இன்போசிஸ் நிறுவனத்தில் சோகம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தங்களது வெளிநாட்டுக் கிளை அலுவலகங்களில் 1,800க்கும் அதிகமான ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் அளிக்கின்றது.

அதில் 150 நபர்கள் சென்ற நிதி ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள், இதனால் இஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதி ஆண்டில் மிகப் பெரிய சவாலினை எதிர்கொள்ள இருக்கின்றது.

எதனால் சம்பளம் குறித்துப் பெரிதாகப் பேசப்படுகின்றது

இன்ஃபோசிஸ் நிறுவனம் அளிக்கும் சம்பளம் இப்போது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்க காரணம் சென்ற மாதம் அமெரிக்காவில் 10,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பதாகும்.

இந்திய ஊழியர்கள்

2016-2017 நிதி ஆண்டில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தனது இந்திய கிளைகளில் உள்ள 151,956 ஊழியர்களில் 50 நபர்களுக்கு மட்டுமே 1 கோடி ரூபாய்ச் சம்பளமாக அளித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் 48,400 நபர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1,800 நபர்களுக்குக் கோடிகளில் சம்பளம் வழங்கி வருகின்றது. வளர்ந்த சந்தையில் திறமையான தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயங்களில் சம்பளம் அளிக்கும் போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஃப்ரெஷர்களுக்கு அதிகச் சம்பளம்

இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவில் பணிக்கு ஆட்கள் எடுக்கும் போது ஃப்ரெஷர்களை அதிக அளவில் எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதுவும் இந்திய நிறுவனங்களுக்கு அதிகச் செலவினை தான் அளிக்கும்.

கல்லூரி படிப்பு முடிந்த உடன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது ஒரு வருடத்திற்கு 70,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் அளிக்க வேண்டும் என்றும் இதுவே நாட்கள் செல்லும் போது 125,000 முதல் 150,000 டாலர்கள் அதாவது 80 முதல் 96 லட்சம் ரூபாய் வரை அனுபவத்தைப் பொருத்துச் சம்பளம் உயரும்.

அனுபவம்

டலாஸ் உள்ளிட்ட சந்தைகளில் அனுபவம் உள்ள மென்பொருள் வல்லுநர்களுக்கு 125,000 டாலர்கள் முதல் 200,000 டாலர்கள் வரை சம்பளம் அளிக்க வேண்டி உள்ளது.

2017 நிதி ஆண்டில் வெளிநாடுகளில் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

இந்தியாவில் அதிகம் சம்பளம் ஊழியர்களின் பட்டியலை இன்ஃபோசிஸ் வெளியிட்டாளும், வெளிநாட்டு ஊழியர்களின் பட்டியலை அதிகப்படியாகத் தவிர்க்கின்றன.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை இண்டெராக்டிவ் ஏஜென்சி பிரிவில் டிஜிட்டல் தலைவர் பொறுப்பில் உள்ள ஸ்கொட் சோர்கின் 7.3 கோடி சம்பளமாகப் பெறுகின்றார். இன்போசிஸ் நிறுவனங்களின் உலகளாவிய தலைவரான அப்துல் ரசாக் ரூ. 5.26 கோடி வழங்கப்படுகின்றது. வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியின் தலைவரான சஞ்சய் ராஜகோபாலன் ரூபாய் 5.2 கோடியைக் கடந்துள்ளார். ஆர்க்கிடெக்ட் மற்றும் தொழில்நுட்பம் பிரிவின் தலைவரான நவீன் புத்திராஜா 5.3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றார். பெருநிறுவன வளர்ச்சியின் உலகளாவிய தலைவர் ரூபிகா சூரி 5.1 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றார்.

 

யார் இவர்கள்?

ரஜாக், ராஜகோபாலன், புத்திராஜா மற்றும் சூரி ஆகியோ சேப் நிறுவனத்தில் இருந்து இன்ஃபோஸிஸ் நிறுவனத்திற்கு வந்துள்ளவர்கள், இதுமட்டும் இல்லாமல் மைக்ரோசாப்ட், சாம்சங்ம் பாங்க் ஆப் அமெரிக்கா, டிரீம்வொர்க்ஸ் மற்றும் ஐபிம் நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை 2 கோடி சம்பளம் அளித்து இன்ஃபோஸிஸ் இறக்குமதி செய்துள்ளது.

அதிகரிக்கும் செலவு

முழுமையாக மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்கான பணிகள் நடைபெறுவதால் திறமையானவர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள். எனவே சம்பளம் அதிகம் அளித்து ஊழியர்களை நிறுவனம் எடுக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

போட்டி

இந்திய நிறுவனங்கள் டிலோட்டி மற்றும் அக்சென்ச்சர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போட கண்டிப்பாக அதிகப்படியான சம்பளத்தை அளித்து உலகம் முழுவதிலும் இருந்து ஆட்களை எடுக்க முடிவு செய்துள்ளன.

விஷால் சிக்கா

இன்ஃபோஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை விஷால் சிக்கா தலைமை பெருப்பிற்கு வந்த பிறகு தான் இது போன்று அதிகச் சம்பளம் அளித்து ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் முடிவுகளை இன்ஃபோஸ் எடுத்துள்ளது என்றும் கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys braces for bigger cost blow as Vishal Sikka bulks up on highly paid talent

Infosys braces for bigger cost blow as Vishal Sikka bulks up on highly paid talent
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns