இந்தியாவில் 6 வருடங்களில் வங்கிளே இருக்காது: அமிதாப் கண்ட்

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: குறைந்த விலையில் இணையதளத்தைச் சார்ந்த பரிவர்த்தனை மற்றும் வங்கி சேவைகள் அதிகரித்து வருவதினால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது என்றும் இதன் அடுத்தக் கட்டமாக 5 முதல் 6 வருடத்தில் நேரடி வங்கிகள் காணாமல் போய்விடும் என்றும் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் கூறினார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் கண்ட் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் என்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் அறிமுகத்தால் எதிர்காலத்தில் வங்கி கிளைகளை இயக்க, வேண்டிய செலவுகளை ஈடுகட்டுவது பெரும் சுமையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வங்கி சேவைகள்

மொபைல் போன்கள் மற்றும் இணையதள வங்கி சேவை மூலமாக அதிகளவில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று வருவது நிதி சேவைகளைத் தொழில்நுட்பங்கள் உதவியுடன் செயல்படும் முறை அதிகரித்து வருகின்றது. எனவே வங்கிகளுக்குக் கடன் அளிப்பதும், வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களை ஆராய்வதற்கும் மிகவும் எளிமையாகவும் வேகமாகவும் கடன் அளிக்கவும் முடிகின்றது.

தொழில்நுட்பத்தை நோக்கு பயணிக்கும் வங்கிகள்

மொபைல் மற்றும் இணையம் மூலமாகப் பணப்பரிமாற்றம் நடப்பதால் வங்கிகள் டிஜிட்டல் வளர்ச்சியில் நோக்கிச் செல்கின்றன. அனைத்து டிஜிட்டல் என்ற பட்சத்தில் நேரடி வங்கிகளின் தேவை குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேமெண்ட்ஸ் வங்கி

ஏர்டெல், இந்தியா டபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் பேடிம் நிறுவனங்கள் ஏற்கனவே பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்கத் துவங்கியுள்ளன. கடந்த 45 வருடங்களில் 28 வங்கிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஆனால் கடந்த 18 மாதங்களில் மட்டும் 21 பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நிறுவனங்கள்

பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிக்க ஆதித்யா பிர்லா நுவோ, ஃபினோ பேடெக், தேசிய செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வோடபோன் எம்-பெசா ஆகிய நிறுவனங்களும் ஆர்பிஐ வங்கியிடம் அனுமந்தி கோரியுள்ளனர்.

புதிய சீர்திருத்தங்கள்

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, வங்கி திவால் சட்டங்கள் போன்றவற்றில் செய்துள்ள புதிய சீர்திருத்தங்களை மற்றும் ஒரு நாளில் புதிய நிறுவனத்தைப் பதிவு செய்து துவங்கும் முறை எனப் பல திட்டங்கள் கடந்த 3 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமலுக்கு வந்துள்ளதாகக் கண்ட் தெரிவித்தார்.

இந்தியாவை மாற்ற வேண்டும்

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்றும் இந்தியாவை மாற்ற வேண்டும். ஆனால் ஒரு சிலர் வெளிநாட்டிற்கு 10 நாட்கள் சென்று வந்துவிட்டு ஏளனமாகப் பேசுகிறார்கள் என்றார்.

டிஜிட்டல் தரவு

இந்தியா பணக்கார நாடாக மாறுவதற்கு முன்பு டிஜிட்டல் தரவு சேகரிப்பில் முதல் நாடாக மாறிவிடும் என்றும் இதனால் கிராமப் புறங்கள் கூட வேகமாக முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NITI Aayog CEO Amitabh Kant predicts the demise of banks in next 6 years of India

NITI Aayog CEO Amitabh Kant predicts the demise of banks in next 6 years of India
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns