வெளிநாட்டில் வசிக்கின்றீர்களா? வெளிநாட்டினருக்கான இந்திய குடியுரிமை வாங்க காலக்கெடு நீட்டிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு இந்திய வம்சாவழியர்களுக்கான பிஐஓ கார்டினை வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் எனப்படும் ஓசிஐ கார்டாக மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடுவினை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தக் கார்டினை மாற்றிப் பெறுவதற்கான கடைசித் தேதி 2017 ஜூன் 30ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலக்கெடு நீட்டிப்பு

கலக்கெடு நீட்டிப்பு

உள்துறை அமைச்சகம் பிஐஓ கர்டினை ஓசிஐ கார்டாக மாற்றிப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை 2017 டிசம்பர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

பிஐஓ கார்டு

பிஐஓ கார்டு

முதன் முறையாகப் பிஐஓ கார்டு 2002-ம் ஆண்டு வெளிநாட்டு வாழ் மக்கள் இந்தியாவுடன் இணைந்து மூன்றாம் தலைமுறை உறவினை இந்திய வம்சாவளியாக வைத்துக்கொள்ளலாம் என்பதற்காக அறிமுகம் செய்தது. பிஐஓ கார்டினை பயன்படுத்திச் சுற்றுலா, வேலை மற்றும் இந்தியாவில் 15 வருடம் வரை வசிப்பதற்கான நன்மைகளைப் பெறலாம்.

ஓசிஐ கார்டு
 

ஓசிஐ கார்டு

ஓசிஐ கார்டு என்பது 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில் பிஐஓ கார்டினை விட அதிக நன்மைகளைப் பெற முடியும், அது மட்டும் இல்லாமல் இதனைப் பயன்படுத்தி ஆயுள் காலம் முழுவதும் இந்தியாவில் இருக்கலாம்.

இணைப்பு

இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014-ம் ஆண்டுப் பிஐஓ மற்றும் ஓசிஐ இரண்டு கார்டுகளையும் இணைத்துக் கூடுதல் நன்மைகளை அளித்தார்.

இதற்கு முன்பு பிஐஓ மற்றும் ஓசிஐ கார்டு என இரண்டு விதமாக இருந்து இந்திய வம்சாவளி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good News For Living Abroad? Deadline To Get Overseas Citizens Of India Card Extended

Good News For Living Abroad? Deadline To Get Overseas Citizens Of India Card Extended
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X