விஜய் டிவி-க்கு போட்டியாக சன் டிவி-ன் அதிரடி திட்டம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஒரு சில நாட்களாகச் சன் நெட்வொர்க் சேனலகளைப் பார்ப்பவர்கள் இந்த விளம்பரத்தை கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். அதாவது வள்ளி சீரியலை இரவில் பார்க்கலாம், தெய்வமகள் சீரியலை காலையில் பார்க்கலாம், ஒரு வாரம் நந்தினி சீரியலை ஒரே நாளில் பார்க்கலாம், அப்பறம் இப்பா ஓடிக்கிட்டு இருக்கிற எல்லாச் சீரியலையும் எங்கு இருந்து வேண்டுமானாலும் லைவாகப் பார்க்கலாம் அப்பறம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. என்ற அந்த விளம்பரம் முடியும்.

இந்த விளபரத்தை பார்த்தவர்கள் இது எதற்காக என்று குழம்பி இருப்பார்கள். விரைவில் ஸ்டார் நெட்வொர்க்கின் ஹாட்ஸ்டார் இணையதளச் செயலிக்குப் போட்டியாகச் சன் நெட்வொர்க் ஒரு செயலியை வெளியிட இருக்கின்றது.

விரைவில் சன் டிவி சீரியல்கள் இணையத்தில்

இந்தச் செயலியின் மூலமாகச் சன் நெட்வொர்க் சீரியல்கள் அனைத்தையும் எங்கு இருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், பார்க்கத் தவறிய எப்பொசோடுகளாக இருந்தாலும் கண்டு மகிழலாம். இது கண்டிப்பாக வெளிநாட்டில் உள்ள இருந்து சன் நெட்வொர்க் சேனல் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

யூடுயூப்

யூடுயூப் மூலமாகப் பல வீடியோ சேனல்களை உருவாக்கிப் பல நிகழ்ச்சிகளை வெளியிட்டு வரும் இந்த வேளையில் ஹாட்ஸ்டோர் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கான வீடியோ ஸ்டீரிமிங் தளத்தை உருவாக்கி வருகின்றன.

ஹாட்ஸ்டார்

ஹாட்ஸ்டார் தளத்தில் எப்படி ஸ்டார் நெட்வொர்க் நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் லைவாகா பார்க்க முடிகின்றதோ அதே போன்று விவரைவில் சன் டிவி நிகழ்ச்சிகளையும் லைவாகவும், பார்க்க முடியாத நிகழ்ச்சிகளை இணையதளமாகப் பார்த்து மகிழக்கூடிய செயலியாக இருக்கும் என்று நமக்குத் தகவல் கூறுகின்றன.

ஸ்டார் விஜய்

சன் டிவி சீரியல்களுக்குப் பேர் போன சேனல் என்பதால் ஸ்டார் விஜய் சேனலின் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சிகளுக்கு இது ஒரு போட்டியாக அமையும்.

ஜீ தமிழ்

இதே போன்று விரவில் ஜீ தமிழும் செயலி ஒன்றை வெளியிடலாம். சன் டிவி-ன் இந்த விளம்பரத்தை நீங்கள் பார்க்காமல் இருந்தால் இங்குப் பார்க்கலாம்.

பட்டிமன்றம்

சன் டிவி நடத்தும் பட்டிமன்றங்களுக்கு எப்போது தமிழர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். அதனால் சீரியல்கள் பார்க்க இந்தச் செயலியை பயன்படுத்துவார்களோ இல்லையோ கண்டிப்பாக இந்தப் பட்டிமன்றங்களைப் பார்க்க இணையவாசிகள் விரும்புவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sun tv network going to launch competitors to star networks hotStar

Sun tv network going to launch competitors to star networks hotStar
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns