ஒரு பொருளுக்கு இரண்டு எம்ஆர்பி: கடிவாளம் போட்ட மத்திய அரசு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மத்திய அரசு ஒரு பொருளுக்கு இரண்டு எம்ஆர்பி வைத்து வைக்கும் நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. அதனால் இனி லோக்கல் சந்தையில் தண்ணீர் பாட்டில் எவ்வளவு விலையோ அது தான் மால், ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களிலும் ஒரே விலையாக இருக்கும்.

சட்ட அளவியல் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதால் (பேக் செய்யப்பட்ட பொருட்கள்) விதி 2011 வருகின்ற 2018 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். அதற்குள் உற்பத்தி நிறுவனங்கள் இதனை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிவான விவாதங்களுக்குப் பிறகு நுகர்வோர் விவகாரங்கள் துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது?

விதிகளை அமல்படுத்திய அனுபவத்தை வைத்து மற்றும் விரிவான பங்குதார்களுடனான ஆலோசனைக்குப் பிறகு நுகர்வோரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் நிறுவனங்களுக்குத் தேவையான கால அவகாசத்தினைக் கணக்கில் கொண்டும் இந்த விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை கூறியுள்ளது.

இரண்டு விலை இனி இல்லை

புதிய விதிகளின் கீழ் பேக் செய்யப்பட்ட ஒரு பொருளினை எந்த ஒரு சட்டமும் அனுமதி அளிக்காமல் இனி இரண்டு விலையில் விற்க முடியாது. இதனால் நுகர்வோர் பெரிய அளவில் பயன் அடைவார்கள், நீண்ட காலமாகச் சினிமா தியேட்டர், மால், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு எம்ஆர்பி குறித்து வந்து கொண்டு இருந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதி இவர்களுக்கு இல்லையாம்

ரெஸ்டாரண்ட் முதலாளிகள் இது எங்களுக்குப் பொருந்தாது என்றும், நாங்கள் ஜிஎஸ்டி விதிகளைப் பின்பற்றிச் செல்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். இந்தப் புதிய விதி நேரடியாக வாடிக்கையாளர்கள் வாங்கும் போது தான் பொருந்து, நாங்கள் அவர்களது இருக்கையில் அளிக்க வேண்டும் என்றும் தேசிய ரெஸ்டாரண்ட்கள் சங்கத்தின் தலைவர் ராகுல் சிங் தெரிவித்துள்ளார்.

ஒரு பொருள், ஒரே விலை

மத்திய அரசு ஒரு பொருள், ஒரே விலை என்ற விதியைக் கொண்டு வந்த அதே நேரம் எம்ஆர்பி அச்சடிக்கப்படும் எழுத்தின் அளவை வாடிக்கையாளர்கள் எளிதாகப் படிக்கும் அளவிற்கு அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவச் சாதனங்கள்

நுகர்வோர் பாதுகாப்புத் துறை மருத்துவச் சாதனங்களான வால்வுகள், எலும்பியால் உள்விழைகள், ஊசிகளை மற்றும் செயல்பாட்டுக்கான கருவிகளின் செயற்கூறுகள் என அனைத்திலும் எம்ஆர்பி அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

விலையை அறிந்துகொண்டு வாங்குவது உரிமை

வாடிக்கையாளர்களுக்குப் பொருளின் விலையை அறிந்துகொண்டு வாங்குவது என்பது நுகர்வோரின் உரிமை. எனவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருந்துகள் துறை தெரிவித்துள்ளது. இதனைச் சில மருத்துவப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.

யார் இவர்கள்

ஜிஎஸ்டி வந்ததற்கு இவர்கள் தான் காரணம்..!

ஜிஎஸ்டி எதிரொலி

நாளைக்கு இதெல்லாம் நடக்கும்.. ஜஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலி..!

கார், பைக் விலை பட்டியல்

ஜூலை1 முதல் விலை குறையும் கார், பைக்-இன் முழுமையான விலை பட்டியல்.. ஆனால்..?

இம்சை

வியாபாரிகளே..! ‘ஜிஎஸ்டி' இம்சையில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட்டான ஐடியா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

One product, one MRP: Government to disallow differential pricing at airports, malls and cinemas

One product, one MRP: Government to disallow differential pricing at airports, malls and cinemas
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns