ் மூலமாக மருத்துவமனைக்குத் தினமும் மும்பை கொண்டு செல்கின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் எதிர்பார்ப்பு

இதைப் பார்க்கும் போது சென்னையிலும் இப்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரு மருத்துவமனை மற்றும் தமிழ் நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஒரு மருத்துவமனை இருந்தால் நன்றாக இருக்கும் அள்ளவா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Big Hit for One Rupee Clinic in Mumbai

Big Hit for One Rupee Clinic in Mumbai
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns