இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பூமியில் மொத்தமாக 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என்று 2015-ம் ஆண்டு வெளிவந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியகம் அறிக்கை கூறுகின்றது, அதுமட்டும் இல்லாமல் 108.2 பில்லியன் மக்கள் பிறக்க இருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

இப்போது நாம் 7.4 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் 100.8 பில்லியன் மக்கள் நமக்கு முன்பு இறந்து உள்ளார்கள். பேஸ்புக் ஒரு நாடாக இருந்து இருந்தால் 1.39 பில்லியன் நபர்களுடன் இது தான் மூன்றாம் மிகப் பெரிய நாடாக இருந்திருக்கும்.

ஆசிய நாடுகளில் தான் 60 சதவீதத்திற்கும் அதிகமான உலக மக்கள் தொகை உள்ளது. 7 வருடத்தில் இந்தியர்களின் மக்கள்தொகை 1.44 பில்லியனை கடக்கும். இதுவே 2025/2030-ம் ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகையினை விட அதிகமாக இருக்கும்.

உலக மக்கள் தொகை தினத்தில், இந்தியாவின் மக்கள்தொகை குறித்த சில உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா vs அமெரிக்கா

அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர், இருப்பினும் உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இது. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி 746 மில்லியன் ஆகும்.

இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 166 மில்லியன் மக்கள்தொகை உள்ளது, இது பிரேசிலில் உள்ள மக்கள் தொகைக்கு இணையதாக, கிட்டத்தட்டச் சமமாக உள்ளது. அதேபோல, ஒரிசாவில் கனடா மற்றும் சட்டிஸ்கர் ஆகியவற்றை விட அதிக மக்கள்தொகை கொண்டிருக்கிறது.

உலகிலேயே மிகவும் மக்கள்தொகை கொண்ட நாடு

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி சீனாவின் மக்கள் தொகையினை முந்தி இந்தியா விரவில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து 2061-ம் ஆண்டு வரை வளர்ச்சி அடையும் என்றும் அதன் மக்கள் தொகை 1678.7 மில்லியனாக அதிகரித்த பிறகு தான் குறையும் என்றும் அதன் பிறகு இந்தியா உலகிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும்.

பாலின விகிதம்

இந்தியாவின் பாலின விகிதத்தில் முன்னேற்றம் காணப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவின் பாலின விகிதம் பிறப்பு விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய இரயில்வே

இந்திய ரயில்வேயில் தினமும் 30 மில்லியன் நபர்கள் பயணம் செய்கின்றனர். இலங்கையின் மொத்த மக்கள் தொகையினை விட இது அதிகமாகும். மும்பையின் புறநகர் ரயில்வேயில் தினமும் 7.5 மில்லியன் நபர்கள் பயணம் செய்கின்றனர், இது கிட்டத்தட்ட பப்புவா நியூ கினியாவின் மொத்த மக்கள் தொகையாகும்.

இந்திய ரயில்வேயில் மொத்தம் 1.4 மில்லியன் பணியார்கள் பணிபுரிகின்றனர். இது மொரீஷியஸ், பஹ்ரின், ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இணையான மக்கள் தொகை ஆகும்.

 

குடிசை வாழ் மக்கள்

2001 ஆம் ஆண்டில் 52 மில்லியனாக இருந்த குடிசை வாழ் மக்கள் தொகை 65 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியனாக உள்ளது. 9.5 மில்லியனாகச் சிறு தொழிலாளர்கள் உள்ளனர்.

பூமியில் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடும் இடம்

100 மில்லியன் பக்தர்கள் அலகாபாத்தில் உள்ள கும்ப மேலாவை சுற்றி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is the polpulation in India? Read this

What is the polpulation in India? Read this
Story first published: Wednesday, July 12, 2017, 11:40 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns