எஸ்எம்எஸ் மூலம் தினசரி பெட்ரோல் விலையை அறிவது எப்படி..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிராகப் பெட்ரோல் நிலையங்கள் போர் கொடி எடுத்து இருந்தாலும் அவர்கள் எடுத்த தினமும் பெட்ரோல் விலை மாற்றப்படும் என்ற அறிவிப்பை வாஸ் வாங்கப் போவதாக இல்லை.

அதற்கு உதாரனாகத் தான் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிறமமும் இன்று பெட்ரோல் விலையைத் திரிந்துகொள்ளச் செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடு ஆகும்.

தினமும் விலையைத் தெரிந்துகொள்ள வேண்டும்

எண்ணெய் நிறுவனங்களைப் பொருத்தவரை தினமும் பெட்ரோல், டீசல் விலையைத் தெரிந்துகொண்டு தான் பெட்ரோல் நிலையத்தில் விற்பனையைத் துவங்க வேண்டும்.

விலையைத் தெரிந்துகொள்ளச் சிறப்பு ஏற்பாடுகள்

புதுப்பிக்கப்பட்ட விலைகள் உடனடியாக அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும், பொதுமக்களுக்குத் தகவல்களை அளிக்கச் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு வழி தான் ஆப் மூலம் விலையைத் தெரிந்துகொள்ளும் முறை ஆகும்.

செயலி

எல்லா நகரங்களிலும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, குழப்பம் இல்லாமலும் தினமும் பெட்ரோல், டீசல் விலையை அறிந்துகொள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் Fuel@IOC என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்எம்எஸ்

ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் RSPDEALER CODE என்பதை டைப் செய்து 92249-92249 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலம் எளிதாகத் தினமும் பெட்ரோல், டீசல் விலையைத் தெரிந்துகொள்ளலாம்.

பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறையினை எதிர்க்கும் விதமாகப் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஜூன் 16-ம் தீதி நாடு தழுவிய பெட்ரோல் வாங்கப்போவதும் இல்லை என்றும் விற்கப்போவதும் இல்லை என்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள இங்குக் கிளிக் செய்யவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

No worries on daily fuel price changes.. How to check prices via SMS

No worries on daily fuel price changes.. How to check prices via SMS
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns