இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உண்மையான முகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியா மீதும், இந்திய நிறுவனங்கள் மீதும் எப்போதும் ஒரு கண் உண்டு. காரணம் நம்நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகம். சமீப காலமாக இந்தியாவில் இருக்கும் முன்னணி மற்றும் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்கள் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.

 

இந்த ஈர்ப்பில் தான் பெரிய நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகள் வெளியேறி நிறுவனங்களைத் துவங்கினார். இந்த நிறுவனங்களிலும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்தனர். சின்னி கல்லு பெத்த லாபம்..

விளைவு..

விளைவு..

இந்த முதலீட்டு வாய்ப்பைப் பயன்படுத்தி உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ந்தது.

இதில் சில நிறுவனங்கள் கொடிகட்டி பறந்தாலும், பல நிறுவனங்கள் துவக்கத்திலேயே தோல்வியைச் சந்தித்தது. பல முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய முதலீட்டை ஈர்த்தபின் லாபத்தைக் காட்ட முடியாத நிலையில் கவிழ்ந்தது.

22 பில்லியன் டாலர்

22 பில்லியன் டாலர்

2007ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்திய முதலீட்டு நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்த தொகை மட்டும் 22 பில்லியன் டாலர்.

இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இது 1,41,416 கோடி ரூபாய்.

என்ன ஆனது..?
 

என்ன ஆனது..?

இன்றைய நிலையில், கார்பரேட் நிறுவனங்களில் அதிகளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது என்றால் அது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மத்திய அரசு கூட இதனை இந்தியாவில் புதிய சக்தி என்று நினைத்த போது, ஸ்டார்ட் அப் சந்தை கவிழ்ந்து உள்ளது.

உண்மையான நிலை..

உண்மையான நிலை..

இந்நிலையில், இந்திய ஸ்டார்ட் அப் சந்தையில் வெற்றிபெற்ற துறை, நிறுவனங்கள், இதன் பதிப்பு, தோல்வியடைந்த நிறுவனங்கள், துறை, ஆகியவற்றைப் பற்றியே இப்போது அலசப்போகிறோம்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மொத்தமாகப் பிரித்து விட முடியாது. துறை வாரியாகப் பிரித்து, அதன்பின்பே வெற்றி தோல்வியைக் கணக்கிடமுடியும். முதலில் ஈகாமர்ஸ்.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இவ்வளவு பெரியதாக வளர்ந்ததற்கு முக்கியக் காரணம் ஈகாமர்ஸ் துறையின் வெற்றி தான்.

முதலீடு ஈர்ப்பு: 11 பில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இத்துறையில் தலைசிறந்த 3 நிறுவனங்களின் மதிப்பீடு மட்டும் 14 பில்லியன் டாலர்.

டாப் ஸ்டார்ஸ்: பிளிப்கார்ட், குவிக்கர், ஷாப்கூலுஸ்

தோல்வி: இத்துறையில் துவங்கப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பக் கட்டத்தில் அதிகளவில் முதலீட்டை ஈர்த்த 5 நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்த 5 நிறுவனங்கள் சுமார் 51.1 மில்லியன் டாலர் வரை முதலீட்டை ஈர்த்தது.

இதில் Letsbuy மற்றும் SherSingh ஆகியவை மிகப்பெரிய தோல்வியில் முடங்கியது.

டிஜிட்டல் பேமெண்ட்ஸ்

டிஜிட்டல் பேமெண்ட்ஸ்

முதலீடு ஈர்ப்பு: இத்துறையில் நிறுவனங்கள் ஈர்த்த முதலீட்டுத் தொகை 3.1 பில்லியன் டாலர்(கடன் உடன் சேர்த்து)

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் தலைசிறந்த நிறுவனமாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 7 பில்லியன் டாலர்.

டாப் ஸ்டார்ஸ்: பேடிஎம், மொபிகிவிக்

தோல்வி: 2007ஆம் ஆண்டு முதல் இப்பிரிவில் சுமார் 282 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டது. இதில் 20 நிறுவனம் சுவடு தெரியாமல் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் டாஸ்சி

ஆன்லைன் டாஸ்சி

முதலீடு ஈர்ப்பு: 2.21 பில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: ஓலா நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் டாலர்

டாப் ஸ்டார்ஸ்: ஓலா, மீரு கேப்ஸ், மெகா கேப்ஸ். உபர் வெளிநாட்டு நிறுவனம்.

தோல்வி: இப்பிரிவு சேவையில் துவங்கப்பட்ட 192 நிறுவனங்கள் 76 நிறுவனங்கள் மூடப்பட்டது.

ஹெல்த்கேர்

ஹெல்த்கேர்

முதலீடு ஈர்ப்பு: 1.1 பில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இப்பிரிவில் தலைசிறந்த 3 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்

டாப் ஸ்டார்ஸ்: Practo, 1MG, Portea

தோல்வி: இத்துறையில் சுமார் 2,678 நிறுவனங்கள் துவங்கப்பட்டு 310 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

Software as a Service (SaaS)

Software as a Service (SaaS)

முதலீடு ஈர்ப்பு: 1.75 பில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இப்பிரிவில் தலைசிறந்த 3 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்

டாப் ஸ்டார்ஸ்: ப்ரெஷ்டெஸ்க், கேப்பில்லரி டெக்னாலஜிஸ், துருவா

தோல்வி: இத்துறையில் தலைசிறந்த நிறுவனமாகத் திகழ்ந்த 5 நிறுவனங்கள் மூடப்பட்டது, பெரிய சோகம்.

