தென் இந்தியாவில் இந்த ரயில் பயணம் செய்ய 17.3 லட்சம் ரூபாய் செலவாகும்.. ஏன் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்தில் ரயில்வே துறைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதன் காரணமாவே மத்திய பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கு திட்டப்பட்ட வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது வந்தது. இது கடந்த நடப்பு நிதியாண்டில் நீக்கப்பட்டாலும் மத்திய பட்ஜெடில் இதற்கு தனி இடம் உண்டு.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் (ஐஆர்சிடிசி) நிறுவனம் வெள்ளிக்கிழமை மகாராஜா எக்ஸ்பிரஸில் ஒரு புதிய ஆடம்பர சுற்றுலா திட்டத்தை அறிவித்தது.

பிரீமியம் பிரிவில் உள்ள ஆடம்பர சுற்றுப்பயணமானது, ஜூலை 1 ம் தேதி திருவனந்தபுரம் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி மும்பையில் முடிவு பெறும்.

தென் இந்தியாவில் எங்கு எல்லாம் செல்லலாம்?
 

தென் இந்தியாவில் எங்கு எல்லாம் செல்லலாம்?

ஆடம்பர மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாகத் தென் இந்தியாவில் செட்டிநாடு, மஹாபலிபுரம், மைசூர், ஹம்பி மற்றும் கோவா ஆகிய இடங்களைப் பாரிவயிட்ட பிறகு மும்பையில் தனது பயணத்தை நிறைவு செய்யும்.

பயண நேரம் எவ்வளவு

பயண நேரம் எவ்வளவு

மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் சுற்றுலாவின் இந்தத் திட்டத்தில் 8 பகல் மற்றும் 7 இரவு தொடர்ந்து பயணம் செய்பவர்கள்.

கட்டணம் எவ்வளவு

கட்டணம் எவ்வளவு

டீலக்ஸ் கேபினை புக் செய்ய ஒரு நபருக்கு 5,00,680 ரூபாய் கட்டணம் ஆகும், சிங்கிள் சப்ளிமெண்ட் கட்டணம் 3,77,670 ரூபாய், ஜூனியர் சூட்டில் பயணம் செய்ய 7,23,420 ரூபாய் கட்டணம், சிங்கிள் சப்ளிமெண்ட் கட்டணம் 6,52,280 ரூபாய் கட்டணம். சூட் கட்டணம் 10,09,330 ரூபாய் ஆகும்.

இதுவே பிரெசிடெண்ட் சூட் என்றால் 17,33,410 ரூபாய் கட்டணம் ஆகும்.

அறையைப் பகிர்ந்து கொண்டால் கட்டணம் குறையும்
 

அறையைப் பகிர்ந்து கொண்டால் கட்டணம் குறையும்

டிவின் ஷேரிங் அடிப்படையில் அல்லது கேபின் ஷேரிங் அடிப்படையில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் குறையும். கேபின் கட்டணம் ஒருவருக்க 53,200 ரூபாய் ஆகும். இதுவே பகிர்ந்து கொள்ளும் போது ஒருவருக்கு 33,250 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தில் இரண்டு இரவு மூன்று பகல் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

மகாராஜா எக்ஸ்பிரஸில் அப்படி என்ன தான் சிறப்பு?

மகாராஜா எக்ஸ்பிரஸில் அப்படி என்ன தான் சிறப்பு?

23 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 88 நபர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ரயில் பயணத்தில் நீர் வடிகட்டுதல், பங்க் படுக்கை இல்லாத விசாலமான இருப்பிடம், இரண்டு பார் மற்றும் ஓய்விடங்கள் மற்றும் இரண்டு உணவகங்கள் இருக்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC launches South India tour circuit on Maharajas' Express

IRCTC launches South India tour circuit on Maharajas’ Express
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X