இனி ஆதார் கார்டினை மொபைலிலும் எடுத்து செல்லலாம்.. எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தகட்டமாக எம்-ஆதார் என்ற செயலி ஒன்றை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி அசல் ஆதார் கார்டினை அல்லது நகலினை எப்போதும் கைகளில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

டிஜிட்டல்முறையில் ஆதார் கார்டு விவரங்களான பெயர், பிறந்த நாள், பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி போன்றவற்றினை வைத்துக்கொள்ள இந்த எம்-ஆதார் செயலி உதவும்.

ஆண்டிராய்டு பயனர்கள்

இந்தச் செயலி தற்போதைக்கு ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும், இதற்கான அறிவிப்பை டிவிட்டர் மூலமாக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.

எனினும் பீட்டா வெர்ஷனாகத் தான் இந்தச் செயலி அமலுக்கு வந்துள்ளது. முழுமையான புதுப்பித்தல் வரும் வரை முழுமையான பயன் என்ன என்பது தெரியாது எஙின்றனர் விவரம் அரிந்தவர்கள்.

 

பையோமெட்ரிக் பூட்டு

பையோமெட்ரிக் பூட்டு

உங்களது தனிநபர் விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்தாத படி நிர்வகிக்க இந்தச் செயலியில் பையோமெட்ர்க் பூட்டு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது

இந்தச் செயலியில் உள்ள பையோமெட்ரிக் தரவு பூட்டுச் சேவையினை இயக்கத் துவங்கிவிட்டால் பூட்டைத் திறக்கும் வரை வேறு யாராலும் உங்கள் விவரங்களைப் பெற முடியாது.

 

ஒருமுறை கடவுச் சொல்
 

ஒருமுறை கடவுச் சொல்

அது மட்டும் இல்லாமல் எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஒருமுறை கடவுச் சொல் இல்லாமலும் இந்தச் செயலியின் மூலம் உங்களது ஆதார் விவரங்களை நிர்வகிக்க முடியும்.

புதுப்பிப்பு

புதுப்பிப்பு

பயனர்களால் தங்களது தனிநபர் விவரங்களையும் புதுப்பித்த பிறகு வெற்றிகரமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயம் தேவை. ஒரு வேலை உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மையங்களை அணுகவும். QR-குறியீடு மாற்றும் கடவுச் சொல் பாதுகாக்கப்பட்ட கூடுதல் நன்மைகளை இந்தச் செயலி உங்களுக்கு அளிக்கும்,

 ஆதார் - பான் இணைப்பு

ஆதார் - பான் இணைப்பு

ஜூலை 1 முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டினை வைத்துள்ளவர்களைக் கண்டறிய முடியும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பைச் செய்யப் பல வழிமுறைகளை வருமான வரித் துரை அன்மை காலங்களில் வெளியிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'mAadhaar' App Launched For Android Users. Details Here

'mAadhaar' App Launched For Android Users. Details Here
Story first published: Wednesday, July 19, 2017, 16:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X