அவசரம் வேண்டாம்.. ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்க ஜூலை 1 கடைசி தேதி இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

ஜூலை 1க்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்காக வருமான வரித் துறை இணையதளத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர் என்று கூறலாம். சில நேரங்களில் இணையதளமே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

பலர் ஜூலை 1-ம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்கவில்லை என்றால் பான் எண் செல்லுபடியாக என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆம், அது உன்மைதான், ஆனால் அது முழுமையாக உண்மை அல்ல.

ஜூலை 1 முதல் ஆதார் இணைப்புக் கட்டாயம் தான் ஆனால் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பது இல்லை.

பான் கார்டு ஒன்றும் தானாகச் செயல் இலக்க போவதில்லை

பான் கார்டு ஒன்றும் தானாகச் செயல் இலக்க போவதில்லை

என்ன புரியவில்லையா? ஜூலை 1ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் உங்கள் பான் கார்டு ஒன்றும் தானாகச் செயல் இலக்க போவதில்லை. பான் கார்டுன் ஆதார் கார்டை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றாலும் பான் கார்டு செல்லுபடியாகாமல் போகக் கடைசித் தேதி இன்னும் முடிவாகவில்லை.

பிரிவு 139AA

பிரிவு 139AA

அப்படியானால் பிரிவு 139AA-ன் படி ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு ஆதார் கர்டினை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு அவ்வளவு தான்.

புதிய பான் கார்டு

புதிய பான் கார்டு

ஜூலை 1க்குள் ஆதார் இணைப்பு என்பது கட்டாயம் என்பது ஒருபுறம் இருக்கப் புதிய பான் கார்டு பெற வேண்டும் என்றால் மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ஆதார் கார்டு கட்டாயம் ஆகும்.

எப்படி இணைப்பது

எப்படி இணைப்பது

வருமான வரித் துறை ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்காக இணையதளத்தில் புதிய சேவையை வழங்கியுள்ளது. நீங்கள் இன்னும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்றால் மேலே தொடரவும்.

இணைப்பு

இணைப்பு

வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ சென்று பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் போன்றவற்றைப் பான் எண், எப்யர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுக் கணக்கு ஒன்றை உருவாக்கவும். ஏற்கனவே கணக்கு இருந்தால் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.

ஆதார் கார்டு தகவலை பதிவேற்றுதல்

ஆதார் கார்டு தகவலை பதிவேற்றுதல்

வருமான வரித் துறை இணையதளத்தில் உள்நுழைந்து கணக்கு அமைப்புகள் டேப் செல்லவும். அங்கு வரும் டிராப் டவுன் மெனுவில் ஆதார் இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும். அப்போது புதிய படிவம் ஒன்று வரும்.

விவரங்கள்

விவரங்கள்

நீங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்றவற்றை உள்ளிட வேண்டும். அடுத்து ஆதார் எண் மற்றும் உங்கள் பெயரை ஆதார் கார்டில் இருப்பது போன்று உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

சரிபார்ப்பு

சரிபார்ப்பு

ஆதார் விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு பான், ஆதார் இணைப்பு வெற்றிகரமாகப் பதிவேற்றப்பட்டதற்கான தகவல் காண்பிக்கப்படும். உறுதி செய்யும் மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

முக்கியக் குறிப்புகள்

முக்கியக் குறிப்புகள்

ஒரு முறை அதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்ட பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்டு உள்ள மொபைல் எண் உதவியுடன் மின்னணு சரிபார்ப்புச் செய்ய முடியும்.

அதே நேரம் ஆதார் மற்றும் பான் கார்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் இணைப்புச் சாத்தியம் ஆகாது.

ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களைத் திருத்தச் சம்மந்தப்பட்ட துறையின் இணையதளத்தை அணுகி சரி செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி படுத்தும் பாடு

ஜிஎஸ்டி படுத்தும் பாடு

ஏழை, நடுத்திர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை ‘ஜிஎஸ்டி' படுத்தும் பாடு..! ஏழை, நடுத்திர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை ‘ஜிஎஸ்டி' படுத்தும் பாடு..!

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

உலகின் 50 ஸ்மார்டெஸ்ட் நிறுவனங்கள் பட்டியலில் ஒரேயொரு இந்திய நிறுவனம்..!
உலகின் 50 ஸ்மார்டெஸ்ட் நிறுவனங்கள் பட்டியலில் ஒரேயொரு இந்திய நிறுவனம்..!

ஊழியர்கள் அதிர்ச்சி

ஊழியர்கள் அதிர்ச்சி

3 மாதங்களுக்கு சம்பள உயர்வு கிடையாது.. காக்னிசென்ட் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!3 மாதங்களுக்கு சம்பள உயர்வு கிடையாது.. காக்னிசென்ட் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

சோகம்

சோகம்

9 வருடமாக சம்பள உயர்வு இல்லை.. இது ரிலையன்ஸ் உயர் அதிகாரியின் சோகம்..!
9 வருடமாக சம்பள உயர்வு இல்லை.. இது ரிலையன்ஸ் உயர் அதிகாரியின் சோகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

July 1 is not the date when your unlinked PAN will become invalid

July 1 is not the date when your unlinked PAN will become invalid
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X