உலகில் அதிக சோம்பேறிகள் உள்ள நாடு இந்தியா..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஓய்வு நேரங்களில் பயணம் செய்ய விரும்பினால் உங்களுக்கு நடந்து செல்ல விருப்பமா அல்லது ஏதேனும் வாகனத்தில் செல்ல விருப்பமா என்று இந்தியர்களிடம் கேட்டால் பலர் தேர்வு செய்வது வாகனத்தில் செல்வது என்று தான் இருக்கும்.

சரி, உலகம் முழுவதில் இருந்தும் 46 நாடுகளில் சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடுகள் எந்த நாடு என்று ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் இந்தியர்கள் 4,297 கால் அடிகள் தான் தினமும் நடக்கின்றனர் என்று 39 வது இடத்தினை அளித்துள்ளனர்.

ஆய்வறிக்கை எப்படித் தயார் செய்யப்பட்டது?

உலகெங்கிலும் உள்ள 46 நாடுகளில் சுமார் 700,000 மக்கள் நடைப்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்ட காலடிகள்-கவுண்டர்களைப் பயன்படுத்தி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

குறைவான சோம்பேறிகள் உள்ள நாடு

சீனாவில் தான் குறைவான அளவில் சோம்பேறிகள் உள்ளதாகவும், அதிலும் குறிப்பாக ஹாங்காங்கில் உள்ளவர்கள் தினமும் சராசரியாக 6,880 காலடிகள் வரை நடந்து பயணம் செய்கின்றனர் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.

அதிகமான சோம்பேறிகள் உள்ள நாடு

சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடுகளில் மிக மோசமான நாடு என்றால் அது இந்தோனேசியா ஆகும். ஆங்கு உள்ளவர்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 3,513 காலடிகள் தான் நடக்கின்றனர்.

உலகளவில் சராசரி எவ்வளவு

உலகளவில் சராசரியாக 4,961 காலடிகள் வரை நடக்கின்றனர், அமெரிக்காவில் சராசரியாக 4,774 படிகள் நடக்கின்றார்கள்.

கிழக்கு ஆசிய நாடுகள்

ஹாங்காங், சீனா, உக்ரைன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தினசரி 6,000 காலடிகளை வரை நடிக்கின்றனர்.

மலேசியா, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா

மலேசியா, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் 3,900 காலடிகள் வரை தினமும் நடக்கின்றனர்.

இந்தியர்கள்

இந்தியாவைப் பொருத்தவரை பெண்களை விட ஆண்கள் அதிகக் காலடிகள் நடக்கின்றனர். இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 3,684 காலடிகளும், ஆண்கள் 4,606 காலடிகள் வரையிலும் தினசரி நடக்கின்றனர்.

சோம்பேறிகளாக இருக்கக் கூடாது

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் நமக்கு அளித்த தகவலின் படி ஒரு நாளைக்கு 10,000 காலடிகள் வரையாவது நடக்க வேண்டும். அப்போது தான் உடல் அமைப்பைக் காக்க சரியாகக் காக்க முடியும் என்கின்றார்.

வளர்ச்சி பாதையினை நோக்கி இந்தியா

வளர்ச்சி பாதையினை நோக்கி வளர இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மக்களும் சோம்பேறிகளாக இருக்காமல் அதிக உடற்பயிற்சியுடன் பிட்டாக இருந்தால் வேகமான முன்னேறலாம் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians are among laziest people in the world

Indians are among laziest people in the world: Stanford study
Story first published: Saturday, July 15, 2017, 8:10 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns