ஆம் ஆத்மி பீமா யோஜனா என்றால் என்ன..? அதன் நற்பயன்கள் யாவை..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆம் ஆத்மி பீமா யோஜனா என்பது கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாகும். ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) என்கிற இரண்டு திட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு "ஆம் ஆத்மி பீமா யோஜனா" என்று மறு பெயரிடப்பட்டுள்ளது.

இது 1-1-2013 முதல் அமலில் இருக்கும் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் தலைவர் அல்லது ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரு உறுப்பினர் போன்றவர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

தகுதி

தகுதி

இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் வரவிருக்கும் பிறந்த நாளில் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் அல்லது 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உறுப்பினர் குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தின் (BBL) அல்லது வறுமைக் கோட்டிற்கு சற்றே மேலேயிருக்கும் அடையாளம் காணப்பட்ட வரைமுறையின் கீழுள்ள தொழில்சார் குழு / கிராமப்புற நிலமற்றக் குடும்பமாக இருக்க வேண்டும்.

 

தேவைப்படும் ஆவணங்கள்

தேவைப்படும் ஆவணங்கள்

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தில் இணைவதற்கு வயது சான்றிற்காக நீங்கள் சில ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

குடும்ப அட்டை
பிறப்பு பதிவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வயது சான்று
பள்ளி சான்றிதழிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வயது சான்று
வாக்காளர் பட்டியல்
புகழ்பெற்ற முதலாளி / அரசாங்க துறையினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
ஆதார் அட்டை

காப்பீட்டு முனைமம்

காப்பீட்டு முனைமம்

காப்பீடு செய்யப்பட்ட நபர் காப்பீட்டு முனைமத்திற்கு பணம் செலுத்த தேவையில்லை. ஏனென்றால், ரூ 30,000 உறுதி அளிக்கப்பட்ட காப்பீட்டு வருவாய்க்காக ஒரு நபருக்கு வருடத்திற்கு ரூ 200 ஐ மத்திய அரசும் மாநில அரசும் சமமாக பகிர்ந்து கொண்டு காப்பீடு செய்யப்பட்ட நபரின் பெயரில் செலுத்தி விடுகிறது.

ரூ 30,000 ஐ தவிர்த்து 50% சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படுகிறது

 

50 சதவீத தொகை

50 சதவீத தொகை

கிராமப்புற நிலமற்ற குடும்பங்களுக்கு (RLH) மீதமிருக்கும் 50% காப்பீட்டு முனைமத் தொகையை மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு ஏற்றுக் கொள்கிறது.

மற்ற தொழிற்சார் குழுக்களுக்கு மீதமுள்ள 50% முனைமத் தொகை நோடால் ஏஜென்சி மற்றும் மாநில அரசு / அல்லது உறுப்பினர் மற்றும் யூனியன் பிரதேச அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

 

நற்பயன்கள்

நற்பயன்கள்

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழுள்ள நற்பயன்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

இறப்பு ஏற்பட்டால் கிடைக்கும் பயன்கள்: காப்பீட்டுதாரர் இறந்துவிட்டால் காப்பீட்டுதாரருடைய உயிரோடு இருக்கும் நியமனப்பட்டவர்கள் அல்லது குடும்பத்திற்கு ரூ 30,000 வழங்கப்படும்.

விபத்துக் காரணமாக இறப்பு ஏற்பட்டால் அல்லது விபத்துக் காரணமாக நிரந்தரமாக உடல் பாகங்கள் அல்லது உறுப்புக்களுக்கு முழுமையான செயலிழப்பு ஏற்பட்டால் காப்பீட்டின் உரிமையாளரின் நியமனப்பட்டவர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ 75,000 ஆகும்.

விபத்துக் காரணமாக உடல் பாகங்கள் அல்லது உறுப்புகளுக்கு பகுதியாக நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டால் (ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது காலை இழத்தல்) காப்பீட்டு உரிமையாளரின் நியமனப்பட்டவர்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ 37,500 இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

 

கல்வி உதவித் தொகை பயன்கள்

கல்வி உதவித் தொகை பயன்கள்

அதிகப்பட்சமாக பயனாளரின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கிடையே படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு, ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ 100 வீதம் கூடுதலாக சேர்க்கப்பட்ட பயனாக இலவசக் கல்வி உதவித் தொகையைப் பெறலாம். இது அரை ஆண்டு அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 மற்றும் ஜனவரி 1 அன்று செலுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is Aam Admi Bima Yojana? What Are The Benefits?

What Is Aam Admi Bima Yojana? What Are The Benefits?
Story first published: Wednesday, July 5, 2017, 19:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X