பாலை விட சத்தானதாம் இந்த பீர்.. இந்தியாவில் இதன் விற்பனை அமோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்குப் பீர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிங்ஃபிஷர் மற்றும் அதன் நிறுவனம் மல்லையாவும் தான். இப்படிப் பேர் பெற்ற கிங்பிஷர் நிறுவனத்திற்குப் போட்டியாகப் பிரா என்ற தயாரிப்பு இந்தியர்களிடம் பெறும் வரவேற்பு பெற்றுள்ளது தான் இப்போதைய சிறப்பு.

 

எனவே இங்கு நாம் பிரா நிறுவனம் தங்களது பீர் பாணங்களை எப்படி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, எப்படி வர்த்தகம் சூடுபிடித்தது என்று இங்குப் பார்க்கலாம்.

பிரா 91-க்குப் பின்னால் உள்ள கதை

பிரா 91-க்குப் பின்னால் உள்ள கதை

நியூயார்க்கில் ஹெல்த்கேர் நிறுவனத்தை நடத்தி வந்த அன்கூர் ஜெயின் 2007-ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். முதலில் வெளிநாடுகளில் இருந்து பீர் வகைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் துவங்கினார், ஆனால் இந்த வணிகத்தில் இவருக்குப் பெரிதாக எந்த அனுபவமும் இல்லை.

"2014 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் இளம் நகர்ப்புற மக்களுக்கான சுறுசுறுப்பான பிராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்த எங்களுக்கு நேரம் கிடைத்தது, அதில் சுவாரஸ்யமான அம்சங்கள், சுவை, மற்றும் தரம் ஆகியவை இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அறிமுகம் செய்தோம் என்று ஜெயின் கூறினார்.

 

ஒரு தந்திரமான யோசனை

ஒரு தந்திரமான யோசனை

கிங்ஃபிஷர் ஸ்டிராங் மற்றும் ஹேவார்ட்ஸ் நிறுவனங்களிடம் இருந்த சந்தையில் உள்ள அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பீரில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர். அதனைப் பிரா அவர்களுக்கு அளித்தது.

2015 பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சர்வதேச பீர்களுக்கு மாற்றாக, தற்காலிக மற்றும் சமகாலப் பேக்கேஜிங் ஏற்றவாறு பீரா 91-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.

 

மகிழ்ச்சியான நேரங்களைக் கொண்டு வாருங்கள்
 

மகிழ்ச்சியான நேரங்களைக் கொண்டு வாருங்கள்

இந்திய நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் மத்தியில் பிரா 91 பெறும் வரவேர்ப்பைப் பெற்றது. 2015-ம் ஆண்டு 150,000 அட்டை பெட்டி பீர் விற்பனையான நிலையில் 2016-ம் ஆண்டு 700,000 அட்டைப்பெட்டிகள் விற்பனையாகியுள்ளது.

பீர் விலை பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களை விட விலை அதிகம் அது மட்டும் இல்லாமல் இதற்கு வரியும் உண்டு. ஆனால் பீரா பீர் 330 மில்லி லிட்டர் பாட்டில் ரூபாய் 90-க்குச் சந்தையில் கிடைக்கின்றது.

 

பால்-ஐ விட ஆரோக்கியமான பீர்

பால்-ஐ விட ஆரோக்கியமான பீர்

பிரா 91 அன்மையில் தனது முதல் குறைந்த கலோரி கொண்ட பீரினை அறிமுகம் செய்துள்ளது. பார்களில் பீர் அருந்த விரும்ப்புபவர்களுக்குப் பீரா ஒரு குறைந்த கலோரி பீருக்கான தேர்வாக இருக்கும் என்றார்.

இது ஒரு கிளாஸ் ஷாம்பெயின், ப்ரீஸர்ஸ், மது, அல்லது காக்டெய்ல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவானது. அதுமட்டும் இல்லாமல் இது பால் அல்லது ஆரஞ்சு ஜூசை விடை குறைவானது.

 

லைட்/ஸ்டிராங்

லைட்/ஸ்டிராங்

மறுபுறம் பிரா 91 ஸ்டிராங் "உயர் அடர்த்திக் கோதுமை பீர்". இது கோதுமை அடிப்படையில் முதல் ஸ்டிராங் பீர் ஆகும். இந்தப் பீர் சிறந்த நறுமணமுள்ள அலி பீர் ஒரு தனித்துவமான மற்றும் அதிகச் சுவை, கசப்பு குறைவாக உள்ளது, தேன் மற்றும் கேரமல் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 7% ஆல்கஹால் அளவில், வெகுஜன பியர் சந்தைக்குச் சுவையில் ஒரு புரட்சியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பிரதானமான பீர் சந்தையைப் பெறும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

விற்பனையும் முதலீடும்

விற்பனையும் முதலீடும்

பிரா 91 இந்த நிதி ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வணிகத்தை நோக்கு தங்களது விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக 160 கோடி ரூபாய் வரை முதலீடுகள் டிஜிபி கிரோத் நிறுவனத்திடம் இருந்து பெறும் முயற்சி செய்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தில் 22 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது.

91-க்கு என்ன அர்த்தம்

91-க்கு என்ன அர்த்தம்

பிரா 91 என்ற பெயரில் உள்ள 91-க்கு இந்தியாவின் ஐஸ்டி கோடு எண் ஆகும், இப்போது 15 நகரங்களில் பிரா 91 கிடைக்கின்றது. இந்தக் காலாண்டில் பிரீமியம் பீர் சந்தையில் 8 நகரங்களைப் பிடிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சியர்ஸ் சொல்லுங்கள்

சியர்ஸ் சொல்லுங்கள்

சென்ற ஆண்டு வரை பெல்ஜியம் நாட்டில் இருந்து இயங்கி வந்த பிரா 91-க்குத் தற்போது இந்தூரில் ஒரு ஆலையை ஜெயின் நிறுவியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நாக்பூரில் ஒரு ஆலையைத் துவங்க முடிவு செய்துள்ளார்.

ஜெயின் போன்றே நிறுவனத்தின் பிற முக்கிய ஊழியர்களும் மதுபான வர்த்தகத்திற்குப் புதிதானவர்கள் ஆவர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Bira 91 became India's favourite beer in just two years

How Bira 91 became India's favourite beer in just two years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X