Ad-tech (விளம்பர டெக்னாலஜி)

Ad-tech (விளம்பர டெக்னாலஜி)

முதலீடு ஈர்ப்பு: 734 மில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: தலைசிறந்த 3 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு 1 பில்லியன் டாலர்

டாப் ஸ்டார்ஸ்: இன்மொபி

தோல்வி: $700,000 டாலரை முதலீட்டாக ஈர்த்த 3 முன்னணி நிறுவனங்களும் மூடப்பட்டது.

கேமிங்

கேமிங்

முதலீடு ஈர்ப்பு: 123.4 மில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இத்துறை நிறுவனங்கள் வளர்ச்சியும் வர்த்தகமும் குறைவாக இருக்கும் காரணத்தினால் இதன் மதிப்பீடு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டமுடியவில்லை.

டாப் ஸ்டார்ஸ்: நாசாரா டெக்னாலஜிஸ் (2016ஆம் ஆண்டில் 220 கோடி ரூபாயை வருவாயாக ஈர்த்தது.)

தோல்வி: 2007ஆம் ஆண்டு முதல் சுமார் 262 நிறுவனங்கள் துவங்கப்பட்டு 76 நிறுவனங்கள் மூடப்பட்டது.

கல்வி

கல்வி

முதலீடு ஈர்ப்பு: 509.33 மில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 600 மில்லியன் டாலர் (Byju's)

டாப் ஸ்டார்ஸ்: Byju's

தோல்வி: 2,460 இல் 224 நிறுவனங்கள் மூடப்பட்டது.

பேஷன்

பேஷன்

முதலீடு ஈர்ப்பு: 1.13 பில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 3 நிறுவனங்களின் மதிப்பு 550 மில்லியன் டாலர்

டாப் ஸ்டார்ஸ்: லென்ஸ்கார்ட், ஜிவாமே, லைம்ரோடு

தோல்வி: 1,415இல் 280 நிறுவனங்கள் மூடப்பட்டது.

ஹைப்பர்லோக்கல் (home services+food tech+delivery)

ஹைப்பர்லோக்கல் (home services+food tech+delivery)

முதலீடு ஈர்ப்பு: 1.4 பில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 3 நிறுவனங்களின் மதிப்பு 1.7 பில்லியன் டாலர்

டாப் ஸ்டார்ஸ்: சோமேட்டோ, ஸ்விக்கி, கோப்பர்ஸ்

தோல்வி: 2,420 இல் 780 நிறுவனங்கள் மூடல்

டேட்டிங் ஆப்ஸ்

டேட்டிங் ஆப்ஸ்

இந்தியாவிற்கு டேட்டிங் ஆப்ஸ் இன்னமும் ஏலியன் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 10 வருடத்தில் இத்துறையில் 23 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மூடப்பட்டது.

இந்தியாவில் தற்போது பிரபலாமாக இருக்கும் டேட்டிங் ஆப்ஸ் என்றால் Tinder, OkCupid and Badoo

எலக்ட்ரானிக் ரீடைல்

எலக்ட்ரானிக் ரீடைல்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து பல நிறுவனங்கள் இத்துறைக்காகப் பிரத்தியேகமாகத் துவங்கப்பட்டது.

முதலீடு ஈர்ப்பு: 38.6 மில்லியன் டாலர்

முக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 2 நிறுவனங்களின் மதிப்பு 125 மில்லியன் டாலர்

தோல்வி: 147 நிறுவனங்கள் துவங்கப்பட்டதில் 34 நிறுவனங்கள் மூடப்பட்டது.

சோஷியல் நெட்வொர்கிங்

சோஷியல் நெட்வொர்கிங்

முதலீடு ஈர்ப்பு: 168 மில்லியன்

தோல்வி: Frankly, Chance மற்றும் KaraokeGarage

வேல்யூ ஆடேட் சரிவீசஸ்

வேல்யூ ஆடேட் சரிவீசஸ்

முதலீடு ஈர்ப்பு: 129 மில்லியன் டாலர்

தோல்வி: MXL டெலிகாம், இத்துறையில் துவங்கப்பட்ட ஒரேயொரு நிறுவனம் இதுதான்.

குரூப் பையிங் வலைத்தளங்கள்

குரூப் பையிங் வலைத்தளங்கள்

வர்த்தகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டு வரும் நோக்கத்தில், டீல் மற்றும் தள்ளுபடிகளை அளிப்பது தான் இந்நிறுவனங்களுக்கு வேலை. இதன் மூலம் இவர்களுக்குக் கமிஷன் கிடைக்கும்.

தோல்வி: இத்துறையில் துவங்கப்பட்ட 514 நிறுவனங்களில் 221 இணையதளங்கள் மூடப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ecommerce to Dating apps: Real face of Indian start up world

Ecommerce to Dating apps: Real face of Indian start up world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X