ரூ. 82 கோடியில் வீடு.. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அதிரடி..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: டிஜிட்டல் வேலெட் சேவையில் முன்னணியாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா, 82 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார்.

இந்தியாவிலேயே ஆடம்பர் ரியல் எஸ்டேட் சந்தையாக இருக்கும் டெல்லி கால்ப் லிங்கஸ்-இல் விஜய் சேகர் சர்மா தனது புதிய வீட்டை வாங்கியுள்ளார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனம் இணையதள வர்த்தகத்தில் சிறந்து விளங்குகின்றது என்றால் அது பேடிஎம் என்று அடித்துக் கூறலாம். இதே போன்று பிளிப்கார்ட் நிறுவன தலைவர்களும் புதிதாக ஒரு வீட்டினை கட்ட முடிவு செய்துள்ளனர்.

பிளிப்கார்ட் நிறுவனர்களான பின்னி மற்றும் சச்சின் பன்சால் இருவரும் பெங்களூரில் வீடு வாங்குவதற்காக முதலீடுகளைச் செய்துள்ளனர்.

 

பதில் அளிக்க மருப்பு

பேடிஎம் குறித்து நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் விசாரித்த போது அவர்கள் பதில் தெரிவிக்க மருத்துவிட்டனர். உலகளாவிய சொத்து ஆலோசகர்கள் CBRE-ஐ தொடர்புகொள்ள முயன்ற போது முறையாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.

பேடிஎம் - விஜய் ஷர்மா

பேடிஎம் நிறுவனத்தில் விஜய் சேகர் ஷர்மா அவர்களுக்கு 16 சதவீத பங்குகளும், பேமெண்ட்ஸ் வங்கி பிரிவில் 51 சதவீத உரிமையையும் உள்ளது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக அளவு முதலீடுகள் வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளது என்றால் அது பேடிஎம் நிறுவனமே ஆகும். சீனாவில் அலிபாபா மற்றும் ஜப்பானின் சாப்ட் பாங்க் ஆகியவை பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளனர்.

ஃபோர்ப்ஸ்

இளைய தலைமுறைக்கான ஃபோர்ப்ஸ் கோடிஸ்வரர்கள் பட்டியலில் 1.3 பில்லியன் மதிப்புடன் விஜய் சேகர் ஷர்மா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஹாருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில்

ஹாருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சென்ற ஆண்டு விஜய் சேகர் ஷர்மாவின் சொத்து மதிப்பு 162 சதவீதம் உயர்ந்து 40 வயதிற்குள் கோடிஸ்வரராக உயர்த்தியுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையின் பார்வை

ஷர்மா வீடு வாங்குவது டெல்லியில் உயர்மட்ட ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் மிகவும் பெரியது அல்ல, ஆனால் இணையப் பில்லியனர் லுடென்ஸின் மண்டலத்தில் நுழைவது பெரிதாகப் பார்க்கப்படுகின்றது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் 10,000 பங்களாக்கள் கொண்ட கிளஸ்டர் இங்குள்ளது, இதில் 70 நபர்கள் தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே வசிக்கின்றார்கள் . சமீபத்திய காலாண்டுகளில் பங்களா போன்றவற்றை வாங்குவது குறைந்துவிட்டதால், ஷர்மா வீடு வாங்கியிருப்பது நியாயமான ஒரு விலையைத் தான் அளித்துள்ளார் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறுகின்றன.

டாபர்

 டாபர் குழுமத்தின் துணைத் தலைவர் பர்மேன் கோல்ப் லிங்கில் 160 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Paytm boss Vijay Shekhar Sharma to buy Rs 82 crore Lutyens’ home

Paytm boss Vijay Shekhar Sharma to buy Rs 82 crore Lutyens’ home
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC