17 வயதில் தொழிலதிபர்.. ஃபோர்ப்ஸ் பட்டியலில் கலக்கும் இந்தியர்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

2017ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 வயதிற்கு உட்பட்ட கண்டுபிடிப்பாளர்களும், தொழில் முனைவோர் மற்றும் தலைவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் இந்த வருடம் 30பேர் இடம்பெற்றுள்ளனர்

இதில் அவேரியா ஹெல்த் சொல்யுஷன்ஸ் நிறுவனரான 17 வயதான தொழிலதிபரும் இப்பட்டியலில் இடம்பெற்று அசதியுள்ளார்.

விவேக் கோபர்த்தி

நியோலைட்-இன் இணை நிறுவனரான 27 வயதான விவேக் கோபர்த்தி யும் இப்பட்டியலில் அடங்கியுள்ளார். இந்நிறுவனம் மஞ்சள் காமாலை நோய்க்காக வீட்டில் பயன்படுத்தக்கூடிய, எளிதில் தூக்கிச்செல்லக்கூடிய ஒரு ஒளிக்கதிர் சிகிச்சை சாதனைத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிறுவனம் குழந்தைகளின் ஹைபோதெர்மியா நோய்க்கு சிகிச்சை அளிக்க ஒரு கருவியை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

 

பிரார்த்தனா தேசாய்

பிரார்த்தனா தேசாய், 27, வளர்ந்து வரும் உலகில் மக்களுக்கு மருத்துவத்தை பெற டிரோன்ஸ் பயன்படுத்த தனது ஹார்வார்ட் பட்டதாரி திட்டத்தை விட்டுவிட்டார்.

சுகாதார நிறுவனமான சிப்லைனில் தனது செயற்பாட்டுப்பங்கில் , ருவாண்டாவில் சுகாதாரப் பாதுகாப்பு முறை மூலம் மருந்து வழங்கி ட்ரோன் சேவையை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.

 

ஷான் படேல்

28 வயதான ஷான் படேல், ஹார்வார்டு மருத்துவப் பள்ளியில் உள்ள எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆவார் மற்றும் அறுவைசிகிச்சை பத்திரிகைகளில் நிறைய அறிவியல் வெளியீடுகள் வெளியிட்டு உள்ளார்.

அவரது நிறுவனம், ஆர்த்தோநிஞ்சா, மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்ய ஒரு மொபைல் பயன்பாட்டை உருவாக்குவதன் மூலம் மருத்துவர்கள் இடையே தொடர்பு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது

ரோஹன் சூரி

17 வயதான ரோஹன் சூரி, அவேரியா ஹெல்த் சொல்யுஷன்ஸ் இன் நிறுவனர் மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட கன்கஷன்ஸ் சோதனையை உருவாக்கியுள்ளார்.

வருண் சிவராம்

சட்டம் மற்றும் கொள்கை பிரிவில் 27 வயதான வருண் சிவராம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான முன்னணி திங்க்டாங்க் குழுவில் பணி இயக்குநர் ஆக உள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி. முடித்துவிட்டு, ஸ்டான்ஃபோர்டின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் ஆலோசனை வாரியங்களில் பணிபுரிந்தார்.

அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக "சுத்தமான ஆற்றல் கண்டுபிடிப்பு" பற்றி பாடம் கற்பித்தார் மற்றும் அதற்கு முன்னர் ஹில்லாரி கிளின்டனின் எரிசக்தி கொள்கை பற்றிய பிரச்சாரத்திற்கு அட்வைசராக இருந்தார்.

 

நேஹா குப்தா

தயாரிப்பு மற்றும் தொழில் துறையில், , 28 வயதான நேஹா குப்தா ஆப்பிள் நிறுவனத்திற்கு பீட்ஸ் விற்பதில் டிஆர்இ இல் முக்கியப் பங்கு வகித்தார். அவர் DAQRI க்காக உற்பத்தி மற்றும் சப்ளை சங்கிலியை நிர்வகிக்கிறார், இது தொழில்துறை தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட ரியாலிட்டி ஹெட்ஸெட்டுகளை உருவாக்குகிறது.

ஆதித்ய அகர்வாலா

சமூக தொழில் முனைவோர் பிரிவில் ஆதித்ய அகர்வல்லா, வயது 23, கிசான் நெட்வொர்க்கின் இணைநிறுவனர் ஆவார். பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி யில் பாதியில் படிப்பை நிறுத்திய இவர் தான் , கிசான் நெட்வொர்க்கின் இணை நிறுவனர், இது இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளுக்கு ஆன்லைன் சந்தையாகும்.

அக்ஷய் கன்னா

விளையாட்டு பிரிவில் அக்ஷய் கன்னா, வயது 29, அமெரிக்க கால்பந்து அணிக்கான பிலடெல்பியா 76 க்கான வியூகத்தின் துணைத் தலைவர் ஆவார்.

அனர்க்யா வர்தனா

மூலதனத் துறையின் துணிகர தொழிலதிபரில் ஒருவரான 28 வயதேயான அனர்க்யா வர்தனா, ரோதேன்பெர்க் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் பணிபுரிந்து பின்னர், மாவேரான் நிறுவனத்தில் சேர்ந்தார் அவர் அங்கு விர்சுவல் ரியாலிட்டி முடுக்கினைத் தொடங்கினார் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்பேஸில் நிறைய ஸ்டாட் அப் களில் முதலீடு செய்தார் .

அக்ஷய் கோயல்

அக்ஷய் கோயல், 28, ஸ்டார்வுட் கேப்பிட்டலின் துணைத் தலைவர் ஆவார். ஸ்டார்வுட் வரலாற்றில் இளம் வயதான 26 வயதில் வைஸ் ப்ரெசிடென்ட்டாக பதவி உயர்வு பெற்றார், கோயல் ஹோட்டல் கையகப்படுத்துதல்களை நோக்கமாக கொண்டு மற்றும் $ 7 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களை எடுத்துக் கொள்ள உதவினார். சமீபத்தில் அவர் 240 அமெரிக்க ஹோட்டல்களை சீனாவிற்கு $ 2 பில்லியனுக்கு விற்க உதவினார்.

அஜய் யாதவ்

நுகர்வோர் தொழில்நுட்ப துறையில் ரூமியின் நிறுவனரான அஜய் யாதவ், 29, ஒரு பயனர் சரியான ரூம் மேட் தேட, ஒருவருடன் ஒருவர் பேச, வீடு பார்த்து வாடகை கொடுக்க பொன்ற பல பயன்பாடுகளை கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் பயன்பாட்டை உருவாக்கினர். நியூயார்க் அடிப்படையிலான ரூமி இன்று $ 7 மில்லியன் விற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

17 Year Old Indian Origin Entrepreneur Features In Forbes List

17-Year-Old Indian-Origin Entrepreneur Features In Forbes List
Story first published: Friday, June 9, 2017, 14:54 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns